முதல் 100 மின்சார டிராக்டர் டிரக்குகளை களமிறக்கி, கனரக டிரக்கிங் துறையில் புயலாகக் களமிறங்குகிறது AMPSTAR
முதல் 100 மின்சார டிராக்டர் டிரக்குகளை களமிறக்கி, கனரக டிரக்கிங் துறையில் புயலாகக் களமிறங்குகிறது AMPSTAR AMPSTAR-இன் 4x2 மற்றும் 6x4 மின்சார டிராக்டர் டிரக்குகள் CMVR சான்றிதழையும் பெற்றுள்ளன சென்னை 28 அக்டோபர் 2026: JSW குழுமத்தின் மின்சார வணிக வாகனப் பிரிவான JSW Greentech Limited, AMPSTAR மின்சார டிரக்குகளின் முதல் வர்த்தக விற்பனையை இன்று அறிவித்துள்ளது. விஜயநகரில் உள்ள JSW Cement நிறுவனத்தில் கனரக தொழில் துறை சரக்குப் போக்குவரத்திற்காக 100 AMPSTAR 4x2 55T டிராக்டர் டிரக் மின்சார பிரைம் மூவர்களுக்கான (Electric Prime Movers) ஆர்டரைப் பெற்றுள்ளது. பேட்டரி சேவை (Battery-as-a-Service - BaaS) வழங்கும் நிறுவனமாக JSW Eco-Mobility மற்றும் லாஜிஸ்டிக் போக்குவரத்து (Logistics) பார்ட்னரான Paradeep பரிவாஹன் லிமிடெட் ஆகியவற்றுடன் இணைந்து இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இந்திய வாகன ஆராய்ச்சிச் சங்கத்திடமிருந்து (ARAI), மத்திய மோட்டார் வாகன விதிகளின் (CMVR) கீழ் AMPSTAR 4x2 மற்றும் 6x4 டிராக்டர் டிரக்குகள் சான்றிதழைப் பெற்றுள்ள வேளையில் இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், ...