Posts

Showing posts from December, 2025

கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணி கொண்ட "கற்றது சமையல்"

Image
 கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணி கொண்ட "கற்றது சமையல்"   கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் - வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் "கற்றது சமையல்" நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.   மண் மனம் மாறாமல் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் காடு, மேடு என வித்தியாசமான இடங்களை தேர்வு செய்து கிராமத்து சமையலை மிக்ஸி, கிரைண்டர்  போன்ற எந்த வித நவீன உபகரணங்களும் இன்றி, இயற்கையாகவே கிடைக்கும் பொருட்களை வைத்து முழுக்க முழுக்க கிராமத்து பாணியில், கைப்பக்குவத்திலேயே சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவை சமைப்பதே இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம்.   இதுவரை நாம் அறிந்திராத பல சுவையான பாரம்பரிய உணவு வகைகளை, அதன் இயற்கை மனம் மற்றும் ருசியுடன் சமைப்பதுடன், தினமும் ஒரு வித்தியாசமான சமையலை நம் கண் முன்னே விருந்தளிக்கும் விதமாக "கற்றது சமையல்" நிகழ்ச்சி உருவாகி வருகிறது.

கேட்டல் திறனுக்கான ஒரு புதிய சகாப்தம்: உட்செவி உட்பொருத்தல் (Cochlear Implant) சிகிச்சைக்கான சிறந்த மையமாக காவேரி மருத்துவமனை ரேடியல் சாலை மேம்படுகிறது

Image
கேட்டல் திறனுக்கான ஒரு புதிய சகாப்தம்: உட்செவி உட்பொருத்தல் (Cochlear Implant) சிகிச்சைக்கான சிறந்த மையமாக காவேரி மருத்துவமனை ரேடியல் சாலை மேம்படுகிறது  பூரண அமைதியாக மட்டுமே இருக்கும் ஓர் உலகைக் கற்பனை செய்யுங்கள். திடீரென, அவ்வுலகில் மாற்றம் ஏற்பட்டு, ஒலியை உணரும் திறன் பெற்று உங்கள் மனதுக்குப் பிரியமானவருடனும், உலகத்துடனும் தொடர்பு ஏற்பட்டால் எப்படியிருக்கும்? அத்தகைய மாற்றத்தைச் சாத்தியமாக்குகிறது ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை. நவீன மருத்துவ முன்னேற்றத்தாலும், மருத்துவர்களின் அர்ப்பணிப்பான நிபுணத்துவத்தாலும், காதுக்குள், உட்செவியில் நுண்கருவி பொருத்தப்பட்டு, பல காலங்களாகப் போராடி வந்த செவிப்புலன் இழப்பில் இருந்து மீட்டு, நம்பிக்கையையும் ஒலியையும் அளிக்கிறது காவேரி மருத்துவமனை. *அதிநவீன தொழில்நுட்பத்துடன் கைகோர்க்கும் நிபுணத்துவப் பராமரிப்பு* மூன்று சிக்கலான உட்செவி உட்பொருத்தல் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்து, ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை. இந்த அறுவை சிகிச்சைகள், ஆழ்ந்த காது கேளாமை கொண்ட ஒரு வளர்ந்த நபரிடமிர...

Apollo Dialysis Clinics & IMA Cuddalore Conduct CME on Kidney Health(CKD) Awareness and Caregiver Guidance

Image
 Cuddalore | 23rd November 2025: Apollo Dialysis Clinics & IMA Cuddalore Conduct CME on Kidney Health(CKD) Awareness and Caregiver Guidance.  Apollo Dialysis Clinics, in association with the Indian Medical Association (IMA) Cuddalore, conducted a Continuing Medical Education (CME) programme focused on Chronic Kidney Disease (CKD) awareness, early detection, skin care, proteinuria, and caregiver guidance. The session was held at IMA Hall, Beach Road, Cuddalore, and saw active participation from over 50+ doctors from the Cuddalore and Puducherry regions. CME Topic “Skin Care, Herbals and Proteinuria – What Every Caregiver Should Know.” Speaker Dr. A. Venkatesh MD (Paediatrics), DM (Nephrology), Post Doctoral Fellowship (Pediatric Nephrology) Dr. Venkatesh emphasized the importance of early diagnosis of renal disease, stating that proteinuria (presence of protein in urine) is one of the earliest indicators of kidney damage. He noted that timely intervention can significantly ...