ஹோண்டா கார்ஸ் இந்தியா, முதல் மின்சார SUV-க்கான அறிமுகத்திற்கு முன் நாடு முழுவதும் டெஸ்ட் ரன்.
ஹோண்டா கார்ஸ் இந்தியா, முதல் மின்சார SUV-க்கான அறிமுகத்திற்கு முன் நாடு முழுவதும் டெஸ்ட் ரன்.
Chennai, 31 மார்ச் 2026: இந்தியாவில் பிரீமியம் கார்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் . (HCIL), தனது வரவிருக்கும் பேட்டரி எலக்ட்ரிக் வாகனம் (BEV) SUV-க்கான முதல் நாடு முழுவதும் நடைபெறும் சோதனை ஓட்டத்தை இன்று தொடங்கி வைத்தது. இதன் மூலம் இந்தியாவில் பொதுச் சாலைகளில் நடைபெறும் சோதனை செயல்முறையின் அதிகாரப்பூர்வ தொடக்கம் குறிக்கப்படுகிறது. இது ஹோண்டா நிறுவனத்தின் மின்சார இயக்கத் துறையில் மேற்கொள்ளும் பயணத்தில் ஒரு முக்கிய முன்னேற்றமாகவும், இந்திய வாடிக்கையாளர்களுக்காக முற்றிலும் புதிய மின்சார SUV-ஐ எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட முக்கியமான படியாகவும் அமைந்துள்ளது.
இந்த மாடலின் புரோட்டோடைப் , உலகளவில் Honda 0 α என்று அறியப்படுபவை, ஜப்பான் மொபிலிட்டி ஷோ 2025 யில் வெளிப்படுத்தப்பட்டது.
இந்த சோதனைத் திட்டத்தின் மூலம், வாகனம் இந்தியாவில் காணப்படும் பல்வேறு ஓட்டுநர் சூழ்நிலைகளில் — நெடுஞ்சாலைகள், நகரச் சாலைகள் மற்றும் சவாலான நிலப்பரப்புகள் உட்பட — விரிவாக மதிப்பாய்வு செய்யப்படும். இதில் நீடித்த தன்மை (Durability), கையாள்திறன் (Handling), பயண வசதி (Ride Comfort), செயல்திறன் (Efficiency) மற்றும் மொத்த நம்பகத்தன்மை (Reliability) போன்ற முக்கிய அம்சங்கள் கவனமாக ஆய்வு செய்யப்படுகின்றன. மேலும், அன்றாட பயன்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக வாகனம் கடும் வெப்பநிலை மற்றும் மழைக்கால சூழ்நிலைகளிலும் சோதனை செய்யப்படுவதுடன், பல்வேறு வகையான சார்ஜிங் உள்கட்டமைப்புகளில் சார்ஜிங் செயல்திறனும் மதிப்பாய்வு செய்யப்படும்.
இந்த நிகழ்வில் பேசிய ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு. தகாஷி நகாஜிமா,
“இந்தியா முழுவதும் பொதுச் சாலைகளில் நடைபெறும் சோதனையின் தொடக்கம், எங்கள் மின்மயப்படுத்தல் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இந்தியாவில் ஓட்டுநர் சூழ்நிலைகளும் காலநிலையும் தனித்துவமானவை என்பதால், நிஜ வாழ்க்கை சூழல்களில் எங்கள் மின்சார வாகனத்தை முழுமையாக சோதிப்பது மிகவும் அவசியமானதாகும். இந்த திட்டம், ஹோண்டா நிறுவனத்தின் உலகளாவிய பொறியியல் திறனையும், உள்ளூர் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு அளிக்கும் முக்கிய கவனத்தையும் பிரதிபலிக்கிறது. நம்பகத்தன்மை, வசதி மற்றும் எளிதான பயன்பாட்டை வழங்கும் மின்சார SUV-ஐ அறிமுகப்படுத்தத் தயாராகும் நிலையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.”
வரவிருக்கும் மின்சார SUV, நகர்ப்புற ஓட்டமும் வாழ்க்கை முறை சார்ந்த பயணங்களும் ஆகிய இரண்டிற்கும் ஏற்றவாறு, அன்றாட பயன்பாடுகளின் பரந்த தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த மாடலை 2026–27 நிதியாண்டில் உலகளவில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது; இதில் இந்தியா மற்றும் ஜப்பான் முக்கிய சந்தைகளாக இடம்பெறுகின்றன. மேலும், இந்த வாகனம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு உலகளாவிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவும் உள்ளது.
About Honda Cars India Ltd.
Honda Cars India Ltd. (HCIL), a leading manufacturer of premium cars in India, was established in December 1995 with a commitment to provide Honda’s passenger car models and technologies to the Indian customers. HCIL’s corporate office is based in Greater Noida, UP and its state-of-the-art manufacturing facility is located at Tapukara, District. Alwar, Rajasthan.
Honda’s models are strongly associated with advanced design and technology, apart from their established qualities of durability, reliability, safety, and fuel-efficiency. The company has a strong sales and distribution network spread across the country.
Besides the new car business, Honda offers a stop solution for buying and selling pre-owned cars through its business function, Honda Auto Terrace. The Honda Certified Pre-owned cars come with an assurance of quality and peace of mind that caters to the diverse and burgeoning needs of pre-owned car buyers across the country.
For further information, please contact:
Honda Cars India Ltd.
Saba Khan - saba@hondacarindia.com
Vivek Anand Singh- vasingh@hondacarindia.com
Burson Genesis
Snigdha Sidhra- snigdha.sidhra@genesis-bcw.com
Ruchi Tiwari - ruchi.tiwari@bursonglobal.com
.jpeg)
.jpeg)
.jpeg)

Comments
Post a Comment