கலைஞர் டிவியின் பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சிகள்
கலைஞர் டிவியின் பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சிகள்.
கலைஞர் தொலைக்காட்சியில் பொங்கல் வாரத்தை முன்னிட்டு வருகிற ஜனவரி 14 காலை 10 மணிக்கு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் "லவ் டுடே" சூப்பர்ஹிட் திரைப்படமும், பிற்பகல் 1.30 மணிக்கு எஸ்.ஜே.சூர்யா, லைலா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடிப்பில் அமேசான் பிரைமில் வௌியாகி வரவேற்பை பெற்ற திரில்லர் வெப் சீரியஸான "வதந்தி - பகுதி 1" ஒளிப்பரப்பாக இருக்கிறது.
ஜனவரி 15 அன்று காலை 9 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் நகைச்சுவையான சிறப்பு பட்டிமன்றமும், காலை 10 மணிக்கு விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லெட்சுமி நடிப்பில் "கட்டா குஸ்தி" சிறப்பு திரைப்படமும், பிற்பகல் 1.30 மணிக்கு "வதந்தி - பகுதி 2" மற்றும் மாலை 6 மணிக்கு மணிகண்டன் நடிப்பில் "குடும்பஸ்தன்" சூப்பர்ஹிட் திரைப்படமும் ஒளிப்பரப்பாக இருக்கிறது.
ஜனவரி 16 காலை 10 மணிக்கு சிவகார்த்திகேயன் - பிரியங்கா மோகன் நடிப்பில் "டான்" சூப்பர்ஹிட் திரைப்படமும், பிற்பகல் 1.30 மணிக்கு "வதந்தி - பகுதி 3" ஒளிப்பரப்பாகிறது.
ஜனவரி 17 காலை 10 மணிக்கு சிலம்பரசன் நடிப்பில் "வெந்து தணிந்தது காடு" திரைப்படமும், பிற்பகல் 1.30 மணிக்கு ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் "சிங்கப்பூர் சலூன்" சூப்பர்ஹிட் திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கின்றன.



Comments
Post a Comment