தமிழோடு விளையாடு சீசன் 2 - அரையிறுதியில் நுழையும் நோக்கில் கடுமையாக போட்டியிடும் பள்ளிகள்

 தமிழோடு விளையாடு சீசன் 2 - அரையிறுதியில் நுழையும் நோக்கில் கடுமையாக போட்டியிடும் பள்ளிகள்

 

கலைஞர் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் "தமிழோடு விளையாடு" இரண்டாவது சீசன் அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது.



 




பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று அசத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி மாணவர்களின் தமிழ் அறிவை சோதிக்காமல், தமிழ் அறிவை ஊட்டும் உணர்ச்சிப்பூர்வமான சுற்றுகளைக் கொண்டுள்ளது.

 

இதில், மொத்தமாக 42 பள்ளிகள் பங்கேற்ற நிலையில், காலிறுதி சுற்றுக்கு மொத்தம் 24 பள்ளிகள் தேர்வாகின. காலிறுதிச் சுற்றுகள் தற்போது நடந்து வருவதால், அரையிறுதிக்குள் நுழையும் நோக்கில் 24 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் தங்களது தமிழ் அறிவை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

காலிறுதிச் சுற்றின் முடிவில், இறுதியாக 9 பள்ளிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும் என்பதால் போட்டி சுவாரஸ்யமாகி இருக்கிறது.

Comments

Popular posts from this blog

தைராய்டு புற்றுநோய்க்கு ரோபோ உதவியுடன் தழும்பில்லாத தைராய்டு அகற்றல் சிகிச்சை!

Chennai leads the way for PB Partners, with 62% YoY growth driven by a powerful 12,000+ agent network across Tamil Nadu