தைராய்டு புற்றுநோய்க்கு ரோபோ உதவியுடன் தழும்பில்லாத தைராய்டு அகற்றல் சிகிச்சை! இம்மாநிலத்தில் முதன்முறையாக வெற்றிகரமான நிகழ்வு சென்னை, செப்டம்பர் 10, 2024 – தைராய்டு புற்றுநோய்க்கான சிகிச்சையில் ஒரு அதிரடி நிலைமாற்றமாக தமிழ்நாட்டில் முதன்முறையாக ரோபோ உதவியுடன் தழும்பில்லாத தைராய்டு உறுப்பு அகற்றல் செயல்முறையை அப்போலோ கேன்சர் சென்டர் சென்னையில் வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கிறது. தைராய்டக்டோமி என அழைக்கப்படும் சிகிச்சையானது, தொண்டையில் முன்புறத்தில் அமைந்துள்ள தைராய்டு சுரப்பி முழுவதையும் அல்லது அதில் ஒரு பகுதியை அறுவைசிகிச்சையின் மூலம் அகற்றுவதாகும். ரோபோடிக் அசிஸ்டெட் ப்ரெஸ்ட் ஆக்சில்லோ இன்சுப்லேஷன் தைராய்டெக்டோமி (RABIT) நுட்பம் என்பது கழுத்தில் வெளிப்படையாக தெரியக்கூடிய தழும்பில்லாமல் சிறப்பான அழகியல் தளங்களை வழங்குகிறது. வேகமான மீட்சியையும் மற்றும் குறைவான சிக்கல்களையும் உறுதி செய்வதாக இந்த புதுமையான செயல்முறை இருக்கிறது. மேலும் நோயாளிகளுக்கு சிறப்பான வாழ்க்கை தரத்தை வழங்கி கணிசமான பலன்களை தரும் சிகிச்சையாக இது இருக்கிறது. இந்தியாவில் தைராய்டு புற்று...
ஓசூரில் புத்தாண்டு 2026: மூத்த நகைச்சுவை கலைஞர்கள் முன்னிலையில் இளம் நடிகரின் உற்சாக பங்கேற்பு. ஓசூர், தமிழ்நாடு: ஓசூரில் புத்தாண்டு 2026-ஐ முன்னிட்டு நடைபெற்ற பிரம்மாண்ட கொண்டாட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த விழாவில் தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை கலைஞர்கள் ஆர்த்தி மற்றும் கணேஷ்கர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, தங்களது கலகலப்பான மேடை நிகழ்ச்சிகளால் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து மேடையில் தோன்றிய இளம் நடிகர் கதிரவன் ரசிகர்களிடையே பேராரவாரத்தை ஏற்படுத்தினார். மூத்த கலைஞர்களுக்கு மரியாதை செலுத்தி, அவர்களுடன் இணைந்து மேடையைப் பகிர்ந்துகொண்ட அவரது பண்பான அணுகுமுறை அனைவரின் பாராட்டையும் பெற்றது. நிகழ்ச்சியின் போது நடிகர் கதிரவன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது. DJ இசை, லைவ் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், நடனம் மற்றும் இன்டர்ஐக்டிவ் அம்சங்களுடன் இந்த புத்தாண்டு விழா முழு உற்சாகத்துடன் நடைபெற்றது. இந்த பிரம்மாண்ட கொண்டாட்டம் MM Food Court வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை இயக்குநர் தரகன்.டி தலை...
Comments
Post a Comment