சென்னை சைக்ளோத்தான் 2025: களைகட்டிய சைக்கிள் போட்டி!
சென்னை சைக்ளோத்தான் 2025: களைகட்டிய சைக்கிள் போட்டி!
அதேபோல், மகாபலிபுரத்திலிருந்து சென்னையை நோக்கி செல்லும் வாகனங்கள் பூஞ்சேரி சந்திப்பில் ஓஎம்ஆர் வழியாக திருப்போரூர், கேளம்பாக்கம், நாவலூர், சோழிங்கநல்லூர் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இந்த போட்டி குறித்து பேசிய சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் கூறுகையில், “மக்களுக்கு விளையாட்டு மீது ஆர்வம் வர வேண்டும். ஓடி ஆடி விளையாடுவதன் மூலம் மக்கள் ஆரோக்கியமாக இருக்க முடியும். இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த சைக்கிளத்தான் போட்டியை தமிழக அரசோடு இணைந்து ஏற்பாடு செய்துள்ளோம். இது போன்ற போட்டிகள் மூலம் மக்கள் மன அழுத்ததை போக்கி, ஆரோக்கியமாக வாழ முடியும். மேலும் இசிஆர் ரைடர்ஸ் என்ற பெயரில் ஒரு குழுவை அமைத்து, தினந்தோறும் சைக்கிள் ஓட்டி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக விழிப்புணர்வு நிகழ்ச்சியாக இந்த போட்டி தற்போது நடத்தப்பட்டது.
இவ்வாறு சைக்கிள் ஓட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளதால், என்னால் இன்று 40 கிலோ மீட்டர் வேகத்தில் 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு செல்ல முடிந்தது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. அனைவரும் சைக்கிள் ஓட்ட வேண்டும். சைக்கிள் ஓட்டுவது ஒரு சிறந்த உடற்பயிற்சியாகும். சைக்கிள் ஓட்டுவது மூலம் அனைவரும் தங்களது ஆரோக்கியத்தை சுய பரிசோதனை செய்ய முடியும்” என்றார்.
Comments
Post a Comment