28.10.2024 2024 செப்டம்பர் 30 அன்று முடிவடைந்த காலாண்டு / அரையாண்டுக்கான நிதிசார் முடிவுகள் இந்தியன் வங்கியின் உலகளாவிய வணிகம், முந்தைய ஆண்டைவிட 10% உயர்ந்து ₹12.44 லட்சம் கோடியை எட்டியிருக்கிறது
28.10.2024
2024 செப்டம்பர் 30 அன்று முடிவடைந்த காலாண்டு / அரையாண்டுக்கான நிதிசார் முடிவுகள்
இந்தியன் வங்கியின் உலகளாவிய வணிகம், முந்தைய ஆண்டைவிட 10% உயர்ந்து ₹12.44 லட்சம் கோடியை எட்டியிருக்கிறது
முக்கிய சிறப்பம்சங்கள்
(செப்டம்பர்’23 மற்றும் செப்டம்பர்’24-ல் முடிவடைந்த காலாண்டுகளில் செயல்பாட்டின் மீதான ஒப்பீடு)
· நிகர இலாபம் செப்டம்பர்’23-ல் ₹1988 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’24-ல் ₹2707 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 36% உயர்ந்திருக்கிறது
· செயல்பாட்டு இலாபம் செப்டம்பர்’23-ல் ₹4303 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’24-ல் ₹4728 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 10% அதிகரித்திருக்கிறது
· நிகர வட்டி வருவாய் செப்டம்பர்’23-ல் ₹5741 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’24-ல் ₹6194 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 8% அதிகரித்திருக்கிறது
· கட்டணம் சார்ந்த வருவாய், செப்டம்பர்’23-ல் பதிவான ₹805 கோடியைவிட 11% அதிகரித்து செப்டம்பர்’24-ல் ₹891 கோடி என உயர்ந்திருக்கிறது
· சொத்துக்கள் மீதான இலாபமீட்டல் நிலை (RoA) செப்டம்பர்’23-ல் 1.06% என்பதிலிருந்து 27 bps அதிகரித்து செப்டம்பர்’24-ல் 1.33% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது
· பங்குகள் மீதான இலாபமீட்டல் நிலை (RoE) செப்டம்பர்’23-ல் இருந்த 19.90% என்பதிலிருந்து செப்டம்பர்’24-ல் 114 bps மேம்பட்டு 21.04% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது
· கடன்கள் மீதான ஈட்டம் (YoA) செப்டம்பர்’23-ல் 8.75% என்பதிலிருந்து 2 bps உயர்ந்து செப்டம்பர்’24-ல் 8.77% ஆக அதிகரித்திருக்கிறது
· முதலீடுகள் மீதான ஈட்டம் (YoI), செப்டம்பர்’23-ல் இருந்த 6.77% என்பதிலிருந்து 40 bps உயர்வுடன் 7.17% ஆக செப்டம்பர்’24-ல் பதிவாகியிருக்கிறது
· மொத்த கடன்கள், செப்டம்பர்’23-ல் பதிவான ₹492288 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’24-ல் 12% வளர்ச்சி பெற்று ₹550644 கோடியாக அதிகரித்திருக்கிறது
· RAM துறைக்கு (ரீடெய்ல், விவசாயம் மற்றும் MSME) வழங்கப்பட்ட கடன்கள் செப்டம்பர்’23-ல் ₹285891 கோடி என்ற அளவிலிருந்து செப்டம்பர்’24-ல் ₹325050 கோடியாக உயர்ந்து 14% வளர்ச்சியை பதிவுசெய்திருக்கிறது
· மொத்த உள்நாட்டு கடன்களுக்கு RAM-ன் பங்களிப்பு 63% ஆக இருக்கிறது. ரீடெய்ல், விவசாயம், MSME (RAM) ஆகிய பிரிவுகளுக்கான கடன்கள் முந்தைய ஆண்டைவிட முறையே 15%, 16% மற்றும் 8% என அதிகரித்திருக்கின்றன. முந்தைய ஆண்டைவிட வீட்டுக்கடன் (அடமானம் உட்பட) 14% என செப்டம்பர்’24-ல் அதிகரித்திருக்கின்றன
· ஒழுங்குமுறை தேவைப்பாடான 40%-க்கு எதிராக ANBC-யின் ஒரு சதவீதமாக 44% பதிவுடன் முன்னுரிமை துறைக்கான கடன்கள் ₹188348 கோடி என பதிவாகியிருக்கிறது
· மொத்த டெபாசிட்கள் முந்தைய ஆண்டைவிட 8% வளர்ச்சி கண்டு செப்டம்பர்’24-ல் ₹693115 கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது. முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் நடப்பு கணக்கு, சேமிப்பு கணக்கு மற்றும் CASA டெபாசிட்கள் முறையே 8%, 4% மற்றும் 5% என அதிகரித்திருக்கிறது
· 30 செப்டம்பர்’24 அன்று உள்நாட்டு CASA விகிதம் 40.47% என பதிவாகியிருக்கிறது
· 30 செப்டம்பர்’24 அன்று CD விகிதம் 79% என பதிவாகியிருக்கிறது
· GNPA (மொத்த வாராக்கடன்கள்) செப்டம்பர்’23-ல் இருந்த 4.97% லிருந்து முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் 149 bps குறைந்து 3.48% ஆக பதிவாகியிருக்கிறது. NNPA (நிகர வாராக்கடன்கள்) செப்டம்பர்’23-ல் இருந்த 0.60% லிருந்து செப்டம்பர்’24-ல் 33 bps குறைந்து 0.27 % ஆக பதிவாகியிருக்கிறது
· வாரா ஐயக்கடன்களுக்கான (PCR) நிதி ஒதுக்கீட்டு விகிதம் (TWO - தொழில்நுட்ப கடன் தள்ளுபடி உட்பட, PCR), செப்டம்பர்’23-ல் இருந்த 95.64% லிருந்து செப்டம்பர்’24-ல் 196 bps அதிகரித்து 97.60% ஆக பதிவாகியிருக்கிறது
· நழுவல் விகிதம், செப்டம்பர்’23-ல் 1.77% ஆக இருந்ததுடன் ஒப்பிடுகையில் செப்டம்பர்’24-ல் 1.06% ஆக கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது
· மூலதன போதுமான நிலை விகிதம் 102 bps முன்னேற்றம் கண்டு 16.55% உயர்ந்திருக்கிறது. CET-I, முந்தைய ஆண்டிலிருந்து 144 bps உயர்ந்து 13.51% ஆகவும் & அடுக்கு I மூலதனம் 138 bps முன்னேற்றத்துடன் செப்டம்பர்’24-ல் 14.01% என்ற அளவிலும் பதிவாகியிருக்கின்றன
· ஒரு பங்கிற்கான ஈட்டம், செப்டம்பர்’23-ல் இருந்த ₹63.84 என்பதிலிருந்து செப்டம்பர்’24-ல் ₹80.37 ஆக உயர்ந்திருக்கிறது
முக்கிய சிறப்பம்சங்கள்
(செப்டம்பர்’24 மற்றும் ஜுன்’24-ல் முடிவடைந்த காலாண்டுகளில் செயல்பாட்டின் மீதான ஒப்பீடு)
· நிகர இலாபம் ஜுன்’24-ல் பதிவான ₹2403 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’24-ல் ₹2707 கோடியாக, முந்தைய காலாண்டைவிட 13% உயர்ந்திருக்கிறது
· செயல்பாட்டு இலாபம் ஜுன்’24-ல் ₹4502 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’24-ல் ₹4728 கோடியாக, முந்தைய காலாண்டைவிட 5% உயர்ந்திருக்கிறது
· சொத்துக்கள் மீதான இலாபமீட்டல் நிலை (RoA), ஜுன்’24-ல் இருந்த 1.20% லிருந்து 13 bps உயர்ந்து செப்டம்பர்’24-ல் 1.33% என முன்னேற்றம் கண்டிருக்கிறது
· கடன்கள் மீதான ஈட்டம் (YoA) ஜுன்’24-ல் இருந்த 8.69% என்பதிலிருந்து 8 bps உயர்ந்து செப்டம்பர்’24-ல் 8.77% ஆக அதிகரித்திருக்கிறது
· முதலீடுகள் மீதான ஈட்டம் (YoI), ஜுன்’24-ல் இருந்த 7.15% என்பதிலிருந்து 7.17% ஆக செப்டம்பர்’24-ல் பதிவாகியிருக்கிறது
· GNPA (மொத்த வாராக்கடன்கள்) ஜுன்’24-ல் இருந்த 3.77% லிருந்து 29 bps குறைந்து 3.48% ஆக பதிவாகியிருக்கிறது. NNPA (நிகர வாராக்கடன்கள்) ஜுன்’24-ல் இருந்த 0.39% லிருந்து செப்டம்பர்’24-ல் 12 bps குறைந்து 0.27% ஆக பதிவாகியிருக்கிறது
· பங்குகள் மீதான இலாபமீட்டல் நிலை (RoE) ஜுன்’24-ல் இருந்த 19.76% என்பதிலிருந்து செப்டம்பர்’24-ல் 128 bps மேம்பட்டு 21.04% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது
முக்கிய சிறப்பம்சங்கள்
(செப்டம்பர்’23 மற்றும் செப்டம்பர்’24-ல் முடிவடைந்த அரையாண்டுகளில் செயல்பாட்டின் மீதான ஒப்பீடு)
· நிகர இலாபம் H1FY24-ல் (நிதியாண்டு 24-ன் முதல் அரையாண்டில்) பதிவான ₹3697 கோடியிலிருந்து H1FY25-ல் ₹5110 கோடியாக, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 38% உயர்ந்திருக்கிறது
· செயல்பாட்டு இலாபம் H1FY24-ல் ₹8437 கோடி என்பதிலிருந்து H1FY25-ல் ₹9230 கோடியாக, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் H1FY25-ல் 9% உயர்ந்திருக்கிறது
· நிகர வட்டி வருவாய் H1FY24-ல் ₹11444 கோடி என்பதிலிருந்து H1FY25-ல் ₹12372 கோடியாக, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் H1FY25-ல் 8% உயர்ந்திருக்கிறது
· உள்நாட்டளவில் நிகர வட்டி வருவாய் (NIM), H1FY25-ல் ₹3.51% ஆக இருக்கிறது.
· சொத்துக்கள் மீதான இலாபமீட்டல் நிலை (RoA) H1FY24-ன் 1.01% லிருந்து 25 bps உயர்ந்து 1.26% என முன்னேற்றம் கண்டிருக்கிறது
· பங்குகள் மீதான இலாபமீட்டல் நிலை (RoE) H1FY24-ன் 18.90% லிருந்து 148 bps உயர்ந்து, 20.38% என முன்னேற்றம் கண்டிருக்கிறது
· வருவாய்க்கான செலவு விகிதம் H1FY25-ல் 44.73% ஆக இருக்கிறது
வாடிக்கையாளர் தொடர்பு மையங்கள்:
· இவ்வங்கி, (3 டிஜிட்டல் பேங்கிங் யூனிட்டுகள் (DBUs) உட்பட) உள்நாட்டில் 5856 கிளைகளைக் கொண்டிருக்கிறது; இக்கிளைகளுள் 1983 கிராமப்புறங்களிலும், 1532 சிறு நகரங்களிலும், 1174 நகர்ப்புறங்களிலும் மற்றும் 1167 பெருநகரங்களிலும் செயல்படுகின்றன. இவ்வங்கிக்கு 3 வெளிநாட்டு கிளைகளும் மற்றும் ஒரு IBU-யும் (கிஃப்ட் சிட்டி கிளை) இருக்கிறது.
· இவ்வங்கி, 5217 ஏடிஎம்கள் மற்றும் பிஎன்ஏ-களையும் மற்றும் 12993 பிசினஸ் முகவர்களையும் (BCs) கொண்டு செயலாற்றுகிறது.
டிஜிட்டல் வங்கிச்சேவை:
· H1FY25-ல் டிஜிட்டல் சேனல்கள் வழியாக ₹79,059 கோடி பிசினஸ் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதுவரை மொத்தத்தில் 102 டிஜிட்டல் பயணங்கள், பயன்பாடுகள் மற்றும் செயல்முறைகள் அறிமுகம் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டிருக்கின்றன.
· மொபைல் பேங்கிங் சேவையின் பயனாளிகள் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட 20% உயர்ந்து 1.81 கோடி என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.
· UPI பயனாளிகள் மற்றும் நெட் பேங்கிங் பயனாளிகளின் எண்ணிக்கை ஆகிய இரண்டும் முந்தைய ஆண்டைவிட (YoY) 27% & 13% அதிகரித்து முறையே 1.95 கோடி மற்றும் 1.11 கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது.
· கடன் அட்டை பயனாளிகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டின் அளவைவிட 50% அதிகரித்து 2.65 இலட்சமாக உயர்ந்திருக்கிறது; PoS முனையங்களின் மொத்த எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட 56% அதிகரித்து 20,904 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.
விருதுகள் மற்றும் கௌரவங்கள்:
- 2022-23 & 2023-24 ஆண்டுகளுக்காக SHG வங்கி இணைப்பு செயல்திட்டத்திற்காக பெண்கள் முன்னேற்றத்திற்கான தமிழ்நாடு கார்ப்பரேஷன் லிமிடெட்-யிடமிருந்து தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்ட பொதுத் துறை வங்கி விருதை இவ்வங்கி பெற்றிருக்கிறது.
- FY2023-24 ஆண்டின்போது நிதி அமைச்சகத்தின் நிதிசார் சேவைகள் துறையிடமிருந்து ஆட்சிமொழி அமலாக்கத்தில் மிகச்சிறப்பான செயல்பாட்டுக்காக ‘முதல் பரிசை’ இவ்வங்கி பெற்றிருக்கிறது.
- 14.09.2024 அன்று ஹிந்தி திவாஸ் நிகழ்வின்போது உள்நாட்டுத் துறை அமைச்சகத்திடமிருந்து ராஜ்பாஷா கீர்த்தி புரஸ்கார்-ல் 3வது பரிசை இவ்வங்கி வென்றிருக்கிறது.
- வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலவாழ்வு அமைச்சகத்தால் தொடங்கப்பட்டிருக்கும் வேளாண் உட்கட்டமைப்பு நிதிய திட்டத்தின்கீழ் NOBOL-ல் சிறந்த பரப்புரை & இலக்கை எட்டிய சாதனையாளர் விருதில் 3வது பரிசை இந்தியன் வங்கி வென்றிருக்கிறது.
- யுஎஸ்-ஐ சேர்ந்த “நியூஸ்வீக்” இதழ், இந்தியாவில் வங்கி சேவை துறையில் அதிக நம்பிக்கைக்குரிய நிறுவனங்கள் – 2024 என இவ்வங்கிக்கு அதிகாரமளித்திருக்கிறது.
- சமீபத்தில் நடைபெற்ற பரப்புரை திட்டத்தில் (2024 ஜுன் 5 முதல் – 2024 அக்டோபர் 5 வரை) திட்ட இலக்கைவிட கடந்து 110% சாதனையை எட்டி APY மெகா மைல்ஸ்டோன் விருதுகளில் “எக்ஸலன்ஸ் மைல்ஸ்டோன்” என்ற அதிக கௌரவமிக்க விருதை வென்று இந்தியன் வங்கி பெருமை சேர்த்திருக்கிறது.
எமது சிறப்பு கூர்நோக்கம்:
வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு திறனதிகாரம் பெற்ற பணியாளர்களின் அறிவுக்கூர்மை மற்றும் தொழில்நுட்பத்தின் சிறப்பான பயன்பாட்டின் வழியாக மதிப்பு கூட்டப்பட்ட மற்றும் பொருத்தமான தீர்வுகளை வழங்குவதே எமது கூர்நோக்கம். மிக நவீன தொழில்நுட்பம் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சேவையின் கலவை வழியாக வங்கி செயல்பாடுகளை எளிமையாக்குவதும் அனைவருக்கும் எளிதாக அணுகக்கூடியதாக, வசதியானதாக மற்றும் பாதுகாப்பானதாக ஆக்குவதும் எமது நோக்கமாகும். சிரமமற்ற, சவுகரியமான வங்கிச் சேவை அனுபவத்தை வாடிக்கையாளர்கள் பெறுமாறு ஏதுவாக்குவதற்கு பல்வேறு டிஜிட்டல் திட்டங்களின் தொகுப்பை எமது வங்கி அறிமுகம் செய்திருக்கிறது. பல்வேறு அம்சங்களின் விரிவான தொகுப்பைக் கொண்ட INDSMA₹T என்ற புதிய ஆம்னி சேனல் பேங்கிங் செயலி வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஒருங்கிணைக்கப்பட்ட பில் பேமெண்ட், பே டு கான்டாக்ட் (தொடர்பு நபருக்கு பணம் செலுத்துவது), இ-ஷாப்பிங் / எம்-ஷாப்பிங், கிராஸ் பிளாட்ஃபார்ம் அணுகுவசதி, கோல் பிளானர் போன்ற அம்சங்களை இச்செயலி கொண்டிருக்கிறது. மேலும் ஒற்றை கிளிக் செய்வதன் மூலம், கடன்களுக்கு ஒருவரால் விண்ணப்பிக்க இயலும். வேளாண் கடன், நகைக்கடன், சிசு முத்ரா, தனிநபர் கடன், MSME & KCC கடன்களை புதுப்பித்தல், குறித்த கால டெபாசிட்டுகள் மற்றும் சேமிப்பு கணக்குகளை தொடங்குதல் என பல்வேறு சேவைகளை பெறமுடியும். பல்வேறு மாடல்களை உருவாக்குவதற்கும் மற்றும் அவைகளை பயன்படுத்துவதற்கும் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் GenAI ஆகியவற்றை இவ்வங்கி திறம்பட பயன்படுத்தி வருகிறது. குறைந்த செலவிலான டெபாசிட்டுகளை பெறுவதற்கு, இந்தியாவின் முக்கிய நகரங்களை கடப்பாடுக்கான தனிப்பிரிவுகளை வங்கி நிறுவியிருக்கிறது; மதிப்புமிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளுக்கு பிரத்யேக சேவை நேர்த்தியாக கிடைப்பதை உறுதிசெய்வது இதன் இலக்காகும்.
ஒருகூரையின்கீழ் நிதி திட்டங்களின் ஒட்டுமொத்த தொகுப்பையும் வழங்க தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் வழியாக நேர்மறையான மாற்றத்தை முன்னெடுக்கும் நம்பகமான கூட்டாளியாகத் திகழ்வது எமது நோக்கமாகும். தொடர்ந்து மாற்றம் கண்டு வருகிற நிதிசார் தளத்தில் எமது வாடிக்கையாளர்கள் சிறப்பான சேவையைப் பெற்று வளர்ச்சி காண்பதற்கு ஏதுவாக்குவதன் வழியாக இதை சாத்தியமாக்குவது எமது குறிக்கோளாகும்.
28.10.2024
Financial Results for the Quarter/Half Year ended 30th September 2024
Key Highlights (Quarter ended Sep’24 over Sep’23) |
Bank’s Global Business is at ₹12.44 lakh Cr, up by 10% YoY
· Net Profit up by 36% YoY at ₹2707 Cr in Sep’24 from ₹1988 Cr in Sep’23
· Operating Profit improved by 10% YoY to ₹4728 Cr in Sep’24 from ₹4303 Cr in Sep’23
· Net Interest Income increased by 8% YoY to ₹6194 Cr in Sep’24 from ₹5741 Cr in Sep’23
· Fee based income grew by 11% YoY to ₹891 Cr in Sep’24 from ₹805 Cr in Sep’23
· Return on Assets (RoA) up by 27 bps to 1.33% in Sep’24 from 1.06% in Sep’23
· Return on Equity (RoE) increased by 114 bps to 21.04% in Sep’24 from 19.90% in Sep’23
· Yield on Advances (YoA) up by 2 bps to 8.77% in Sep’24 from 8.75% in Sep’23
· Yield on Investments (YoI) increased by 40 bps to 7.17% in Sep’24 from 6.77% in Sep’23
· Gross Advances increased by 12% YoY to ₹550644 Cr in Sep’24 from ₹492288 Cr in Sep’23
· RAM (Retail, Agriculture & MSME) advances grew by 14% YoY to ₹325050 Cr in Sep’24 from ₹285891 Cr in Sep’23
· RAM contribution to gross domestic advances stood at 63%. Retail, Agri & MSME advances grew by 15%, 16% and 8% YoY respectively. Home Loan (including mortgage) grew by 14% YoY in Sep’24
· Priority sector advances as a percentage of ANBC stood above 44% at ₹188348 Cr in Sep’24 as against the regulatory requirement of 40%
· Total Deposits increased by 8% YoY and reached to ₹693115 Cr in Sep’24 as against ₹640803 Cr in Sep’23. Current, Savings & CASA deposits grew by 8%, 4%, and 5% YoY respectively
· Domestic CASA ratio stood at 40.47% as on 30thSep’24
· CD ratio stood at 79% as on 30thSep’24
· GNPA decreased by 149 bps YoY to 3.48% in Sep’24 from 4.97% in Sep’23, NNPA reduced by 33 bps to 0.27% in Sep’24 from 0.60% in Sep’23
· Provision Coverage Ratio (PCR, including TWO) improved by 196 bps YoY to 97.60% in Sep’24 from 95.64% in Sep’23
· Slippage Ratio contained to 1.06% in Sep’24 in comparison to 1.77% in Sep’23
· Capital Adequacy Ratio improved by 102 bps to 16.55%. CET-I improved by 144 bps YoY to 13.51%, Tier I Capital improved by 138 bps YoY to 14.01% in Sep’24
·
Key Highlights (Quarter ended Sep’24 over Jun’24)
|
Earnings Per Share (EPS) increased to ₹80.37 in Sep’24 from ₹63.84 in Sep’23
· Net Profit up by 13% QoQ to ₹2707 Cr in Sep’24 from ₹2403 Cr in Jun’24
· Operating Profit improved by 5% QoQ to ₹4728 Cr in Sep’24 from ₹4502 Cr in Jun’24
· Return on Assets (RoA) improved by 13 bps to 1.33% in Sep’24 from 1.20% in Jun’24
· Yield on Advances (YoA) improved by 8 bps to 8.77% in Sep’24 from 8.69% in Jun’24
· Yield on Investments (YoI) improved to 7.17% in Sep’24 from 7.15% in Jun’24
· GNPA decreased by 29 bps to 3.48% in Sep’24 from 3.77% in Jun’24, NNPA reduced by 12 bps to 0.27% in Sep’24 from 0.39% in Jun’24
·
Smart Banking |
Return on Equity (RoE) increased by 128 bps to 21.04% in Sep’24 from 19.76% in Jun’24
Key Highlights (Half Year ended Sep’24 over Sep’23)
|
· Net Profit up by 38% YoY to ₹5110 Cr in H1FY25 from ₹3697 Cr in H1FY24
· Operating Profit increased by 9% YoY to ₹9230 Cr in H1FY25 from ₹8437 Cr
· Net Interest Income grew by 8% YoY to ₹12372 Cr in H1FY25 from ₹11444 Cr
· Net Interest Margin (NIM) Domestic stood at 3.51% in H1FY25
· Return on Assets (RoA) improved by 25 bps to 1.26% from 1.01% in H1FY24
· Return on Equity (RoE) increased by 148 bps to 20.38% from 18.90% in H1FY24
· Cost-to-Income Ratio stood at 44.73% in H1FY25
Network:
· The Bank has 5856 domestic branches (including 3 DBUs), out of which 1983 are Rural, 1532 are Semi-Urban, 1174 are Urban & 1167 are in Metro category. The Bank has 3 overseas branches & 1 IBU (Gift City Branch).
· The Bank has 5217 ATMs & BNAs and 12993 number of Business Correspondents (BCs).
Digital Banking:
· Business of ₹79,059 Cr has been generated through Digital Channels in H1FY25. A total of 102 Digital Journeys, Utilities and Processes have been launched so far.
· Number of Mobile Banking users has grown by 20% year over year, reaching 1.81 Cr.
· UPI users and Net Banking Users have seen a 27% & 13% YoY increase respectively, reaching 1.95 Cr and 1.11 Cr respectively.
· The Credit Card users increased by 50% YoY to 2.65 lakh, while the total number of Point of Sale (PoS) terminals has increased by 56% YoY, reaching a total of 20,904.
Awards & Accolades:
· The Bank received the Best Performing Public Sector Bank Award in Tamil Nadu for SHG Bank Linkage Programme for the year 2022-23 & 2023-24 from Tamil Nadu Corporation for Development of Women Ltd.
· The Bank received 'First Prize' for its outstanding performance in implementation of Official Language during FY2023-24 from Department of Financial Services, Ministry of Finance.
· The Bank received 3rd Prize in The Rajbhasha Kirti Puraskar on the occasion of Hindi Diwas on 14.09.2024 from Ministry of Home Affairs.
· Indian Bank won the 3rd prize for the Target Achiever in BEST campaign & Target Achiever Award in NOBOL campaign under Agriculture Infrastructure Fund launched by the Ministry of Agriculture & Farmers Welfare.
· The Bank has been named as one of the Most Trustworthy Companies – 2024 under Banking sector in India by the US-based “Newsweek” magazine.
· Indian Bank proudly achieved the prestigious "Excellence Milestone" in the APY Mega Milestone Awards in the recent campaign (from 5th Jun’24 – 5th Oct’24), surpassing the campaign target by reaching 110% achievement.
Smart Banking |
Our Focus
Our focus is to deliver value-added and customized solutions through the acumen of empowered employees and smart use of technology to cater the needs of the customers. Through a combination of cutting-edge technology and personalised service, we aim to simplify banking, making it more accessible, convenient and secure for everyone.
Bank has launched an array of digital products to facilitate customers for seamless and convenient banking experience. INDSMA₹T- new omni channel banking application having wide range of features launched for customers. The app has several features viz., integrated bill payment, pay to contact, e-shopping / m-shopping, cross platform accessibility, goal planner etc providing a seamless and enriched experience for our valued customers. Further, in a single click, one can apply for loans e.g. Agri jewel, Shishu Mudra, Personal, renew MSME & KCC loans, open fixed deposits and savings account. Bank is leveraging AI & GenAI for developing various models and use cases. To garner low cost deposits, Bank has set-up liability verticals in major cities of India to ensure customized service to esteemed corporates and government departments.
We aim to be a trusted partner driving positive change by using technology to deliver entire gamut of financial products under one roof and enabling our customers to thrive in an ever evolving financial landscape.
For more information, please connect:
Veritas Reputation PR
Email- disha.guha@veritasreputation.com / prem.kumar@veritasreputation.com
M – 8388820313 / 9597404811
Smart Banking |
Comments
Post a Comment