உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் புதிய முன்னெடுப்பு!

 உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் புதிய முன்னெடுப்பு!


உஜ்ஜீவனின் வாட்ஸ்அப் பேங்கிங் சேனலின் 900 208 2121 என்ற எண் மூலமாகவே நேரடியாக சேமிப்புக் கணக்கைத் தொடங்கலாம்! 


 


சென்னை 10 நவம்பர் 2026: உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Ujjivan SFB) இந்திய வங்கித் துறையிலேயே முதன்முறையாக, தனது வாட்ஸ்அப் பேங்கிங் சேனலான 900 208 2121 மூலமாக நேரடியாக சேமிப்புக் கணக்குத் தொடங்கும் புதிய சேவையை இன்று அறிவித்துள்ளது. தகுதியுள்ள புதிய வாடிக்கையாளர்கள் தனி வங்கிச் செயலியைப் (Banking App) பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமின்றி, வாட்ஸ்அப் வழியாகவே எளிதாக சேமிப்புக் கணக்கைத் தொடங்க இந்த வசதி வழிவகுக்கிறது.


 


இந்த முறை மிகவும் எளிமையான படிநிலைகளைக் கொண்டது. புதிய வாடிக்கையாளர் 900 208 2121 என்ற எண்ணிற்கு ‘Hi’ என அனுப்பி, ‘Open Savings Account’ என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மொபைல் எண் மற்றும் PAN சரிபார்ப்பிற்குப் பிறகு, வாடிக்கையாளரின் CKYC அல்லது ஆதார் சரிபார்க்கப்பட்டு, தனிநபர் விவரங்கள் தானாகவே பூர்த்தி செய்யப்படும். தொடர்ந்து, வாடிக்கையாளர் தங்களுக்குத் தேவையான சேமிப்புக் கணக்கு வகையைத் தேர்ந்தெடுத்து, பணத்தைச் செலுத்தி, வீடியோ KYC (Video KYC)-ஐ நிறைவு செய்யலாம். சரிபார்ப்பு முடிந்ததும் வாடிக்கையாளர்கள் உடனடியாகக் கணக்கைப் பயன்படுத்தத் தொடங்கலாம்.


 


வாடிக்கையாளர்கள் ஏற்கனவே நன்கறிந்த, பாதுகாப்பாக உணரும் ஒரு உரையாடல் தளத்திற்கு (Conversational Platform) டிஜிட்டல் வங்கிச் சேவைகளைக் கொண்டுவரும் உஜ்ஜீவன் SFB-ன் உத்தியை இந்த புதிய முயற்சி மேலும் வலுப்படுத்துகிறது. வாடிக்கையாளர்கள் புதிய இடைமுகத்தைக் கற்றுக்கொள்ளவோ அல்லது தனிச் செயலியை நிறுவவோ தேவையின்றி, வாட்ஸ்அப் பயன்பாட்டிற்குள்ளேயே கணக்கு தொடங்குவது மற்றும் அன்றாட வங்கிச் சேவைகளைப் பெறுவதற்கான மற்றொரு எளிய வழியை உஜ்ஜீவன் SFB தற்போது வழங்குகிறது.


 


வங்கியில் தற்போது 15 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உஜ்ஜீவன் SFB-ன் வாட்ஸ்அப் பேங்கிங் தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். வாடிக்கையாளர்கள் கணக்கு இருப்பு விபரம் அறிதல், அண்மைக்கால பரிவர்த்தனைகள், கணக்கு அறிக்கைகள் (Account statements), வைப்புநிதி சேவைகள், கடன் விவரங்கள், சேவை கோரிக்கைகள், வங்கி கிளை மற்றும் எடிஎம் முகவரிகளைக் கண்டறிதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வங்கிச் சேவைகளை இதன் மூலம் பெற முடியும்.


 


வாட்ஸ்அப் பேங்கிங் வசதியானது, வங்கியின் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஒரு முக்கியச் சேவையாக மிக வேகமா உருவெடுத்து வருகிறது. உஜ்ஜீவன் வங்கியின் மொத்த சேவை கோரிக்கைகளில் 22% கோரிக்கைகளைத் தற்போது வாட்ஸ்அப் பேங்கிங் தளமே வெற்றிகரமாகக் கையாண்டு வருகிறது. ஒரு உரையாடல் தளம் (Conversational Channel), அன்றாட வங்கிச் சேவைகள் மற்றும் வங்கியுடனான வாடிக்கையாளர்களின் பிணைப்பை எந்த அளவிற்கு ஆழமாக ஆதரிக்க முடியும் என்பதற்கு இப்புள்ளிவிவரங்களே சான்றாகும்.


 


இந்த முயற்சி குறித்து கருத்து தெரிவித்த உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் இடைக்கால சி.இ.ஓ மற்றும் நிர்வாக இயக்குநரான திருமதி கரோல் ஃபர்டாடோ அவர்கள் கூறியதாவது: “வாடிக்கையாளர்களுக்கு வங்கிச் சேவைகளை மேலும் எளிமையாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றும்போதுதான் புதிய கண்டுபிடிப்புகள் மிகவும் அர்த்தமுள்ளதாகின்றன. உஜ்ஜீவனின் வாட்ஸ்அப் பேங்கிங் சேவை, வாடிக்கையாளர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கும் ஒரு தளத்தின் மூலமாகவே வங்கியை அணுகும் வசதியை வழங்குகிறது. வாட்ஸ்அப் மூலம் சேமிப்புக் கணக்கை டிஜிட்டல் முறையில் தொடங்கும் சேவையை அறிமுகப்படுத்தியதன் மூலம், வாடிக்கையாளர்கள் வழக்கமான வழிகளுக்கு அப்பால் மேலும் வசதியான, எளிமையான மற்றும் பாதுகாப்பான வங்கிச் சேவையை அனுபவிக்க முடியும். வங்கிச் சேவைகளை அனைவரும் எளிதில் பெறும் வகையிலும், விரைவான சேவை வழங்கும் வகையிலும் இந்தத் தளத்தை நாங்கள் தொடர்ந்து வலுப்படுத்துவோம்.”


 


எதிர்காலத்தைக் கணக்கில் கொண்டு, ஜெனரேட்டிவ்-ஏஐ (Generative-AI) மூலம் பதிலளிப்பது, வாடிக்கையாளர்களின் பன்முகத் தேவைகளுக்கான வழிகாட்டுதல் உதவி, பல மொழிகளில் உரையாடும் வசதி, சூழலுக்கு ஏற்ற சேவைப் பயணங்கள் மற்றும் குரல்வழி உதவி (Voice-assisted services) உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளை உஜ்ஜீவன் SFB ஆராய்ந்து மதிப்பீடு செய்து வருகிறது.


 


உஜ்ஜீவன் SFB-ன் வாட்ஸ்அப் பேங்கிங் சேவையைப் பெற:


வாடிக்கையாளர்கள் 900 208 2121 என்ற எண்ணைச் சேமித்து, வாட்ஸ்அப்பில் “Hi” என அனுப்பி உஜ்ஜீவன் SFB-ன் வாட்ஸ்அப் பேங்கிங் சேவைகளைப் பெறலாம்.


 


பொறுப்புத்துறப்பு : "வாட்ஸ்அப் சாட்டிற்குள்ளேயே முழுமையாகப் புதிய கணக்குத் தொடங்கும் வசதியை இச்சேவை வழங்குகிறது. அக்டோபர் 5, 2026 நிலவரப்படி, இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள், சிறு நிதி வங்கிகள் மற்றும் கட்டண வங்கிகள் (Payment Banks) ஆகியவற்றில் 21N78E கிரியேட்டிவ் லேப்ஸ் பிரைவேட் லிமிடெட் (21N78E Creative Labs Private Limited) நடத்திய ஆய்வின் அடிப்படையில் இது தெரிவிக்கப்படுகிறது."

Comments

Popular posts from this blog

DAC Developers Appoints A.R. Rahman as its Brand Ambassador

ஜெயலலிதா ஜோதிடர் ஜமால் கணிப்பு – 2026 தேர்தலில் ஆட்சி மாற்றமா?

மூத்த நகைச்சுவை கலைஞர்கள் முன்னிலையில் இளம் நடிகரின் உற்சாக பங்கேற்பு