த.வெ.க.வில் இணையப் போகிறாரா பிரபல நடிகர்? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

 த.வெ.க.வில் இணையப் போகிறாரா பிரபல நடிகர்? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!





தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் தலைமையிலான கூட்டணி அரசு அமைந்ததையடுத்து, பல்வேறு கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் பிரபலங்கள் த.வெ.க. நோக்கி நகர்ந்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க.வை சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்தது அரசியல் சூழலில் பேசுபொருளானது. ஏற்கனவே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வில் இருந்த பலரும் விஜயின் கட்சியில் இணைந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடிகரும் தயாரிப்பாளருமான ஜெ.எம். பஷீர் விரைவில் த.வெ.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தி.மு.க. சிறுபான்மை பிரிவில் செயல்பட்டு வந்த அவர், சமீபத்தில் அமைச்சர் என். ஆனந்தை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், விரைவில் முதல்வர் விஜயை நேரில் சந்தித்து கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

சமீபத்தில் வெளியான ‘தேசிய தலைவர்’ திரைப்படத்தில் முத்துராமலிங்க தேவர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த பஷீர், அந்த கதாபாத்திரத்தின் மூலம் தென் மாவட்டங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றார். அடுத்ததாக டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திலும் அவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அமைச்சர் என். ஆனந்தை சந்தித்தது குறித்து பேசிய பஷீர், “மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம்” என்று தெரிவித்துள்ளார். அந்த சந்திப்பில் அமைச்சர் விஜய் பாலாஜியும் உடன் இருந்தார்.

Comments

Popular posts from this blog

தைராய்டு புற்றுநோய்க்கு ரோபோ உதவியுடன் தழும்பில்லாத தைராய்டு அகற்றல் சிகிச்சை!

DAC Developers Appoints A.R. Rahman as its Brand Ambassador

ஜெயலலிதா ஜோதிடர் ஜமால் கணிப்பு – 2026 தேர்தலில் ஆட்சி மாற்றமா?