Apollo Children's Hospital Pioneers Non-Surgical Fontan Procedure, Revolutionizing Pediatric Heart Treatment
Apollo Children's Hospital Pioneers Non-Surgical Fontan Procedure, Revolutionizing Pediatric Heart Treatment
* World-First Achievement Offers New Hope for Children with Complex Cardiac Conditions*
Chennai, 27th August, 2024: Apollo Children's Hospital has marked a groundbreaking milestone in pediatric cardiac care by successfully performing the Fontan procedure without surgical intervention. This achievement, led by Dr. Neville AG Solomon, Head of the Cardiac Department, and Dr. CS Muthukumaran, Head of Interventional Cardiology, represents a significant leap forward in treating complex heart conditions in children.
With a track record of over 6,500 open-heart surgeries and 10,133 interventional procedures, Apollo Children's Hospital has established itself as a leader in pediatric cardiac care. The hospital's Interventional Cardiology Division, under Dr. Muthukumaran's guidance, has become India's largest center for advanced procedures such as ductal stenting in infants as small as 1.2 kg and VSD device closures for babies weighing just 4 kg.
Dr. Neville AG Solomon, Paediatric Cardiac Surgeon, Apollo Children's Hospital said, "Our holistic approach at Apollo Children's Hospital combines surgical and interventional expertise to provide optimal treatment for children with complex heart conditions. This non-surgical Fontan procedure exemplifies our commitment to innovative, patient-centered car"
Dr. CS Muthukumaran, Paediatric Cardiologist, Apollo Children's Hospital said, "This breakthrough offers a lifeline for children with single-ventricle heart defects. Patients can now be discharged within 2-3 days, dramatically reducing recovery time. The success of this procedure is a testament to our team's dedication and meticulous planning. so far we completed 12 non-surgical fontan procedure with 100% success and the longest follow-up is 2 years."
Apollo Children's Hospital Chennai continues to advance pediatric cardiac care through its blend of cutting-edge technology and expert medical professionals. The successful implementation of the non-surgical Fontan procedure marks a new chapter in cardiac care for children worldwide.
அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையின் முன்னோடித்துவமிக்க அறுவைசிகிச்சை அல்லாத ஃபோன்டன் மருத்துவ நடைமுறை, குழந்தைகளுக்கான இதய சிகிச்சையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது!
உலகின் முதல் சாதனையாக திகழும் இந்த மருத்துவ நடைமுறை சிக்கலான இதய நோய்கள் உள்ள குழந்தைகளுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கிறது.
சென்னை, 27 ஆகஸ்ட் 2024: அப்போலோ குழந்தைகள் நல மருத்துவமனை [Apollo Children's Hospital] அறுவை சிகிச்சை இல்லாமல் மேற்கொள்ளும் ஃபோன்டன் மருத்துவ நடைமுறையை [Fontan procedure without surgical intervention] வெற்றிகரமாக செய்திருப்பதன் மூலம் குழந்தைகளுக்கான இருதய சிகிச்சையில் [pediatric cardiac care] ஒரு புதிய மைல்கல் சாதனையைப் படைத்திருக்கிறது. இதய நோய் துறையின் தலைவர் டாக்டர் நெவில்லே ஏஜி சாலமன் [Dr. Neville AG Solomon, Head of the Cardiac Department] மற்றும் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி பிரிவின் தலைவர் டாக்டர் சி.எஸ். முத்துகுமரன் [Dr. CS Muthukumaran, Head of Interventional Cardiology] தலைமையிலான மருத்துவ குழு இந்த சாதனையை படைத்திருக்கிறது. இந்த மருத்துவ நடைமுறை, குழந்தைகளுக்கு இருக்கும் சிக்கலான இதய பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
6,500-க்கும் மேற்பட்ட திறந்த இதய அறுவை சிகிச்சைகள் மற்றும் 10,133 குறைந்தபட்ச ஊடுருவும் மருத்துவ நடைமுறைகளை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கும் சாதனையுடன், அப்போலோ குழந்தைகள் நல மருத்துவமனை குழந்தைகளுக்கான இதய பராமரிப்பில் முன்னணி வகிக்கிறது. அப்போலோ மருத்துவமனையின் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி பிரிவைச் [Interventional Cardiology Division] சேர்ந்த, டாக்டர். முத்துக்குமரனின் வழிகாட்டுதலின் கீழ், 1.2 கிலோ எடையுள்ள குழந்தைகளுக்கு டக்டல் ஸ்டென்டிங் [ductal stenting] மற்றும் வெறும் 4 கிலோ எடையுள்ள குழந்தைகளுக்கு விஎஸ்டி டிவைஸ் க்ளோஸ்சர் [VSD device closures] போன்ற மேம்பட்ட நடைமுறைகளுக்கான இந்தியாவின் மிகப்பெரிய மையமாக அப்போலோ மருத்துவமனை மாறியுள்ளது.
அப்போலோ குழந்தைகள் நல மருத்துவமனையின் குழந்தை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நெவில்லே ஏஜி சாலமன் [Dr. Neville AG Solomon, Paediatric Cardiac Surgeon, Apollo Children's Hospital] கூறுகையில், "அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் இதய பராமரிப்பு தொடர்பான முழுமையான அணுகுமுறையில், அறுவை சிகிச்சை மற்றும் குறைந்தபட்ச ஊடுருவும் சிகிச்சை நிபுணத்துவத்தை இணைத்து சிக்கலான இதய நிலைகளைக் கொண்ட குழந்தைகளுக்கு உகந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. அறுவைசிகிச்சை அல்லாத ஃபோன்டன் மருத்துவ நடைமுறையானது [non-surgical Fontan procedure] புதுமையான, நோயாளியை மையமாகக் கொண்ட பராமரிப்பு மற்றும் புதுமையான சிகிச்சையை வழங்கவேண்டுமென நாங்கள் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாக அமைந்திருக்கிறது.
அப்போலோ குழந்தைகள் நல மருத்துவமனையின் குழந்தைகள் இருதயநோய் நிபுணர் டாக்டர். சி.எஸ்.முத்துக்குமரன் [Dr. CS Muthukumaran, Paediatric Cardiologist, Apollo Children's Hospital] கூறுகையில், "சிங்கிள் வென்ட்ரிக்கிள் இதய குறைபாடுகள் [single-ventricle heart defects] உள்ள குழந்தைகளுக்கு, இந்த நவீன ஃபோன்டன் மருத்துவ நடைமுறை உயிர் காக்கும் வாய்ப்பினை வழங்குகிறது. மேலும் நோயாளிகள் இப்போது 2-3 நாட்களுக்குள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள், இதனால் அவர்கள் குணமடையும் காலம் வெகுவாக குறைந்திருக்கிறது. இந்த நடைமுறையின் வெற்றி எங்கள் மருத்துவர்கள் குழுவின் மகத்தான அர்ப்பணிப்பு மற்றும் துல்லியமான திட்டமிடலுக்கு மிகப்பெரும் சான்றகும். இதுவரையில் 12 அறுவைசிகிச்சை அல்லாத ஃபோன்டான் மருத்துவ நடைமுறைகளை 100% வெற்றிகரமாக முடித்துள்ளோம், மேலும் சிகிச்சைக்குப் பிறகான பராமரிப்பானது 2 ஆண்டுகள் தொடரும் நீண்ட காலம் தொடர்ந்து கண்காணிப்படுகிறது’’ என்றார்.
சென்னை அப்போலோ குழந்தைகள் நல மருத்துவமனை தனது அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவமிக்க மருத்துவ நிபுணர்கள் குழு என இரண்டும் இணைந்த மிகச் சரியான அணுகுமுறையின் மூலம் மூலம் குழந்தைகளுக்கான இதய பராமரிப்பை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. அறுவைசிகிச்சை அல்லாத ஃபோன்டன் மருத்துவ நடைமுறையை வெற்றிகரமாக செயல்படுத்துவது, உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கான இதய பராமரிப்பில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிப்பிடுவதாக அமைந்திருக்கிறது.
அப்போலோ மருத்துவமனை பற்றி:
1983 -ல் டாக்டர் பிரதாப் சி ரெட்டி சென்னையில் இந்தியாவிலேயே முதல் முறையாக மிகப் பெரிய கார்ப்பரேட் மருத்துவமனையைத் தொடங்கியதன் மூலம் ஒரு முன்னோடி முயற்சியை மேற்கொண்டார். அப்போது இந்தியாவில் அப்போலோ ஒரு மிகப் பெரிய மருத்துவப் புரட்சியை ஏற்படுத்தியது. இன்று ஆசியாவிலேயே மிகவும் நம்பகமான ஒருங்கிணைந்த மருத்துவ நல குழுமமாக திகழும் அதில், உலகம் முழுவதும் 12 ஆயிரத்திற்கும் அதிகமான படுக்கை வசதிகளுடன், 72 மருத்துவமனைகள், சுமார் 5000 மருந்தகங்கள், 400-க்கும் அதிகமான கிளினிக்குகள், 1228 மருத்துவ பரிசோதனை மையங்கள், 700-க்கும் அதிகமான டெலி மெடிசின் மையங்கள், 15-க்கும் மேற்பட்ட மருத்துவ கல்வி மையங்கள் மற்றும் உலகளாவிய மருத்துவ பரிசோதனைகளுடன் கூடிய ஆராய்ச்சி அறக்கட்டளை என உலகின் மிகப் பெரிய ஒருங்கிணைந்த மருத்துவ சேவை வழங்கும் நிறுவனமாக அப்போலோ உள்ளது. தென்கிழக்கு ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னையில் முதல் புரோட்டான் சிகிச்சை மையத்தை நிறுவுவதற்காக அண்மையில் முதலீடு செய்துள்ளது.
ஒவ்வொரு நான்கு நாட்களுக்கும், ஒரு மில்லியன் பேருக்கு அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் சிகிச்சை அளிக்கிறது. ஒவ்வொரு தனிநபருக்கும் உலகத் தரத்திலான சிகிச்சையை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் அதன் பங்களிப்பை கெளரவிக்கும் விதமாக சிறப்பு தபால் தலையை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 2010-ல் அப்போலோ மருத்துவமனைகள் தலைவர், டாக்டர் பிரதாப். .சி. ரெட்டிக்கு பத்மவிபூஷன் விருது வழங்கி கெளரவித்தது.
கடந்த 40 ஆண்டுகளாக, மருத்துவ ஆராய்ச்சிகள், சர்வ தேசத் தரத்திலான மருத்துவ சேவைகள், அதி நவீன தொழில் நுட்பம் ஆகியவற்றில் அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் தொடர்ந்து சிறந்து விளங்குவதுடன் தனது தலைமைத்துவத்தை தொடர்ந்து பேணி வருகிறது. மருத்துவ சேவைகளுக்காக நாட்டில் சிறந்து விளங்கும் மருத்துவமனைகளில் தொடர்ந்து தர வரிசையில் அதன் மருத்துவமனைகள் முன்னணியில் இருந்து வருகின்றன.
For more information, please contact:
APOLLO HOSPITALS I Suganthy S 9841714433
ADFACTORS PR| Timothy J 9962629240 I Shiva Shankara Shripathi J 8428537322
Comments
Post a Comment