Apollo Spectra Hospitals is among the first hospitals in South India to launch the latest and most advanced treatment for Piles - RAFAELO procedure
தென்னிந்தியாவில் முதன்முறையாக மூல நோய்க்கு ரஃபேலோ செயல்முறை என்னும் நவீன சிகிச்சையை அறிமுகம் செய்த அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனை.
சென்னை, மே 21, 2025: தென்னிந்தியாவின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றான அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனையும், புகழ்பெற்ற பெருங்குடல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வாணி விஜய் அவர்களும் இணைந்து, உட்புற மூல நோய்க்கான புதிய, குறைந்தபட்சஅறுவை சிகிச்சையான 'ரஃபேலோ' ரேடியோ அலை சிகிச்சையை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த நவீன நடைமுறை துல்லியமான செய்முறை, விரைவான குணமடைதல் மற்றும் குறைந்த அபாயத்துடன் கூடிய பகல்நேர சிகிச்சையாகும். சென்னை அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனையின் ரோபோடிக் அறுவை சிகிச்சை மூத்த ஆலோசகர் டாக்டர் வாணி விஜய் மற்றும் அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனைகளின் தலைமை இயக்க அதிகாரி மற்றும் இரண்டாம் நிலை பராமரிப்பு கூட்டாளர் வலையமைப்பின் தலைவரான திருமதி ருபிந்தர் கவுர் ஆகியோர் இந்த சிகிச்சையை அறிமுகம் செய்து வைத்தனர். அறிமுக நிகழ்ச்சியில் நடிகை பார்வதி நாயர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இந்தியாவில் சுமார் 40 மில்லியன் பேர் மூலநோயால் பாதிக்கப்படுகின்றனர்; இந்நோய் பெரும்பாலும் 45 முதல் 65 வயதுக்குட்பட்டவர்களிடம் காணப்படுகிறது. அறுவை சிகிச்சை அச்சம் காரணமாக பலர் சிகிச்சையைத் தவிர்க்கும் சூழலில், ரஃபேலோ செயல்முறை ரேடியோ அலை அகற்றலை அடிப்படையாகக் கொண்டு குறைந்தபட்ச அறுவை சிகிச்சையைக் கொடுக்கிறது. இது குறிப்பிட்ட பகுதியை மயக்க மருந்து மூலம் சிகிச்சை செய்யும், குறைந்த அசௌகரியத்துடன் விரைவான குணமடைதலை தரும் ஒரு பகல்நேர சிகிச்சையாகும். ரஃபேலோ செயல்முறை, கட்டுப்படுத்தப்பட்ட வெப்ப ஆற்றலை வழங்கும் சிறப்பு உட்செலுத்தும் கருவியின் மூலம், மூல நோய் தசைகளில் உறைதல், நீரிழப்பு மற்றும் சுருக்கத்தை ஏற்படுத்துகிறது. இது ஆரோக்கிய திசுக்களுக்கு பாதிப்பில்லாமல், பாதிக்கப்பட்ட திசுக்களையே இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. இரவு முழுவதும் தங்கி முதுகெலும்பு அல்லது பொது மயக்க மருந்து மூலம் அறுவை சிகிச்சை மூலம் 2-3 வாரங்களுக்கு பிறகான நோய் தீர்வு உடைய வழக்கமான சிகிச்சைகளுடன் ஒப்பிடும்போது. இப்புதிய ரஃபேலோ சிகிச்சை சுமார் 15-20 நிமிடங்களில் முடிவடைகிறது, மேலும் நோயாளிகள் சிகிச்சை தினத்தன்றே வீடு திரும்பலாம்.
சென்னை அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனையின் GI – குறைந்தபட்ச மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை மூத்த ஆலோசகர் டாக்டர் வாணி விஜய், MBBS, MS, தெரிவித்ததாவது, "ரஃபேலோ செயல்முறை, மூலநோய் சிகிச்சையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை குறிக்கிறது. குறைந்தபட்ச அறுவைசிகிச்சை கொண்ட ரேடியோ அலை தொழில்நுட்பத்தின் மூலம் நோயாளிகள் விரைவாக குணமடைவதுடன், குறைந்த அசௌகரியத்துடன் நீண்டகால நல்விளைவுகளையும் பெறுகின்றனர். தென்னிந்தியாவில் இந்த நுட்பத்தை ஆரம்பத்திலேயே ஏற்றுக்கொண்டவர்களில் ஒருவராகவும், ஒரு புரோக்டராகவும், 150 க்கும் மேற்பட்ட சிகிச்சைகளின் மூலம் அதன் துல்லியத்தையும் செயல்திறனையும் நான் நேரில் கண்டிருக்கிறேன். புரோக்டாலஜியில் இது ஒரு பெரிய மாற்றமாகும், ஏனெனில் இது நம்பிக்கையுடனும் பாதுகாப்புடனும் நிவாரணம் வழங்கும் சிகிச்சையாக விளங்குகிறது."
ரஃபேலோ செயல் முறையானது, 30 முதல் 60 வயதுடைய நோயாளிகள், குறிப்பாக இரத்தப்போக்கு, வலி அல்லது இறக்கம் போன்ற அறிகுறிகள் மற்றும் நீண்ட நேரம் அமர்ந்த நிலை வேலைசெய்பவர்கள், பிரசவத்திற்குப் பிந்தைய பெண்கள் ஆகியோருக்கு மிகுந்த பயனுள்ளதாக உள்ளது. இது நவீன வாழ்க்கைமுறைக்கு ஏற்ற, விரைவான, குறைந்த செயல்பாட்டு சிகிச்சையை வழங்குகிறது. சிகிச்சைக்கு பிறகு பெரும்பாலான நோயாளிகள் 24-48 மணி நேரத்தில் தங்கள் வேலைக்கு திரும்பி, இரண்டு நாட்களுக்குள் குறுகிய பயணத்தையும் மேற்கொள்ள முடியும். 3 வாரங்களுக்கு கடுமையான செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும், மேலும் தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலுடன், குணமடைதல் சீராகவும் ஓய்வு நேரம் குறைவாகவும் இருக்கும்.
அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனையில், ரஃபேலோ பிளஸ் போன்ற கூடுதல் சிகிச்சை முறைகளும் உள்ளது, இது மூலநோய், பிளவுகள் அல்லது ஃபிஸ்துலா போன்ற தொடர்புடைய நோய்களுக்கு ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்க உதவுகிறது. மேலும், ஆசனவாய் ஃபிஸ்துலா போன்றவை குணமாக்க ரேடியோ அலைகளின் அடிப்படையில் செயல்படும் ஃபிஸ்துரா சிகிச்சை, அதன் குறைந்தபட்ச அறுவை சிகிச்சை முறையை மேலும் விரிவுபடுத்துகிறது. அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனைகள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் புரோக்டாலஜிஸ்டுகளுக்கு ரஃபேலோ நடைமுறையில் நேரடி பயிற்சி அளிக்கும் சிறப்பு பயிற்சி பட்டறைகளை நடத்துகின்றன. குறைந்தபட்ச அறுவை சிகிச்சை மற்றும் பெருங்குடல் பராமரிப்பில் முன்னேற்றங்களை ஊக்குவிக்க மருத்துவ பயிற்சிகளில் மருத்துவமனையின் உறுதிப்பாட்டை இப்பயிற்சி பட்டறைகள் பிரதிபலிக்கின்றன.
அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனைகள் பற்றி:
அப்பல்லோ ஹெல்த் அண்ட் லைஃப்ஸ்டைல் லிமிடெட் (AHLL) இன் ஒரு பகுதியான அப்பல்லோ ஸ்பெக்ட்ரா, இந்தியாவின் மிகப்பெரிய பல்துறை குறுகிய கால அறுவை சிகிச்சை மருத்துவமனைகளின் நெட்வொர்க்காகும். 16 நகரங்களில் 22க்கும் மேற்பட்ட மையங்கள், 350,000க்கும் மேற்பட்ட வெற்றிகரமான அறுவைசிகிச்சைகள் மற்றும் 3,000க்கும் மேற்பட்ட முன்னணி மருத்துவர்களைக் கொண்ட குழுவுடன், அப்பல்லோ ஸ்பெக்ட்ரா ஒரு கச்சிதமான, வசதியான சூழலில் உலகத்தரம் வாய்ந்த பராமரிப்பை வழங்குகிறது. எலும்பியல், பொது அறுவைசிகிச்சை, சிறுநீரகவியல், மகளிர் மருத்துவம், உடல்பருமன் குறைத்தல், காது, மூக்கு, தொண்டை, இரைப்பை குடல் மற்றும் முன்கூட்டிய நோய்தடுப்பு பராமரிப்பு ஆகியவை இதன் சிறப்பம்சங்களில் அடங்கும். இது மருத்துவ சிறப்பையும் தனிப்பயனாக்கப்பட்ட பராமரிப்பையும் ஒரே கூரையின் கீழ் வழங்குகிறது.
அப்பல்லோ ஹெல்த் அண்ட் லைஃப்ஸ்டைல் லிமிடெட் பற்றி
அப்பல்லோ மருத்துவமனைகளின் துணை நிறுவனமான அப்பல்லோ ஹெல்த் அண்ட் லைஃப்ஸ்டைல் லிமிடெட் (AHLL), 2002 முதல் இந்தியாவின் சுகாதாரத்துறையில் செயல்பட்டு வருகிறது. "ஒரு பில்லியன் உயிர்களை குணப்படுத்த வேண்டும்" எனும் தொலைநோக்குப் பார்வையுடன், AHLL கடந்த 20 ஆண்டுகளில் 5,500க்கும் மேற்பட்ட மருத்துவர்களின் நெட்வொர்க் மூலம் 20 மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துள்ளது. நோயாளிகளின் வீடுகளுக்கு அருகில் அணுகக்கூடிய மற்றும் நம்பகமான சிகிச்சையை வழங்குவதே இதன் நோக்கமாகும், இது பெரிய மருத்துவமனைகளுக்கு அடிக்கடி வருகை தரவேண்டிய தேவையைக் குறைக்கிறது. பாரம்பரிய பெரிய மருத்துவமனை அமைப்புகளுக்கு வெளியே உள்ள மக்களின் அன்றாட ஆரோக்கியத் தேவைகளை நிவர்த்தி செய்யும் திறன்கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய சுகாதாரப் பராமரிப்பு நெட்வொர்க்கைAHLL நிறுவியுள்ளது.
Apollo Spectra Hospitals
is among the first hospitals in South India to launch the latest and most
advanced treatment for Piles - RAFAELO procedure
A major breakthrough,
Apollo Spectra Hospital sets a new benchmark in Proctology care in Chennai and South
India
Chennai
(Tamil Nadu) [India], 21st May 2025: Apollo Spectra Hospitals, in association with
eminent colorectal surgeon Dr. Vani Vijay,
Senior Consultant (GI - Minimally Invasive & Robotic Surgery), is proud to
announce the introduction and launch of the revolutionary Rafaelo Procedure
(Radiofrequency Ablation of Haemorrhoids under Local Anaesthesia) — a
cutting-edge, minimally invasive radiofrequency therapy for haemorrhoids that offers
precise delivery and quick recovery. Dr. Vani is one of the few experts in the
country pioneering this advanced minimally invasive surgical technique,
typically performed as a daycare procedure, offering patients faster recovery,
reduced pain, significantly fewer risks, and best-in-class outcomes.
Apollo
Spectra Hospitals, part of the renowned Apollo Hospitals Group, is India’s
largest network of multispeciality short-stay surgical hospitals, specialising
in planned daycare surgeries across key specialities, with a strong focus on
Proctology care, especially haemorrhoids, or commonly known as piles. The
condition affects around 40 million people in India, with a million new cases
yearly, most common between the ages of 45 and 65. Many avoid treatment due to
stigma or fear of surgery. The Rafaelo Procedure offers a minimally invasive,
daycare solution using radiofrequency ablation. Performed under regional
anaesthesia, it causes minimal discomfort and enables a quicker return to
normal activities.
The
Rafaelo Procedure is carried out by utilising a specialised probe to deliver
controlled radiofrequency energy to haemorrhoidal tissue. This causes
coagulation, dehydration, and contraction of the haemorrhoidal cushions,
symptomatically treating without annihilating intervening healthy tissue. The
treatment is around 30 minutes and is suited to same-day discharge. Compared to
conventional hemorrhoidectomy, wherein a surgical excision is done with spinal
or general anaesthesia involving overnight stay with a 2–3-week recovery time,
the Rafaelo Procedure is simpler and less invasive. Since this procedure does
not involve tissue incision, it preserves the surrounding anatomy, minimising
trauma, and greatly accelerates healing. It’s a perfect reflection of modern surgical
goals—better results with faster recovery and fewer hospitalisations.
Conventional procedures may have certain degree of risk involved with
infection, bleeding, and anal stenosis in some cases, whereas Rafaelo's
non-surgical procedure prevents these complications and recovers at a faster
rate.
Dr.
Vani Vijay – Senior Consultant GI - Minimally Invasive & Robotic Surgery,
Apollo Spectra Hospital, Chennai, said, "The Rafaelo Procedure
marks a significant advancement in the treatment of haemorrhoids. With its
minimally invasive radiofrequency technology, patients experience faster
recovery, minimal discomfort, and excellent recovery with minimal or no chances
of relapse. As a proctor and one of the early adopters of this technique in
South India, I have personally witnessed its precision and effectiveness in
over 150 cases. It's a game-changer in proctology, offering relief with
confidence and safety."
Globally Rafaelo
Procedure is more preferred among patients aged 30–60, especially working
professionals with symptoms like bleeding, pain, or prolapse who can't afford
long recovery times. Those in sedentary jobs—like IT workers, corporate staff,
and drivers—are particularly at risk. Postpartum women also seek this gentle,
effective solution. Rafaelo offers a quick, low-downtime treatment that suits
modern lifestyles. Most patients can resume desk work in 24–48 hours and short
travel within a couple of days. Strenuous activity should be avoided for 3
weeks. With personalised guidance, recovery is smooth and downtime is minimal.
“At
Apollo Spectra Hospitals, we are committed to delivering the latest
advancements and cutting-edge innovations in surgical care. Proud to be one of
the leading centres in South India for the Rafaelo Procedure, reflecting our
mission to bring global innovations to Indian healthcare while maintaining the
highest standards of safety and excellence. This
unique treatment is set to be a game changer in our fight against piles” said Ms. Rupinder Kaur, COO, Apollo Spectra Hospitals and
Head of Secondary Care Partner Network.
Addressing the gathering, actress Parvathy Nair,
who is known for her work in South Indian cinema and her roles in critically
acclaimed films has been a strong advocate for preventive healthcare, she said,
“It is heartening to see Apollo's relentless pursuit of healthcare
excellence through investments in future-ready medical technology. As someone
who strongly believes in the power of preventive health, I can’t stress enough
on the importance of putting our health first—before symptoms force us to.
Regular health check-ups, early detection, a balanced diet, staying physically
active, and being mindful of our mental well-being are
the simple yet powerful tools we all have access to. Let’s
continue to make fitness as a priority in our lives—not just through exercise,
but by being proactive about our health choices.”
Apollo
Spectra Hospital has expanded its minimally invasive treatment offerings with
innovative procedures like Rafaelo PLUS, which allows for the simultaneous
treatment of hemorrhoids and related conditions (fissures or fistulas) in a
single procedure. They also offer FISTURA, a radiofrequency-based treatment
specifically for anal fistulas. Apollo Spectra Hospitals also conducts
specialist Rafaelo Procedure workshops, providing hands-on training to surgeons
and proctologists. The workshops reflect the hospital's commitment to
facilitating surgical innovation and minimally invasive colorectal care.
About Apollo Spectra Hospitals
Apollo Spectra, a part of Apollo Health and Lifestyle Limited
(AHLL), is India’s largest network of multi-speciality short-stay
surgical hospitals. With over 22 centres across 16 cities, more than 350,000
successful surgeries, and a team of over 3,000 leading doctors, Apollo Spectra
provides world-class care in a compact, convenient setting. Specialities
include orthopaedics, general surgery, urology, gynaecology, bariatrics, ENT,
gastroenterology, and preventive health, delivering clinical excellence and
personalised care under one roof.
About
Apollo Health and Lifestyle Limited
Apollo
Health and Lifestyle Limited (AHLL), a subsidiary of Apollo Hospitals, has been
operating in India’s healthcare sector since 2002. With a vision to “touch a
billion lives,” AHLL has treated over 20 million patients through a network of
more than 5,500 doctors over the past 20 years. Its mission is to provide
accessible and reliable treatment close to patients’ homes, reducing the need
for frequent visits to large hospitals. AHLL has established India’s largest
healthcare network, capable of addressing the daily healthcare needs of people
outside traditional large hospital settings.
Media Contact: P.Dhamodharan / 9790844320 / info.chennaipr@gmail.com
Comments
Post a Comment