இறுதிக்கட்ட பரபரப்பில் கலைஞர் டிவி சீரியல் ருத்ரா..!

 இறுதிக்கட்ட பரபரப்பில் கலைஞர் டிவி சீரியல் ருத்ரா..!






கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 7.30 மணிக்கு ஔிபரப்பாகி வரும் “ருத்ரா” மொகாத்தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தற்போது இந்த தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது. சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் விறுவிறுப்பாக நகர்ந்து வரும் திரைக்கதையில் தற்போது, விக்ரம் கடத்த திட்டமிட்டிருந்த வைரங்கள் ருத்ராவின் கைக்கு கிடைக்க, ருத்ராவிடம் இருந்து அதனை அபகரிக்க ருத்ராவுக்கு உதவுவது போல் நடிக்கும் விக்ரம் நல்லவன் போல் நாடகமாடுகிறார்.

 

மறுபுறம், தற்கொலை செய்து கொள்வதாக ருத்ராவை ஏமாற்றும் காவ்யா, ருத்ராவை கொலை செய்ய திட்டமிட, காவ்யாவை வைத்து ருத்ராவிடம் இருந்து வைரத்தை வாங்க விக்ரம் திட்டமிடுகிறார்.

 

இறுதியில், ருத்ரா தன் தங்கை காவ்யாவை காப்பாற்றினாரா? வைரத்தை அபகரிக்க நினைக்கும் விக்ரம் கும்பலை கைது செய்வாரா? என்கிற பரபரப்போடு தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

Comments

Popular posts from this blog

தைராய்டு புற்றுநோய்க்கு ரோபோ உதவியுடன் தழும்பில்லாத தைராய்டு அகற்றல் சிகிச்சை!

DAC Developers Appoints A.R. Rahman as its Brand Ambassador

மூத்த நகைச்சுவை கலைஞர்கள் முன்னிலையில் இளம் நடிகரின் உற்சாக பங்கேற்பு