“ஒவ்வொரு மாணவரின் திறமை, ஆர்வம் மற்றும் சிந்தனைகளை ஆசிரியர்கள் வளர்த்தெடுக்க வேண்டும்” ஆசிரியர் தினக் கொண்டாட்டத்தில் நிறுவன வேந்தர் டாக்டர் டி. ஆர். பாரிவேந்தர் வலியுறுத்தல்.

 “ஒவ்வொரு மாணவரின் திறமை, ஆர்வம் மற்றும் சிந்தனைகளை ஆசிரியர்கள் வளர்த்தெடுக்க வேண்டும்” ஆசிரியர் தினக் கொண்டாட்டத்தில் நிறுவன வேந்தர் டாக்டர் டி. ஆர். பாரிவேந்தர் வலியுறுத்தல்.






எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (SRMIST) சார்பில் ஆசிரியர் தினம் 2026 சிறப்பு நிகழ்ச்சியாகக் கொண்டாடப்பட்டது. பல்கலைக்கழக நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் பங்கேற்ற இந்நிகழ்வு, இளம் தலைமுறையினரின் அறிவு, திறன் மற்றும் ஆளுமையை வடிவமைத்து, எதிர்கால தலைமுறையினரை உருவாக்குவதில் ஆசிரியர்கள் ஆற்றிவரும் அளப்பரிய பங்களிப்பைப் போற்றும் வகையில் நடைபெற்றது.


மாறிவரும் காலச் சூழலுக்கேற்ப ஆசிரியர்களின் பங்கு தொடர்ந்து பரிணமித்து வருவதையும், மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்குவதன் முக்கியத்துவத்தையும், வேகமாக மாறிவரும் உலகை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களைத் தயார்படுத்துவதில் கல்வியின் பங்களிப்பையும் இந்நிகழ்வு எடுத்துரைத்தது.


நிகழ்வில் உரையாற்றிய எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் மாண்புமிகு *நிறுவன வேந்தர்* *டாக்டர் டி. ஆர். பாரிவேந்தர் அவர்கள் கூறியதாவது* : “ஆசிரியர் தினம் என்பது ஒவ்வொரு ஆசிரியரையும், ஒவ்வொரு மாணவரையும் இணைத்து கொண்டாடப்படும் நாளாக இருக்க வேண்டும். நமது வளாகம் முழுவதும் சுமார் 3,300 மரக்கன்றுகளை நட்டு, ஒவ்வொரு எஸ்.ஆர்.எம். பேராசிரியரின் பெயரும் அந்த மரக்கன்றில் பொறிக்கப்பட்டு, வளாகத்தை படிப்படியாக பசுமையாக்கி வருகிறோம். அதேபோன்று, ஒவ்வொரு மாணவரிடமும் உள்ள தனித்துவமான திறமை, ஆர்வம் மற்றும் சிந்தனைகளையும் நாம் வளர்த்தெடுக்க வேண்டும். ஒவ்வொரு கண்டுபிடிப்பிற்கும் தொடக்கப்புள்ளியாக இருப்பது ஒரு சிந்தனையே. அந்த அறிவாற்றலை அடையாளம் கண்டு, ஊக்குவித்து, வெளிக்கொணர்வது ஆசிரியரின் பொறுப்பாகும்.” 


மாணவர்களிடம் காணப்படும் தனித்திறன், ஆர்வம் மற்றும் சிந்தனைகளை அடையாளம் கண்டு, அவற்றை முறையாக வளர்த்தெடுப்பதுடன், அவர்களிடம் நற்பண்புகள், உயரிய மதிப்பீடுகள் மற்றும் புதுமைச் சிந்தனைகளை வளர்ப்பதில் ஆசிரியர்களுக்கு உள்ள முக்கியப் பொறுப்பையும் அவர் வலியுறுத்தினார்.


நிகழ்வில் பேசிய *எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி. முத்தமிழ்ச்செல்வன் அவர்கள் கூறியதாவது:* “மாணவர்களை அவர்களின் தொழில் வாழ்க்கைக்காக மட்டும் நாம் தயார்படுத்தப் போவதில்லை; அவர்களின் வாழ்க்கைக்காகவே நாம் அவர்களைத் தயார்படுத்தப் போகிறோம்.”

கல்வி மற்றும் வழிகாட்டுதலின் வாயிலாக மாணவர்களுக்குத் தேவையான அறிவு, நற்பண்புகள் மற்றும் வாழ்க்கைத் திறன்களை வழங்கி, அவர்கள் வாழ்க்கையின் சவால்களைத் திறம்பட எதிர்கொள்ளவும், சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கவும் ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


இந்நிகழ்வில் ஆசிரியர்கள் தங்களது கற்பித்தல் அனுபவங்கள், மாணவர்களுக்கு வழங்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் மாணவர்களிடமிருந்து தாங்கள் பெற்ற ஊக்கங்கள் குறித்த தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். ஆசிரியர்–மாணவர் உறவு என்பது கல்வி நிலையைக் கடந்தும் நீடிக்கும் ஆழமான பிணைப்பாக இருப்பதை அவர்களின் பகிர்வுகள் எடுத்துக்காட்டின.


ஆசிரியர் தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (SRMIST) சார்பில் மலர்ச்செடி நடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதன் கீழ், ஒவ்வொரு ஆசிரியருக்கும் அவர்களின் பெயர் பொறிக்கப்பட்ட மலர்ச்செடி வழங்கப்பட்டு, அவை வளாகத்தின் பொருத்தமான இடங்களில் நடப்பட உள்ளன. இதன் கீழ், ஒவ்வொரு ஆசிரியருக்கும் அவர்களின் பெயர் குறிப்பிடப்பட்ட மலர்ச்செடி வழங்கப்பட்டு, வளாகத்தில் பொருத்தமான இடங்களில் அவை நடப்பட உள்ளன.


இந்த முன்னெடுப்பு வளர்ச்சி, அறிவு மற்றும் நன்றியுணர்வின் அடையாளமாக அமைவதுடன், வளாகத்தின் பசுமைப் பரப்பை விரிவுபடுத்தி, உயிரியல் பல்வகைமையை மேம்படுத்தும் நோக்கத்தையும் கொண்டுள்ளது. ஆசிரியர்களின் பெயர்களுடன் மலர்ச்செடிகளை வளர்ப்பதன் மூலம், ஆசிரியர்களின் பங்களிப்பையும் மாணவர்களின் வளர்ச்சியையும் இயற்கையுடன் இணைக்கும் சிறப்பான முன்னெடுப்பாக இது அமைகிறது.


ஆசிரியர்கள் கல்விச் சிறப்பு, புதுமைச் சிந்தனை, நிறுவன வளர்ச்சி மற்றும் பொறுப்புணர்வுமிக்க குடிமக்களை உருவாக்குதல் ஆகியவற்றின் அடித்தளமாகத் திகழ்கின்றனர் என்பதை மீண்டும் வலியுறுத்தும் வகையில் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆசிரியர் தினக் கொண்டாட்டம் அமைந்தது. மாணவர்களின் அறிவாற்றல், தனித்திறன் மற்றும் சிந்தனைகளை அடையாளம் கண்டு, அவற்றை வளர்த்தெடுத்து, சமூகத்திற்குப் பயனளிக்கும் எதிர்கால தலைமுறையை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்களிப்பை எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் தொடர்ந்து போற்றி வருகிறது.

Comments

Popular posts from this blog

DAC Developers Appoints A.R. Rahman as its Brand Ambassador

ஜெயலலிதா ஜோதிடர் ஜமால் கணிப்பு – 2026 தேர்தலில் ஆட்சி மாற்றமா?

மூத்த நகைச்சுவை கலைஞர்கள் முன்னிலையில் இளம் நடிகரின் உற்சாக பங்கேற்பு