2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் 99.31% ஆயுள் காப்பீட்டு உரிமை கோரல் தீர்வு விகிதத்துடன் முன்னிலை வகிக்கும் ICICI புரூடென்ஷியல் லைஃப் நிறுவனம்

 2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் 99.31% ஆயுள் காப்பீட்டு உரிமை கோரல் தீர்வு விகிதத்துடன் முன்னிலை வகிக்கும் ICICI புரூடென்ஷியல் லைஃப் நிறுவனம் 

 


சென்னை 28 செப்டம்பர் 2026: ICICI புரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் 2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் 99.31% ஆயுள் காப்பீட்டு உரிமை கோரல் தீர்வு விகிதத்தைப் (Claim Settlement Ratio) பதிவு செய்துள்ளது. பொது வெளிப்படைத்தன்மைத் தரவுகளின்படி (படிவம் L-39 மற்றும் L-40), இந்தியாவின் முன்னனி ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் இதுவே மிக அதிகபட்ச விகிதமாகும். இக்காலாண்டில், இந்நிறுவனம் ₹414.08 கோடி மதிப்பிலான தனிநபர் இறப்புக் கோரல்களைத் தீர்த்து வைத்துள்ளது. குறிப்பாக, 2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் முன்னனி ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களிலேயே இந்நிறுவனத்தின் சராசரி உரிமை கோரல் மதிப்பு ~₹15 லட்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ICICI புரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அண்டர்ரைட்டிங் மற்றும் ரீடெய்ல் கிளெய்ம்ஸ் தலைவர் திரு. சாரங் கோகலே கூறுகையில்: "ICICI புரூடென்ஷியல் லைஃப் நிறுவனத்தில், எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் அவர்தம் குடும்பங்களுக்கும் காப்பீட்டு உரிமை கோரல் (Claims) நடைமுறையை எளிதானதாகவும், தடையற்றதாகவும், சரியான நேரத்தில் கிடைக்கக்கூடியதாகவும் மாற்றுவதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம். 2027 நிதியாண்டின் முதல் காலாண்டில், எங்கள் காப்பீட்டு உரிமை கோரல் தீர்வு விகிதம் (Claim Settlement Ratio) துறைசார்ந்த அளவீடுகளில் மிக அதிகபட்சமாக 99.31%-ஆக இருந்தது. மேலும், கூடுதல் விசாரணை தேவையில்லாதக் கோரல்களுக்கான சராசரி தீர்வு நேரம் (Turnaround Time), இறுதி ஆவணம் பெறப்பட்ட தேதியிலிருந்து வெறும் 1 நாளாக மட்டுமே இருந்தது. இதுதவிர, இறப்பு உரிமைகோரல்களாக ₹414.08 கோடியை நாங்கள் வழங்கியுள்ளோம்.

 

எங்களின் 'வாடிக்கையாளருக்கே முதன்மை முன்னுரிமை' என்ற அணுகுமுறையும், டிஜிட்டல் மயமாக்கலில் உள்ள வலுவான கவனமும், உரிமை கோரல்களை விரைவாகத் தீர்க்கவும், குடும்பங்களுக்கு மிகவும் தேவைப்படும் காலத்தில் உரிய நிதி நிவாரணத்தை வழங்கவும் எங்களுக்குத் துணைபுரிகின்றன. வாடிக்கையாளர்கள் எங்கள் மொபைல் செயலி, வாட்ஸ்அப், சாட்பாட் மற்றும் இணையதளம் வாயிலாக எளிதாக உரிமைகோரல்களைப் பதிவு செய்யவும் மற்றும் அவற்றின் நிலையைக் கண்காணிக்கவும் முடியும்.

 

எங்களின் ‘கிளெய்ம் ஃபார் ஷுவர்’ (Claim for Sure) திட்டத்தின் கீழ், தகுதியான உரிமைகோரல்களுக்கு ஒரே நாளில் ~₹75 கோடியை வழங்கியுள்ளோம். குடும்பங்களுக்கு மிகவும் தேவைப்படும் தருணத்தில் உரிய ஆதரவு கிடைப்பதை உறுதிசெய்ய, எங்களின் டிஜிட்டல் நடைமுறைகளைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறோம்." என்றார்.


Comments

Popular posts from this blog

DAC Developers Appoints A.R. Rahman as its Brand Ambassador

ஜெயலலிதா ஜோதிடர் ஜமால் கணிப்பு – 2026 தேர்தலில் ஆட்சி மாற்றமா?

மூத்த நகைச்சுவை கலைஞர்கள் முன்னிலையில் இளம் நடிகரின் உற்சாக பங்கேற்பு