Kauvery Hospital Alwarpet Achieves JCI Accreditation, Strengthening Chennai’s Position as Asia’s Healthcare Capital

 காவேரி மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை-க்கு JCI அங்கீகாரம்

ஆசியாவில் மருத்துவ சிகிச்சைக்கான தலைநகராக திகழும் சென்னையின் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது.




சென்னை, 9 அக்டோபர் 2025: காவேரி மருத்துவமனை குழுமம், தனது ஆழ்வார்பேட்டை மருத்துவமனையானது கௌரவமிக்க ஜாயிண்ட் கமிஷன் இன்டர்நேஷனல் (JCI) 8-வது பதிப்பு அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதை பெருமிதம் கலந்த மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. இதற்கு முன்னதாக 2025 ஜனவரி மாதத்தில் இக்குழுமத்தின் வடபழனி மருத்துவமனை இதே அங்கீகாரத்தைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இரட்டை அங்கீகாரத்தின் மூலம், இந்தியாவில் JCI-ன் பல அங்கீகாரத்தைப் பெற்ற பல மையங்களைக் கொண்ட வெகு சில பிரத்யேக மருத்துவமனைகளின் பட்டியலில் காவேரி இணைந்திருக்கிறது. இதன்வழியாக, உலகத் தரம் வாய்ந்த மருத்துவ சேவைக்கான ஒரு நம்பகமான மையம் என்ற தனது வலுவான அந்தஸ்தை காவேரி மருத்துவமனை குழுமம் மீண்டும் உறுதி செய்துள்ளது.

JCI 8-வது பதிப்பின் தரநிலைகள், உலகளாவிய சுகாதாரப் பராமரிப்பில் மிகவும் கடுமையான மற்றும் மேம்படுத்தப்பட்ட அளவுகோல்களைக் குறிக்கின்றன. அளவிடக்கூடிய 1,094 கூறுகளை உள்ளடக்கிய இந்தத் தரநிலைகள் பின்வருவனவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கின்றன:

நோயாளியின் பாதுகாப்பே முதன்மையானது: கண்டிப்பாக பின்பற்றப்படும் நோய்த்தொற்று கட்டுப்பாட்டு முறைகள், சிறப்பான மருந்தளிப்பு மேலாண்மை மற்றும் அறுவை சிகிச்சையில் பாதுகாப்பு நெறிமுறைகளைத் தவறாமல் பின்பற்றுதல்.

மருத்துவ சிகிச்சையில் மேன்மை: சிகிச்சை விளைவுகளை தொடர்ச்சியாகக் கண்காணித்தல், சான்றுகள் அடிப்படையிலான மருத்துவ நெறிமுறைகளைப் பயன்படுத்துதல் மற்றும் நோயாளியின் பராமரிப்பில் பல்துறை நிபுணத்துவத்தை ஒருங்கிணைத்தல்.

வெளிப்படைத்தன்மை மற்றும் உரிமைகள்: நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் தெளிவான தகவல் பரிமாற்றம், நோயாளிகளது உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் சிகிச்சையில் பகிர்வு அடிப்படையில் இணைந்து முடிவெடுத்தல்.

அவசரகால சிகிச்சைக்கான தயார்நிலை: சிக்கலான மருத்துவச் சூழல்களைக் கையாள நிறுவப்பட்டிருக்கும் மேம்பட்ட அமைப்புகள், நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் உயிர்காக்கும் சிகிச்சைகள் கிடைப்பதை உறுதி செய்வது.

தொடர்ச்சியான மேம்பாடு: சிகிச்சையின் தரத்தை மேம்படுத்த பணியாளர்களுக்கு, குறித்த காலஅளவுகளில் முறையான தொடர் பயிற்சி, மருத்துவத் தணிக்கைகள் மற்றும் சிகிச்சை பராமரிப்பின் தரத்தை தொடர்ந்து மேம்படுத்த நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்துதல்.

பசுமை மருத்துவமனை: காவேரி மருத்துவமனையைப் பொறுத்தவரை, நோய்களுக்கு சிகிச்சையளிப்பதுடன் அதன் கடமை முடிந்துவிடுவதில்லை என்று உறுதியாக நம்புகிறது. நோயாளிகள் வாழும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும், எதிர்காலத் தலைமுறையினருக்குப் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் நீடித்த சுகாதார சேவையை உறுதி செய்வதும் தனது கடமை பொறுப்பில் உள்ளடங்கியது என்ற கண்ணோட்டத்துடன் இம்மருத்துவமனை செயல்படுகிறது. உலகளாவிய தரங்களுக்கு நிகரான சிகிச்சை மற்றும் செயல்பாட்டின் வழியாக, காவேரி மருத்துவமனை இன்றைய நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல், நாளைய சமூகத்தின் ஆரோக்கியத்திற்கும் பொறுப்பேற்கிறது. 'உலகளாவிய சுகாதாரத் தாக்கம்' என்பது ஒரு தரம் மட்டுமல்ல, அது ஒரு வாக்குறுதி: நோயாளிகளுக்குப் பாதுகாப்பான, சமூகத்திற்கு அறிவார்ந்த, பூமிக்கு உகந்த உலகத் தரம் வாய்ந்த சேவையை வழங்குவோம் என்பதே காவேரி மருத்துவமனை வழங்கும் வாக்குறுதி.

தர அங்கீகாரம் பெற்ற இச்சாதனை குறித்து, காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:


"இந்த சாதனை ஒரு நிறுவன மைல்கல்லை விட அதிகம் - இது சென்னைக்கு பெருமை சேர்க்கும் தருணம். காவேரி ஆழ்வார்பேட்டை மற்றும் வடபழனியில் இரட்டை JCI அங்கீகாரம், உலகளாவிய சுகாதார மையமாக நமது நகரத்தின் வளர்ந்து வரும் அந்தஸ்தைப் பிரதிபலிக்கிறது.


சிகிச்சை பெறுபவர் பாதுகாப்பு, தொற்று கட்டுப்பாடு, மருத்துவ நிர்வாகம் மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கான உலகளாவிய தரநிலைப்படுத்தப்பட்ட அமைப்புகளை JCI அங்கீகாரம் உறுதி செய்கிறது. சேர்க்கை முதல் வெளியேற்றம் வரை - பராமரிப்பின் ஒவ்வொரு படியும் - குறைவான மருத்துவ பிழைகள், விரைவான மீட்பு மற்றும் சிகிச்சை பெறுபவர் திருப்திக்கு வழிவகுக்கும் சான்றுகள் சார்ந்த நெறிமுறைகளைப் பின்பற்றுகிறது.


அதே நேரத்தில், செயல்திறன், குறைக்கப்பட்ட வீணாக்கம் மற்றும் சிறந்த ஒருங்கிணைப்பு ஆகியவை ஒட்டுமொத்த பராமரிப்பு செலவைக் குறைக்க உதவுகின்றன. “முதல் முயற்சியிலேயே விஷயங்களைச் சரியாகச் செய்வதன் மூலம், சுகாதாரப் பராமரிப்பை உயர் தரத்துடனும் மலிவு விலையுடனும் ஆக்குவதில் நாங்கள் உறுதியாக செயல்படுகிறோம்.” இந்த அங்கீகாரம் எங்களிடமும் சிகிச்சை பெறுபவர்களுக்கு உலகின் சிறந்த தரங்களுடன் இணக்கமான பராமரிப்பைப் பெறுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது."


பொதுமக்களைப் பொறுத்தவரை, இந்த அங்கீகாரம் பாதுகாப்பான அறுவை சிகிச்சைகள், குறைந்த நோய்த்தொற்று அபாயங்கள், துல்லியமான நோய் கண்டறிதல் மற்றும் மேம்பட்ட சிகிச்சை முடிவுகள் ஆகியவற்றை இம்மருத்துவமனை உறுதி செய்கிறது என்பதை உணர்த்துகிறது. மேலும், ஆசியாவின் மருத்துவத் தலைநகரம் என்று நீண்ட காலமாக அங்கீகரிக்கப்பட்ட சென்னை, உலகளாவிய சிகிச்சை பராமரிப்புத் தரங்களைத் தொடர்ந்து பின்பற்றுவதோடு, அவைகளையும் மிஞ்சி சிறந்து விளங்குகிறது என்ற உத்திரவாதத்தை சர்வதேச நோயாளிகளுக்கும் இந்த அங்கீகாரம் வழங்குகிறது.

JCI-ன் தர அங்கீகாரம் பெற்ற இரு கிளைகளுடன் இயங்கும், காவேரி மருத்துவமனை குழுமம், மருத்துவச் சிகிச்சையில் மேன்மை மற்றும் நோயாளிகளுக்கான பாதுகாப்பில் ஒரு புதிய தரஅளவுகோலை நிர்ணயிக்கிறது. இதன் மூலம், இந்திய மக்களுக்கும் மற்றும் உலகளாவிய சமூகத்தினருக்கும் நம்பகமான, மிக உயர்ந்த சிகிச்சை பராமரிப்பை உறுதி செய்யும் மருத்துவச் சேவையின் தலைநகராக புகழ் பெற்றிருக்கும் சென்னையின் நற்பெயரை இது மேலும் வலுப்படுத்துகிறது.

மேம்பட்ட தொழில்நுட்பம், பல்துறை சார்ந்த நிபுணத்துவம் மற்றும் கனிவான பராமரிப்பு சேவை ஆகியவற்றின் மூலம், காவேரி மருத்துவமனை சென்னையின் சுகாதாரச் சூழலமைப்பில் உயர்மேன்மை என்ற சொற்றொடரின் பொருளை மறுவரையறை செய்கிறது. தரநிலைக்கான இரட்டை அங்கீகாரத்தை காவேரி குழுமம் பெற்றிருப்பது, மருத்துவப் பயணிகளால் விரும்பப்படும் அமைவிடமாகவும், இந்திய மக்களின் நம்பிக்கைக்குரிய தேர்வாகவும் திகழும் சென்னையின் நற்பெயருக்கு கிடைத்திருக்கும் ஒரு வலிமையான அங்கீகாரமாகும்.






Kauvery Hospital Alwarpet Achieves JCI Accreditation, Strengthening Chennai’s Position as Asia’s Healthcare Capital

Chennai, 9th October 2025:

Kauvery Hospital proudly announces that its Alwarpet unit has achieved the prestigious Joint Commission International (JCI) 8th Edition Accreditation, following the Vadapalani unit’s accreditation in January 2025. With this dual recognition, Kauvery joins an exclusive group of hospitals in India with multiple JCI-accredited centers, reaffirming its role as a trusted destination for world-class healthcare.

The JCI 8th Edition standards represent the most rigorous and updated benchmarks in global healthcare. Covering more than one thousand measurable elements, these standards emphasize:

Patient Safety First: Robust infection control practices, stringent medication management, and strict adherence to surgical safety protocols.

Clinical Excellence: Continuous monitoring of treatment outcomes, use of evidence-based medicine, and integration of multidisciplinary expertise in patient care.

Transparency & Rights: Clear communication with patients and families, respect for patient rights, and shared decision-making in treatment.

Emergency Preparedness: Advanced systems to handle critical care situations, ensuring patients receive timely, life-saving interventions.

Continuous Improvement: Regular staff training, clinical audits, and technology adoption to constantly enhance care quality.

Green Hospital: For Kauvery Hospital, this means that care goes beyond treating illness — it includes protecting the environment in which patients live and ensuring healthcare remains safe, reliable, and sustainable for future generations. By aligning with these global standards, Kauvery demonstrates its responsibility not only to today’s patients but also to the health of tomorrow’s communities. Global Health Impact is not just a standard — it is a promise: to provide world-class care that is safer for patients, smarter for communities, and kinder to the planet

Speaking on this achievement, Dr. Aravindan Selvaraj, Co-Founder & Executive Director of Kauvery Hospital, said:

“This achievement is more than an institutional milestone — it is a moment of pride for Chennai. Dual JCI accreditation at Kauvery Alwarpet and Vadapalani reflects our city’s growing stature as a global healthcare hub.

JCI accreditation ensures globally benchmarked systems for patient safety, infection control, clinical governance, and continuous improvement. Every step of care — from admission to discharge — follows evidence-based protocols that lead to fewer medical errors, faster recovery, and higher patient satisfaction.

At the same time, efficiency, reduced wastage, and better coordination help lower the overall cost of care. By doing things right the first time, we make healthcare both high in quality and affordable. This accreditation reassures our patients that they are receiving care aligned with the world’s best standards.”

For the community, this accreditation translates into safer surgeries, lower infection risks, accurate diagnostics, and improved treatment outcomes. It also assures international patients that Chennai, long recognized as the healthcare capital of Asia, continues to uphold and exceed global standards of care.

With two JCI-accredited units, Kauvery Hospital sets a benchmark in clinical excellence and patient safety, reinforcing Chennai’s reputation as a trusted healthcare destination for both local and global communities.

With advanced technology, specialized expertise across disciplines, and a compassionate care model, Kauvery Hospital is redefining excellence in Chennai’s healthcare ecosystem. This dual accreditation is a powerful affirmation of the city’s reputation as a preferred destination for medical travelers and a trusted choice for local communities.

Comments

Popular posts from this blog

தைராய்டு புற்றுநோய்க்கு ரோபோ உதவியுடன் தழும்பில்லாத தைராய்டு அகற்றல் சிகிச்சை!

Chennai leads the way for PB Partners, with 62% YoY growth driven by a powerful 12,000+ agent network across Tamil Nadu