பி. எஸ். அப்துர் ரஹ்மான் கிரசென்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் 15வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

 

பி. எஸ். அப்துர் ரஹ்மான் கிரசென்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் 15வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.












சென்னை, ஜனவரி 11, 2026 – பி. எஸ். அப்துர் ரஹ்மான் கிரசென்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் தனது 15வது பட்டமளிப்பு விழாவை இன்று தனது வளாகத்தில் நடத்தியது. இந்த பட்டமளிப்பு விழாவில், 65 முனைவர் பட்டதாரிகள், 774 முதுகலை பட்டதாரிகள் மற்றும் 2152 இளங்கலை பட்டதாரிகள் உட்பட மொத்தம் 2991 பேர் தங்களது பட்டங்களைப் பெற்றனர்.

உயர்ந்த தரவரிசைகளைப் பெற்ற 63 மாணவர்களுக்குத் தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன; இவர்களில் 38 மாணவர்கள் இளங்கலை பட்டதாரிகள் மற்றும் 25 மாணவர்கள் முதுகலை பட்டதாரிகள் ஆவர். இந்த பட்டமளிப்பு விழாவில், 759 மாணவர்கள் நேரடியாகவும், 2232 மாணவர்கள் இணையவழியிலும் கலந்துகொண்டு பட்டங்களைப் பெற்றனர். தமிழக அரசின் உயர்கல்வித் துறை மாண்புமிகு அமைச்சர் டாக்டர் கோவி. செழியன் மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் செயல் தலைவர் டாக்டர் ஜின்னா ரஃபிக் அகமது சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்வில், பிஎஸ்ஏசிஐஎஸ்டி-யின் வேந்தர் திருமதி குர்ரத் ஜமீலா, இணை வேந்தர் திரு. அப்துல் காதிர் ஏ. ரஹ்மான் புகாரி, பொறுப்புத் துணைவேந்தர் டாக்டர் ஏ. பீர் முகமது, இணைத் துணைவேந்தர் உள்ளிட்ட பிரமுகர்களும் உடனிருந்தனர்.

டாக்டர். என். தாஜுதீன், பதிவாளர் டாக்டர். என். ராஜா ஹுசைன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் டாக்டர். எஸ். காஜா மொஹிதீன்,

டாக்டர் கோவி. மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் செழியன் அவர்கள் தனது உரையில் பட்டம் பெற்ற பட்டதாரிகளை வாழ்த்திப் பேசினார். 

தலைமை விருந்தினர் உரை: “தலைமை தாங்குவது என்பது அரசியலுக்கு மட்டுமல்ல;

அது தொழில்துறைக்கும் பொருந்தும் என்பதற்கான

உயரிய எடுத்துக்காட்டாக விளங்குபவர்

டாக்டர் ஜின்னா ரஃபிக் அகமது,

எக்ஸிக்யூட்டிவ் சேர்மேன் –

கோத்தாரி இன்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட்.”

அவரைத் தொடர்ந்து, டாக்டர் பி.எஸ். அப்துர் ரஹ்மான் அவர்களின் பிள்ளைகள், அவரின் உயரிய நோக்கமான கல்வி,

முக்கியமாக பெண் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்தை

உறுதியுடன் முன்னெடுத்து வருகின்றனர்.“பெண் விடுதலைக்கு பாடுபட்ட அனைத்து தலைவர்களும்பெருமைப்படும் வகையில், கிரசன்ட் இன்று அந்த கனவை நிஜமாக்கி வருகிறது.”இந்த உயரிய நோக்கம்,

தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின்

கல்வி மற்றும் சமூக மேம்பாட்டிற்கான

தொலைநோக்குச் சிந்தனையுடன்

முழுமையாக ஒத்திசைந்து நிற்கிறது.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அடிக்கடி கூறுவது போல,“எனக்கு இரண்டு கண்கள் — கல்வியும் மருத்துவமும்.”இன்று,இந்தியாவில் அதிகமாக கல்வி பெற்ற மாநிலம் எது? என்ற கேள்விக்கு தமிழ்நாடு என்ற பதிலை நாம் பெருமையுடன் கூற முடிகிறது.இந்த இலக்கை எட்டியதற்குக் காரணம்,கிரசன்ட் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்ள் உருவாக்கும்தகுதியான பட்டதாரிகளே.“ஒரு தனி மரம் தோப்பாகாது;பலர் இணைந்தால்தான் ஒரு நாடு உருவாகும்.”இன்று பட்டதாரிகளாக நிற்கும் நீங்கள்,இது வரை மாணவர்கள்;இன்றுமுதல் —

பொறுப்புணர்வுள்ள சமூகத்தின் அடையாளங்கள்.”


Comments

Popular posts from this blog

தைராய்டு புற்றுநோய்க்கு ரோபோ உதவியுடன் தழும்பில்லாத தைராய்டு அகற்றல் சிகிச்சை!

மூத்த நகைச்சுவை கலைஞர்கள் முன்னிலையில் இளம் நடிகரின் உற்சாக பங்கேற்பு