மூத்த நகைச்சுவை கலைஞர்கள் முன்னிலையில் இளம் நடிகரின் உற்சாக பங்கேற்பு
ஓசூரில் புத்தாண்டு 2026: மூத்த நகைச்சுவை கலைஞர்கள் முன்னிலையில் இளம் நடிகரின் உற்சாக பங்கேற்பு. ஓசூர், தமிழ்நாடு: ஓசூரில் புத்தாண்டு 2026-ஐ முன்னிட்டு நடைபெற்ற பிரம்மாண்ட கொண்டாட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த விழாவில் தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை கலைஞர்கள் ஆர்த்தி மற்றும் கணேஷ்கர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, தங்களது கலகலப்பான மேடை நிகழ்ச்சிகளால் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து மேடையில் தோன்றிய இளம் நடிகர் கதிரவன் ரசிகர்களிடையே பேராரவாரத்தை ஏற்படுத்தினார். மூத்த கலைஞர்களுக்கு மரியாதை செலுத்தி, அவர்களுடன் இணைந்து மேடையைப் பகிர்ந்துகொண்ட அவரது பண்பான அணுகுமுறை அனைவரின் பாராட்டையும் பெற்றது. நிகழ்ச்சியின் போது நடிகர் கதிரவன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது. DJ இசை, லைவ் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், நடனம் மற்றும் இன்டர்ஐக்டிவ் அம்சங்களுடன் இந்த புத்தாண்டு விழா முழு உற்சாகத்துடன் நடைபெற்றது. இந்த பிரம்மாண்ட கொண்டாட்டம் MM Food Court வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை இயக்குநர் தரகன்.டி தலை...