ஜோய்ஆலுக்காஸ் ‘பிரில்லியன்ஸ் வைர நகை கண்காட்சி’

 ஜோய்ஆலுக்காஸ் ‘பிரில்லியன்ஸ் வைர நகை கண்காட்சி’

தி.நகர், சென்னையில், ஜூன் 5 முதல் 21 வரை.



சென்னை, தமிழ்நாடு – ஜூன் 2026: உலகின் ஃபேவரிட் ஜுவல்லர் ஜோய்ஆலுக்காஸ், தனது சென்னை தி.நகர் ஷோரூமில் ஜூன் 5, 2026 முதல் ‘பிரில்லியன்ஸ் வைர நகை கண்காட்சியை’ நடத்துகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தக் கண்காட்சி, வைர நகை வடிவமைப்பில் தலைசிறந்த கைவினைத்திறன், வடிவமைப்பு நேர்த்தி மற்றும் புதுமையை கொண்டாடும் ஒரு நிகழ்வாக அமையும். 

பிரம்மாண்டமான மணப்பெண் நகைத் தொகுப்புகள் முதல் தினசரி அணியும் நவீன வைர நகைகள் வரை கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும். பாரம்பரியத்துடன், காலத்தால் அழியாத அழகையும் நவீன வடிவமைப்பையும் ஒருங்கிணைக்கும் பல்வேறு சிறப்புமிக்க நகைகள் இக்கண்காட்சியில் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு வடிவமைப்பும் ஒரு கலைப்படைப்பாக திகழ்கிறது, இது கண்காட்சி நடைபெறும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும்.

ஜோய்ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர்.ஜோய்ஆலுக்காஸ் கூறுகையில், 'பிரில்லியன்ஸ் வைர நகை கண்காட்சி’ என்பது வைரங்களின் மீதுள்ள கவர்ச்சிக்கும், நகை வடிவமைப்பில் முழுமையை நோக்கிய எங்கள் அர்ப்பணிப்பிற்கும் சாட்சியாக அமையும். சென்னை எங்கள் இதயத்தில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. இந்தக் கண்காட்சி வாடிக்கையாளர்களுக்கு அழகு, தனித்துவம் மற்றும் சிறந்த கைவினைத்திறனை பிரதிபலிக்கும் பிரத்யேக வடிவமைப்புகளைக் கண்டறியும் அரிய வாய்ப்பை வழங்கும்,” என்றார்.

இந்த சிறப்பு நிகழ்வைக் கொண்டாடும் வகையில், கண்காட்சி காலத்தில் ₹1 லட்சம் மற்றும் அதற்கு மேல் மதிப்புள்ள வைர நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச தங்க நாணயம் வழங்கப்படும். இது அவர்களின் ஷாப்பிங் அனுபவத்திற்கு மேலும் பிரகாசம் சேர்க்கும்.

‘பிரில்லியன்ஸ் வைர நகை கண்காட்சி’, சென்னை தி.நகரில் உள்ள ஜோய்ஆலுக்காஸ் ஷோரூமில், 2026 ஜூன் 21 வரை நடைபெறும். ஆடம்பரம், அழகு மற்றும் காலத்தால் அழியாத கவர்ச்சியின் கதையைச் சொல்லும் வைர நகைகளின் அற்புத உலகத்திற்கு அனைவரையும் வரவேற்கிறோம்.




Comments

Popular posts from this blog

தைராய்டு புற்றுநோய்க்கு ரோபோ உதவியுடன் தழும்பில்லாத தைராய்டு அகற்றல் சிகிச்சை!

DAC Developers Appoints A.R. Rahman as its Brand Ambassador

ஜெயலலிதா ஜோதிடர் ஜமால் கணிப்பு – 2026 தேர்தலில் ஆட்சி மாற்றமா?