தைராய்டு புற்றுநோய்க்கு ரோபோ உதவியுடன் தழும்பில்லாத தைராய்டு அகற்றல் சிகிச்சை!
தைராய்டு புற்றுநோய்க்கு ரோபோ உதவியுடன் தழும்பில்லாத தைராய்டு அகற்றல் சிகிச்சை!
இம்மாநிலத்தில் முதன்முறையாக வெற்றிகரமான நிகழ்வு
சென்னை, செப்டம்பர் 10, 2024 – தைராய்டு புற்றுநோய்க்கான சிகிச்சையில் ஒரு அதிரடி நிலைமாற்றமாக தமிழ்நாட்டில் முதன்முறையாக ரோபோ உதவியுடன் தழும்பில்லாத தைராய்டு உறுப்பு அகற்றல் செயல்முறையை அப்போலோ கேன்சர் சென்டர் சென்னையில் வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கிறது. தைராய்டக்டோமி என அழைக்கப்படும் சிகிச்சையானது, தொண்டையில் முன்புறத்தில் அமைந்துள்ள தைராய்டு சுரப்பி முழுவதையும் அல்லது அதில் ஒரு பகுதியை அறுவைசிகிச்சையின் மூலம் அகற்றுவதாகும்.
ரோபோடிக் அசிஸ்டெட் ப்ரெஸ்ட் ஆக்சில்லோ இன்சுப்லேஷன் தைராய்டெக்டோமி (RABIT) நுட்பம்
என்பது கழுத்தில் வெளிப்படையாக தெரியக்கூடிய தழும்பில்லாமல் சிறப்பான அழகியல் தளங்களை வழங்குகிறது. வேகமான மீட்சியையும் மற்றும் குறைவான சிக்கல்களையும் உறுதி செய்வதாக இந்த புதுமையான செயல்முறை இருக்கிறது. மேலும் நோயாளிகளுக்கு சிறப்பான வாழ்க்கை தரத்தை வழங்கி கணிசமான பலன்களை தரும் சிகிச்சையாக இது இருக்கிறது.
இந்தியாவில் தைராய்டு புற்றுநோய் விகிதங்கள் கவலைப்படும் அளவிற்கு அதிகரித்து வருகின்றன. அதுவும் குறிப்பாக 30 ஆண்டுகள் வயதிற்கு குறைவான இளவயது நபர்களிடமும், பெண்களிடமும் இது அதிகமாக காணப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகள் காலஅளவில் தைராய்டு புற்றுநோயின் நேர்வு பெண்களில் 62%-ம் ஆண்களில் 48%-ம் அதிகரித்திருக்கின்றன. தைராய்டு புற்றுநோய்கள், சிகிச்சையின் மூலம் குணப்படுத்தக்கூடியவை. இதில் மிக முக்கியமான சிகிச்சையாக இருப்பது அறுவைசிகிச்சையும் மற்றும் அதைத்தொடர்ந்து வழங்கப்படும் கதிரியக்க அயோடின் சிகிச்சையாகவும் இருக்கின்றன.
ரோபோடிக் தைராய்டக்டோமி என்பது, மிக குறைவான ஊடுருவல் உள்ள ஒரு மருத்துவ செயல்முறை; இதில் கழுத்தில் எவ்வித தழும்புகளையும் உருவாக்காமல் தைராய்டு சுரப்பி நீக்கப்படும். இச்செயல்முறைக்காக அக்குள் பகுதியில் 4 மி.மீட்டருக்கும் அதிகமில்லாத ஒரு சிறிய வெட்டு செய்யப்படும். தழும்பில்லாத இந்த அழகியல் ஆதாயங்கள் இதில் இருப்பதோடு ரோபோடிக் சாதனத்தின் 10 மடங்கு பெரிதாக்குதல் மற்றும் 3D பார்வை திறனானது குரல்வளை நரம்பு மற்றும் பாராதைராய்டு சுரப்பிகளை சிறப்பாக பார்வையிடவும் மற்றும் தக்க வைக்கவும் வகை செய்கிறது. ஆகவே தைராய்டு அகற்றலின் பொதுவான சிக்கல்களாக இருந்துவரும் குரலில் மாற்றம் மற்றும் இரத்தத்தில் இயல்புக்கு மாறாக குறைவான கால்சியம் அளவுகள் போன்றவற்றை குறைக்க முடியும்.
புற்றுநோயிலிருந்து மீண்டிருக்கிற 45 வயதான திருமதி. கலாவதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு அவரது கழுத்தின் முன்புறத்தில் ஒரு வீக்கம் உருவாகியிருப்பது அறியப்பட்டது. செய்யப்பட்ட இமேஜிங் சோதனைகள் அந்த இடத்தில் மட்டும் நோய்பாதிப்பு இருப்பதை காட்டின. பாப்பில்லரி கார்சினோமா தைராய்டு (PTC) என்ற பாதிப்பு இந்நோயாளிக்கு இருப்பதை நோயறிதல் சோதனைகள் உறுதி செய்தன. புறத்தோல் பகுதியில் புற்று பாதிப்பான இது நுண்பை செல் வேறுபாடு இருப்பதற்கான சான்றையும் மற்றும் தனித்துவமான அணுக்கருவிற்கான அம்சங்களையும் இது வெளிப்படுத்தியது.
2023 மார்ச் மாதத்தில் சென்னையிலுள்ள அப்போலோ கேன்சர் சென்டரில் ரோபோடிக் உதவியுடன் முழுமையான தைராய்டு சுரப்பி அகற்றல் இப்பெண்ணிற்கு செய்யப்பட்டது. இந்த வெற்றிகரமான அறுவைசிகிச்சைக்கு பிறகு அடுத்தநாள் அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இப்போது 18 மாதங்கள் கடந்து இருக்கின்ற நிலையில் எவ்வித பாதிப்பும் அல்லது வெளிப்படையான தழும்புகளும் இல்லாமல் இயல்பான வாழ்க்கையை திருமதி. கலாவதி வாழ்ந்து வருகிறார்.
புற்றுநோயை வென்று வாழ்ந்து வருகிற மற்றொரு நபரான 34 வயதான திருமதி. பார்வதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது)-க்கு 2023 ஆகஸ்ட் மாதத்தில் தைராய்டு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. டா வின்சி செயல்தளத்தின் மீது ரோபோடிக் முறையிலான தைராய்டு சுரப்பி அகற்றல் சிகிச்சைமுறையை அவர் தேர்வு செய்தார். இந்த சிகிச்சைமுறையில் அறுவைசிகிச்சைக்கு பிறகு மிக குறைவான அளவே வலி இருப்பதுடன் தழும்புகளற்ற சிறப்பான அழகியல் விளைவுகளும் உறுதி செய்யப்படுகின்றன. விரைவாக குணம் பெறவும் மற்றும் இயல்பான வாழ்க்கையை நடத்தவும் இந்த நவீன செயல்முறை அவருக்கு உதவியிருக்கிறது.
அப்போலோ கேன்சர் சென்டர்ஸ்-ன் அறுவைசிகிச்சை புற்றுநோயியலின் முதுநிலை நிபுணர் டாக்டர். பி வெங்கட் இது குறித்து கூறியதாவது: “ரோபோடிக் அசிஸ்டெட் ப்ரெஸ்ட் ஆக்சிலோ இன்சுப்லேஷன் தைராய்டெக்டோமி (RABBIT) அணுகுமுறை என்பது ரோபோடிக் உதவியுடனான தைராய்டு அறுவைசிகிச்சையில் ஒரு குறிப்பிடத்தக்க மேம்பாடாகும். சிறப்பான அழகியல் விளைவுகளை இது வழங்குகிறது; தீங்கற்ற மற்றும் தீங்கில்லாத கட்டிகள் ஆகிய இரண்டிற்கும் பாதுகாப்பான மற்றும் குறைவான ஊடுருவல் உள்ள செயல்முறையாக இது திகழ்கிறது. கழுத்தில் வடுக்கள், தழும்புகள் இல்லாத ஒரு பாதுகாப்பான செயல்முறையை இது உறுதி செய்கிறது. அளவில் 8 செ.மீ வரை உள்ள தைராய்டு சுரப்பிகளை இந்த வழிமுறையில் அகற்ற முடியும். கழுத்தில் தழும்புகள் இல்லாமல் பாதுகாப்பான செயல்முறையை இது உறுதி செய்கிறது. தைராய்டு புற்றுநோயால் அவதியுறுகிற நோயாளிகளுக்கு அதுவும் குறிப்பாக இப்பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுகிற அதிகரித்து வரும் இளம் தலைமுறையினருக்கு இந்த புரட்சிகர அணுகுமுறை ஒரு உகந்த தீர்வாக இருக்கிறது.”
அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைசஸ் லிமிடெட்-ன் செயலாக்க துணை தலைவர் டாக்டர். பிரீத்தா ரெட்டி, புற்றுநோய் சிகிச்சையில் நிகழ்ந்திருக்கும் இந்த மேம்பாடுகள் குறித்து தனது மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் வெளிப்படுத்தி கூறியதாவது: “அப்போலோ கேன்சர் சென்டர்ஸ்-ல் புற்றுநோயின் எதிர்காலத்தை மேம்பட திருத்தி எழுதுவதில் நாங்கள் எங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நோயாளியும் மிக மேம்பட்ட சிகிச்சையை மட்டுமன்றி அதிக கனிவுள்ள பராமரிப்பையும் பெறுவதை உறுதி செய்வதற்கு தளர்வின்றி செயலாற்றுகின்ற எமது புற்றுநோயியல் சிகிச்சை நிபுணர்கள் புத்தாக்கத்தை முன்னெடுப்பதில் முதன்மை வகிக்கின்றனர். தழும்பில்லாத ரோபோடிக் தைராய்டு சுரப்பி அகற்றல் என்ற புரட்சிகர தொழில்நுட்பங்களை செயல்படுத்துவதன் மூலம் நாங்கள் வெறும் அறுவைசிகிச்சைகளை மட்டும் செய்வதில்லை; நோயாளிகளின் வாழ்க்கையை நேர்த்தியாக மாற்றியமைக்கிறது. இந்த புரட்சிகர அணுகுமுறையை வழங்கும் தமிழ்நாட்டில் முதல் மருத்துவமனையாக நோயாளிகளுக்கான பராமரிப்பில் புதிய தரஅளவுகோல்களை நாங்கள் நிறுவுகிறோம். வேகமாக குணமடையவும், வெளியில் தெரியக்கூடிய தழும்புகளின்றி நம்பிக்கையோடு வாழவும் எமது நோயாளிகளை இப்புதிய அணுகுமுறை அனுமதிக்கிறது. எங்கள் மீது நம்பிக்கை வைத்து சிகிச்சைக்கு வருகிற ஒவ்வொரு நபரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், சிகிச்சை பராமரிப்பை உயர்த்தி வழங்கவும் நாங்கள் கொண்டிருக்கும் பொறுப்புறுதி தொடர்ந்து தளர்வின்றி வலுவாக எப்போதும் இருக்கும்.”
புற்றுநோயை வென்றிருப்பவரான திருமதி. கலாவதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பேசுகையில், “தொடக்கத்தில் இந்த அறுவைசிகிச்சை குறித்து எனக்கு கவலையும், அச்சமும் இருந்தது. சென்னை அப்போலோ கேன்சர் சென்டரின் டாக்டர். வெங்கட் மற்றும் அவரது குழுவினரின் உதவி மற்றும் ஆதரவோடு, எதிர்பார்த்ததைவிட இந்த சிகிச்சை பயணம் எளிதானதாக இருந்தது. தழும்பில்லாத, ரோபோடிக் முறையிலான தைராய்டு அகற்றல் முறையை தேர்வு செய்ததற்கு பிறகு எவ்வித தழும்பும், வடுவுமின்றி சிறப்பான அழகியல் ஆதாயங்களோடு வேகமாக நான் பாதிப்பிலிருந்து மீண்டு குணமடைந்தேன். இம்மருத்துவ நிபுணர்களது நிபுணத்துவமும் மற்றும் கனிவான பராமரிப்பும் உண்மையிலேயே அற்புதமானவை. எனது வாழ்க்கையில் இரண்டாவது அத்தியாயத்தை தொடங்க வழிவகுத்திருக்கிற இவர்களுக்கு என்றும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்” என்று கூறினார்.
சென்னை அப்போலோ கேன்சர் சென்டரில் செயல்படுத்தப்படும் ஒரு புத்தாக்க அணுகுமுறையான இருதரப்பு ஆக்சில்லோ-மார்பக அணுகுமுறை (BABA), தைராய்டு புற்றுநோய் சிகிச்சைக்கு ஒரு புதிய தரஅளவுகோலை நிர்ணயிக்கிறது. நோயாளிகளின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் கூடுதலாக, அவர்களது உணர்வு ரீதியான மற்றும் அழகியல் ரீதியான விருப்பங்களுக்கும் முன்னுரிமையளிக்கும் ஒரு புரட்சிகர அணுகுமுறையாக இது இருக்கிறது.
#புற்றுநோயை வெல்வோம்
அப்போலோ கேன்சர் சென்டர்கள் குறித்து – https:// apollocancercentres.com/
புற்றுநோய் சிகிச்சையில் செழுமையான பாரம்பரியம்: 30 ஆண்டுகளுக்கும் மேலாக, மக்களுக்கான நம்பிக்கை வெளிச்சம்.
இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை என்பது, 360-டிகிரி முழுமையான சிகிச்சைப் பராமரிப்பையே குறிக்கிறது. இதற்கு புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கும் மருத்துவ நிபுணர்களின் அர்ப்பணிப்பும், நிபுணத்துவமும் மற்றும் தளராத மனஉறுதியும், ஆர்வமும் அவசியமாகும்.
உயர்நிலையிலான துல்லியமான புற்றுநோயியல் சிகிச்சை வழங்கப்படுவதை கவனமுடன் கண்காணிக்க இந்தியாவெங்கிலும் 365-க்கும் அதிகமான மருத்துவர்களுடன் அப்போலோ கேன்சர் சென்டர்கள் இயங்கி வருகின்றன. திறன்மிக்க புற்றுநோய் மேலாண்மை குழுக்களின் கீழ் உறுப்பு அடிப்படையிலான செயல் நடைமுறையைப் பின்பற்றி, உலகத்தரத்தில் புற்றுநோய் சிகிச்சையை எமது மருத்துவர்கள் வழங்குகின்றனர். சர்வதேசத் தரத்தில் சிகிச்சை பலன்களைத்
தொடர்ந்து நிலையாக வழங்கியிருக்கின்ற ஒரு சூழலில் நோயாளிகளுக்கு மிகச்சிறந்த சிகிச்சையை வழங்குவதில் இது எங்களுக்கு உதவுகிறது.
இன்றைக்கு அப்போலோ கேன்சர் சென்டர்களில் புற்றுநோய் சிகிச்சைக்காக 147 நாடுகளிலிருந்து மக்கள் இந்தியாவிற்கு வருகின்றனர். அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் தெற்காசியா மற்றும்
மத்திய கிழக்கின் முதல் மற்றும் ஒரே பென்சில் பீம் புரோட்டான் சிகிச்சை மையமாகும்.
மேலதிக தகவல்களுக்கு அல்லது ஊடக விசாரணைகளுக்கு தொடர்புகொள்க: MSL
நந்தகோபால் | nanda.gopal@mslgroup.com | 9176218089
A Game Changer: Tamil Nadu Witnesses States First Successful and
A Scar less Robotic Thyroidectomy Treatment for Thyroid Cancers
Chennai, September 10th, 2024 Apollo Cancer Centre (ACC) in Chennai, has successfully performed Tamil Nadu's First Scar less Robotic Thyroidectomy--a game changer in thyroid cancer treatment. Thyroidectomy is a surgical removal of all or part of the thyroid gland, which is located in the front of the neck.
For benign enlarged thyroid glands as well as malignant cases, this form of Thyroidectomy is a safe and well-designed procedure
Thyroid glands up to 8 cm can be removed safely without any neck scar.
Robotic Assisted Breast Axillo Insufflation Thyroidectomy (RABIT) technique provides remarkable cosmetic benefits with no visible neck scar. This innovative procedure ensures speedy recovery and less complications. It marks a significant advancement and provides excellent quality of life to the patients.
Thyroid cancer rates in India have seen a concerning increase, particularly among women and younger individuals who are under 30 years of age. Over the past decade, the incidence of thyroid cancer has surged by 62% in women and 48% in men. Thyroid cancers are highly treatable, and the most important treatment is surgery followed by radioactive iodine therapy.
Robotic thyroidectomy is a minimally invasive procedure where the thyroid gland is removed without leaving any scars on the neck. A tiny cut measuring not more than 4 mm is made in the underarm for the procedure. Apart from the cosmetic benefits, the 10x magnification and 3D vision of the robotic system, allow better visualization and preservation of the recurrent laryngeal nerve and parathyroid glands. Hence, the most common complications of thyroidectomy, such as change in voice and hypocalcemia (abnormally low calcium levels in the blood) can be minimized.
Mrs. Kalavathy (name changed), a 45-year-old cancer winner, reported to have swelling in the front of her neck. Imaging revealed a localized disease, and diagnostic tests verified that the patient had PTC (papillary carcinoma thyroid--is an epithelial malignancy showing evidence of follicular cell differentiation and distinctive nuclear features).
She underwent a robotic total thyroidectomy at Apollo Cancer Centre, Chennai, in March 2023. After a successful surgery, she was discharged the following day. After 18 months, Mrs. Kalavathy is living a normal live with no visible scars.
Another cancer winner, Mrs. Parvathy (name changed), 34, was diagnosed with papillary carcinoma thyroid in August 2023. She opted for robotic thyroidectomy on the da Vinci platform, resulting in superior cosmetic outcomes and minimal postoperative pain. The procedure has enabled her to recover quickly and lead a normal life.
Dr P Venkat, Senior Consultant, Surgical Oncology, Apollo Cancer Centres, said, “Robotic Assisted Breast Axillo Insufflation Thyroidectomy (RABIT) approach is a significant advancement in robotic thyroid surgery. It offers superior cosmetic results, and a safe and minimally invasive procedure for both malignant and benign cases. This method can remove thyroid glands up to 8cm in size. It ensures safe procedures without neck scars. This transformational approach is an ideal choice for patients suffering from thyroid cancers, especially, for the growing young population who are being diagnosed with this condition.”
Encouraged by the advancement in cancer care, Dr. Preetha Reddy, Executive Vice Chairperson, Apollo Hospitals Enterprise Limited, said, At Apollo Cancer Centres, we are committed to rewriting the future of cancer care. Our oncologists are leading the charge in innovation, tirelessly pushing boundaries to ensure every patient receives not only the most advanced treatment but also the most compassionate care. With the adoption of path-breaking technologies like scar less robotic thyroidectomy, we are not just performing surgeries we are transforming lives. As the first in Tamil Nadu to offer this revolutionary approach, we are setting new benchmarks in patient care, allowing our patients to heal faster, live confidently, and thrive without visible scars. This is our unwavering commitment: to elevate the standard of care and improve the quality of life for every individual who entrusts us with their health.
Mrs. Kalavathy (name changed), the cancer winner, said, Initially, I was apprehensive about surgery. With the help and support of Dr Venkat and the team at Apollo Cancer Centre, Chennai, my journey was smoother than expected. After opting for the scar less robotic thyroidectomy, I had a quick recovery, along with cosmetic benefits without visible scars. Their expertise and care have truly been life-changing, and I am eternally grateful for this second lease on life.
Bilateral Axillo-Breast Approach, an innovative approach executed at ACC, Chennai, sets a new benchmark for thyroid cancer treatment that prioritizes patients' emotional and cosmetic well-being in addition to their medical needs.
#WinningOverCancer
About Apollo Cancer Centre https://apollocancercentres.com/
THE CANCER CARE LEGACY: BREATHING HOPE INTO LIVES FOR OVER 40 YEARS
Cancer care today means 360-degree comprehensive care, which requires commitment, expertise, and an indomitable spirit from cancer specialists.
Apollo Cancer Centre has a network across India with over 365 oncologists to oversee the delivery of high-end precision Oncology Therapy. Our oncologists deliver world-class cancer care following an organ-based practice under competent Cancer Management Teams. This helps us in delivering exemplary treatment to the patient in an environment that has consistently delivered an international standard of clinical outcomes.
Today, people from 147 countries come to India for cancer treatment at Apollo Cancer Centre. With the first and only Pencil Beam Proton Therapy Centre in South Asia & Middle East, Apollo Cancer Centre.
For media inquiries or further information, please contact: MSL
Nandagopal | nanda.gopal@mslgroup.com | 9176218089
Comments
Post a Comment