Rotary clubs unite to Distribute 1000 Maternity kits worth Ten Lakhs for Government Hospitals at chennai during World Breast feeding week

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, ரூ.10 லட்சம் மதிப்பில் 1000 மகப்பேறு நலப்பொருட்களை ரோட்டரி சங்கத்தின்  டாக்டர்.சூசன் வர்கீஸ், சூரியநாராயண ராவ், உஷா சரோகி மற்றும் வினோத் சரோகி உள்ளிட்டோர் வழங்க திட்டமிட்டு,ராயபுரம் RSRM மருத்துவமனையில் இம்முயற்சியை தொடங்கினர்.












சமூக சேவை மற்றும் தாய்வழி சுகாதார ஆதரவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக,  சென்னை மாவட்டம் முழுவதும் 40 க்கும் மேற்பட்ட ரோட்டரி சங்கங்கள் மற்றும் ரோட்டரி சென்னை மாவட்டம் 3234 இன் கிளப் ஃபர்ஸ்ட் லேடிஸ் இணைந்து RAW 2 அதாவது ROTARY ACTION for WOMEN -2 எனும் முயற்சியின் கீழ், மகப்பேறு நலபொருட்களை வழங்குகின்றனர்.  


ரோட்டரி சங்கத்தின்  முதல் பெண்மணி ஆர். டி. என் உஷா சரோகியின் சிந்தனையால் தொகுக்கப்பட்டு, மகளிர் சுகாதாரக் குழுவை வழிநடத்தும் ரொட்டேரியன் டாக்டர்.சூசன் வர்கீஸ் மற்றும் CSH இன் இயக்குனர் ஆர். டி. என் சூரியநாராயண ராவ் தலைமையில்  செயல்படுத்தப்படுகிறது 


ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 5 வரை உலக தாய்ப்பால் வாரத்தில் அரசு மருத்துவமனைகளில் 1000  மகப்பேறு நலப்பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்க  இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய தாய்மார்களுக்கு இந்த மகப்பேறு நலப்பொருட்கள் பயனளிக்கும்.  மேலும் இந்த மருத்துவமனைகளுக்கு மிகவும் தேவையான உபகரணங்களும்  உலக தாய்ப்பால் வாரத்துடன் இணைத்து நன்கொடையாக வழங்கப்பட உள்ளது. 


இன்று ராயபுரம் RSRM மருத்துவமனையில் தொடங்கும் இந்த பயணம்  சென்னையின் IOG மற்றும்  ICH மருத்துவமனைகளில் 2 ஆம் தேதியும், ஆகஸ்ட் 3 ஆம் தேதி KGH-ISO மருத்துவமனையிலும்,  4 ஆம் தேதி ஷெனாய் நகர் PHC மருத்துவமனையிலும், 5 ஆம் தேதி அடையாறு  PHC மருத்துவமனையிலும் வழங்கப்பட உள்ளன.


 மேலும் சென்னையில் உள்ள சில முன்னணி மகப்பேறு மருத்துவமனைகளில் தாய்ப்பால் விழிப்புணர்வு மற்றும் தாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த தாய்ப்பால் வாரத்தில் ரோட்டரி சங்கம் அதிகபட்ச தாக்கத்தை உறுதி செய்கிறது.  


இந்த முயற்சி பல சங்கங்களை ஒன்றிணைப்பதோடு, ஒவ்வொன்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் வழங்குகின்றன. மேலும் மகப்பேறு பராமரிப்பில் மிகவும் பின்தங்கியவர்களை ஊக்கப்படுத்தும் முயற்சி சரியாக சென்றடைவதையும் உறுதி செய்யும் விழிப்புணர்வையும் உருவாக்குகிறது.

Rotary clubs unite to Distribute 1000 Maternity kits worth Ten Lakhs for Government Hospitals at chennai during World Breast feeding week


In a remarkable display of community service and maternal healthcare support, more than 40 Rotary clubs and club First Ladies across Chennai District 3234 have joined hands for the RAW 2 ( Rotary Action for Women 2) Maternity kits distribution initiative. Thoughtfully curated by First Lady Rtn Usha Saraogi  and implemented by the Women’s Health team led by Rtn Dr Susan Verghese and Rtn Suryanarayana Rao Director CSH, they are targeting 1000 kits to be distributed in Govt hospitals during World Breast Feeding week between 1st August to 5th August 2025 .These maternity kits  will benefit antenatal and postnatal mothers and much needed equipment for these hospitals will also be donated from August 1-5, 2025, coinciding with *World Breastfeeding Week.*


 The structured schedule planned is :August 1st at RSRM, August 2nd at IOG and at ICH, August 3rd at KGH-ISO , August 4th at Shenoy Nagar PCHC , and August 5th at Adyar PCHC and few other leading maternity hospitals at Chennai ensuring maximum impact during this globally recognized period dedicated to promoting breastfeeding awareness and maternal health.


This effort brings  many clubs together each contributing significantly and also creates  awareness ensuring that maternity care reaches the most underprivileged.

Comments

Popular posts from this blog

தைராய்டு புற்றுநோய்க்கு ரோபோ உதவியுடன் தழும்பில்லாத தைராய்டு அகற்றல் சிகிச்சை!

Chennai leads the way for PB Partners, with 62% YoY growth driven by a powerful 12,000+ agent network across Tamil Nadu