Escorts Kubota Limited Introduces Third-Generation Ride-On Rice Transplanters in India

Escorts Kubota Limited Introduces Third-Generation Ride-On Rice Transplanters in India




Chennai,18th November 2025: Escorts Kubota Limited (EKL), one of India’s leading engineering conglomerates in the agricultural and construction equipment space, has introduced its third-generation Ride-On Rice Transplanters – KA6 and KA8 under Kubota Brand. Engineered in Japan, the new models combine advanced technology with on-field practicality to deliver higher productivity, operator comfort and planting precision. The models have been introduced across 7 states - Tamil Nadu, Punjab, Odisha, Madhya Pradesh, Andhra Pradesh, Kerala and Telangana, where demand for mechanized paddy solutions is rising.

The KA6 and KA8 transplanters are powered by Kubota’s fuel-efficient engines that deliver 21 & 24 horsepower, ensuring dependable performance even in tough field conditions. Both models come with a smart turning system for smoother handling and an automatic lift function that makes cornering easier. The Multifunction control lever allows effortless operation, while the horizontal control mechanism helps maintain uniform planting depth. The redesigned planting claws significantly reduces missed planting, and ensure seedlings are placed evenly, and improved New Seedling picking guide allows on high accuracy and planting will improve the crop growth and yield consistency.

Operator comfort has also been thoughtfully improved. The machines feature a wider platform for easier movement, an ergonomic layout for reduced fatigue, and LED lights that make farming easier even in the after-sunset hours. The lighter planting section and longer wheelbase enhance balance and stability, allowing to cross the big ridges easily and making the transplanters suitable for extended work in deep wet field conditions.

Speaking about the launch, MrBharat Madan, Chief Financial Officer & Wholetime Director, said, “India’s farmers have long carried the responsibility of feeding the nation, often through arduous work in challenging conditions. At Escorts Kubota Limited, we view mechanization as a national mission to empower farmers, enhance their dignity, and make agriculture more efficient and sustainable. The new KA Series rice transplanters mark a significant milestone in this journey, transforming a labour-intensive process with precision, comfort, and innovation. By blending global technology with local insights, we continue to lead the mechanization movement in India—advancing productivity, reliability, and prosperity for farmers across the country.”

Mr. Rajan Chugh, Chief Officer, Agri Solutions Business Division, added, “The KA6 and KA8 transplanters embody our continuous commitment to innovation and farmer-centric design. Every feature has been engineered to address real challenges in paddy fields, from labour shortage to long working hours, and to deliver consistent performance season after season. With their higher horsepower, smart turning capability and ergonomic layout, these machines make rice transplanting faster, uniform and more profitable for the modern farmer.”

 

About Escorts Kubota Limited (EKL)

Escorts Kubota Limited (EKL) is a premier engineering conglomerate with over 80 years of expertise, dedicated to delivering top-tier solutions in agricultural and construction equipment that drive India’s development.

The company crafts cutting-edge, dependable products, including its renowned tractor family- Farmtrac, Powertrac and Kubota. It also offers specialized Farmpower agricultural machinery and a strong lineup of construction equipment brands. Together, these solutions unite Indian ingenuity with Japanese precision for exceptional performance. Through an extensive dealer network, EKL ensures these advanced, reliable products reach customers across India and globally, upholding its legacy as a forward-thinking leader in transforming agriculture and infrastructure.

Learn more at www.escortskubota.com






 

எஸ்கார்ட்ஸ் குபோடா லிமிடெட், இந்தியாவில் மூன்றாம் தலைமுறை Ride-On Rice நடவு இயந்திரங்களை அறிமுகப்படுத்துகிறது

 

சென்னை, 18 நவம்பர் 2025: இந்தியாவின் முன்னணி வேளாண் மற்றும் கட்டுமான உபகரணத் துறையில் இயங்கும் பொறியியல் பெருநிறுவனங்களில் ஒன்றான எஸ்கார்ட்ஸ் குபோடா லிமிடெட் (EKL), தனது குபோடா பிராண்டின் கீழ் KA6 மற்றும் KA8 ஆகிய மூன்றாம் தலைமுறை Ride-On Rice நெல் நடவு இயந்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.ஜப்பானில் வடிவமைக்கப்பட்ட இந்த புதிய மாடல்கள், மேம்பட்ட தொழில்நுட்பத்தை களச் செயல்பாட்டுத் திறனுடன் இணைத்து, உயர் உற்பத்தித்திறன், இயக்குபவர் சௌகரியம் மற்றும் துல்லியமான நடவு ஆகியவற்றை வழங்குகின்றன.இயந்திரமயமாக்கப்பட்ட நெல் சாகுபடி தீர்வுகளுக்கான தேவை அதிகரித்து வரும் தமிழ்நாடு, பஞ்சாப், ஒடிசா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், கேரளா மற்றும் தெலுங்கானா ஆகிய 7 மாநிலங்களில் இந்த மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

KA6 மற்றும் KA8 நடவு இயந்திரங்கள், குபோடாவின் எரிபொருள் சிக்கன என்ஜின்களால் இயக்கப்படுகின்றன. இவை முறையே 21 மற்றும் 24 குதிரைத்திறன் சக்தியை வழங்குவதோடு, கடினமான களச் சூழல்களிலும் நம்பகமான செயல்திறனை உறுதி செய்கின்றன.இந்த இரண்டு மாடல்களும், சுலபமாக இயக்குவதற்கு ஒரு திறன்மிக்க திருப்ப அமைப்பையும் மற்றும் மூலைகளில் திரும்புவதை எளிதாக்க ஒரு தானியங்கி தூக்கும் வசதியையும் கொண்டுள்ளன.இதன் பல்செயல்பாட்டுக் கட்டுப்பாட்டுக் கருவி சுலபமான செயல்பாட்டை அனுமதிக்கிறது, அதே நேரத்தில் இதன் கிடைமட்டக் கட்டுப்பாட்டு அமைப்பு சீரான நடவு ஆழத்தை பராமரிக்க உதவுகிறது.மறுவடிவமைப்பு செய்யப்பட்ட நடவு அமைப்புகள், நடவு விடுபடுவதை கணிசமாகக் குறைக்கின்றன, மேலும் அவை நாற்றுகள் சீராக நடப்படுவதை உறுதிசெய்கின்றன. மேம்படுத்தப்பட்ட புதிய நாற்று எடுக்கும் வழிகாட்டி, உயர் துல்லியத்திற்கு வழிவகுக்கிறது, இதனால் பயிர் வளர்ச்சி மற்றும் விளைச்சல் நிலைத்தன்மை மேம்படும்.

இயக்குபவரின் சௌகரியமும் சிந்தனையுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் சுலபமாக இயங்குவதற்கு பரந்த தளம், சோர்வைக் குறைக்க பயன்பாட்டிற்கு ஏற்ற வடிவமைப்பு, மற்றும் சூரியன் மறைந்த பிறகும் விவசாயத்தை எளிதாக்கும் LED விளக்குகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.இதன் இலகுவான நடவுப் பகுதி மற்றும் நீண்ட சக்கரங்களுக்கிடையேயான தூரம் ஆகியவை சமநிலை மற்றும் நிலைத்தன்மையை அதிகரிக்கின்றன. இது பெரிய வரப்புகளை எளிதாகக் கடக்க உதவுவதோடு, ஆழமான, ஈரமான வயல் சூழல்களில் நீண்ட நேரம் வேலை செய்வதற்கும் இந்த நடவு இயந்திரங்களை ஏற்றதாக ஆக்குகிறது.

 

இந்த அறிமுகம் குறித்து, நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மற்றும் முழுநேர இயக்குநரான திரு. பாரத் மதன் அவர்கள் கூறியதாவது: “நாட்டிற்கு உணவளிக்கும் பொறுப்பை இந்திய விவசாயிகள் நீண்ட காலமாகச் சுமந்து வருகின்றனர், பெரும்பாலும் சவாலான சூழல்களில் கடின உழைப்பின் மூலம் இதனை அவர்கள் செய்கின்றனர். எஸ்கார்ட்ஸ் குபோடா லிமிடெட்டில், இயந்திரமயமாக்கலை விவசாயிகளுக்கு அதிகாரமளிக்கவும், அவர்களின் கண்ணியத்தை மேம்படுத்தவும், விவசாயத்தை மிகவும் திறமையானதாகவும் மற்றும் நீடித்ததாகவும் மாற்றுவதற்கான ஒரு தேசிய இலக்காக நாங்கள் கருதுகிறோம். இந்த புதிய KA தொடர் நெல் நடவு இயந்திரங்கள், கடினமான உழைப்பைக் கோரும் ஒரு செயல்முறையைத் துல்லியம், சௌகரியம் மற்றும் புதுமையுடன் மாற்றுவதன் மூலம், இந்தப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கின்றன. உலகளாவிய தொழில்நுட்பத்தை உள்ளூர் புரிதல்களுடன் இணைப்பதன் மூலம், நாங்கள் இந்திய இயந்திரமயமாக்கல் இயக்கத்தை தொடர்ந்து வழிநடத்துகிறோம்—நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் உற்பத்தித்திறன், நம்பகத்தன்மை மற்றும் செழிப்பை நாங்கள் மேம்படுத்துகிறோம்.”

வேளாண் தீர்வுகள் வணிகப் பிரிவின் தலைமை அதிகாரியான திரு. ராஜன் சுக் மேலும் கூறியதாவது: “KA6 மற்றும் KA8 நடவு இயந்திரங்கள், புதுமை மற்றும் விவசாயிகளை மையமாகக் கொண்ட வடிவமைப்பு ஆகியவற்றிற்கான எங்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றன. நெல் வயல்களில் உள்ள தொழிலாளர் பற்றாக்குறை முதல் நீண்ட வேலை நேரம் வரையிலான உண்மையான சவால்களைச் சமாளிக்கவும், ஒவ்வொரு பருவத்திலும் சீரான செயல்திறனை வழங்கவும் இதன் ஒவ்வொரு அம்சமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் அதிக குதிரைத்திறன், திறன்மிக்க திருப்பும் வசதி மற்றும் பயன்பாட்டிற்கு ஏற்ற வடிவமைப்பு ஆகியவற்றின் மூலம், இந்த இயந்திரங்கள் நவீன விவசாயிக்கு நெல் நடவு செய்வதை வேகமாகவும், சீராகவும், அதிக லாபகரமாகவும் ஆக்குகின்றன.”

 

 

About Escorts Kubota Limited (EKL)

Escorts Kubota Limited (EKL) is a premier engineering conglomerate with over 80 years of expertise, dedicated to delivering top-tier solutions in agricultural and construction equipment that drive India’s development.

The company crafts cutting-edge, dependable products, including its renowned tractor family- Farmtrac, Powertrac and Kubota. It also offers specialized Farmpower agricultural machinery and a strong lineup of construction equipment brands. Together, these solutions unite Indian ingenuity with Japanese precision for exceptional performance. Through an extensive dealer network, EKL ensures these advanced, reliable products reach customers across India and globally, upholding its legacy as a forward-thinking leader in transforming agriculture and infrastructure.

Learn more at www.escortskubota.com

 

 


Comments

Popular posts from this blog

தைராய்டு புற்றுநோய்க்கு ரோபோ உதவியுடன் தழும்பில்லாத தைராய்டு அகற்றல் சிகிச்சை!

Chennai leads the way for PB Partners, with 62% YoY growth driven by a powerful 12,000+ agent network across Tamil Nadu