கலைஞர் தொலைக்காட்சியில் “சமைக்க சுவைக்க - சீசன் 2” – தற்போது இலங்கையில்..!
கலைஞர் தொலைக்காட்சியில் “சமைக்க சுவைக்க - சீசன் 2” – தற்போது இலங்கையில்..! கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் பகல் 12 மணிக்கு “சமைக்க சுவைக்க - சீசன் 2” என்கிற புத்தம்புதிய சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. “சமைக்க சுவைக்க” நிகழ்ச்சியின் முதல் சீசனில்தமிழகத்தின் தனித்துவமான உணவுகள் இடம்பெற்றநிலையில், தற்போது இரண்டாவது சீசனானதுஇலங்கையின் தனித்துவமான உணவுகளை நம் கண் முன்கொண்டு வரும். நிகழ்ச்சிக்காக "கற்றது கையளவு" சமையல் குழுவினர்இலங்கைக்கு நேரில் சென்று அங்குள்ள உணவுகளைருசித்து பின்னர் சமைக்கும் சுவாரஸ்யமான சுற்றுகள்இடம்பெறுகிறது. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு உணவு இருக்கும், ஒவ்வொருஉணவுக்கும் ஒரு சிறப்பு இருக்கும் என்பது போல், இந்தமுறை இலங்கையின் தனித்துவமான உணவுகளைசுவைக்க, “சமைக்க சுவைக்க சீசன் 2” -வை தொடர்ந்துபாருங்கள்.