AU ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் 'வீல்ஸ் பிசினஸ்' AUM ₹50,000 கோடியைக் கடந்தது! மூன்று தசாப்த கால நகர்வுத் திறனுக்கும் தொழில்முனைவிற்கும் வலுசேர்க்கிறது
AU ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் 'வீல்ஸ் பிசினஸ்' AUM ₹50,000 கோடியைக் கடந்தது! மூன்று தசாப்த கால நகர்வுத் திறனுக்கும் தொழில்முனைவிற்கும் வலுசேர்க்கிறது
AU ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் தொடக்கக்கால தொழிலாகவும் மிகப்பெரிய கடன் வழங்கும் பிரிவாகவும் விளங்கும் இந்த பிரிவு, தற்போது இந்தியா முழுவதும் 13.7 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்கி வருகிறது. இது விருப்பங்கள், வாழ்வாதாரங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான நிதி உதவியை வழங்கிய கிட்டத்தட்ட மூன்று தசாப்த காலப் பயணத்தைப் பிரதிபலிக்கிறது.
சென்னை செப்டம்பர் 2026: AU ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (AU SFB) - இந்தியாவின் மிகப்பெரிய ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மற்றும் ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலத்தில் யுனிவர்சல் வங்கியாக மாறுவதற்கு ரிசர்வ் வங்கியின் (RBI) கொள்கையளவிலான ஒப்புதலைப் பெற்ற முதல் வங்கி - தனது முதன்மையான 'வீல்ஸ் பிசினஸ்' பிரிவின் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துகள் (AUM) ₹50,000 கோடி என்ற மைல்கல்லை எட்டியுள்ளதாக இன்று அறிவித்துள்ளது. நிதிச் சாதனைக்கும் மேலாக, இந்த மைல்கல்லானது இந்தியாவின் நகர்வுத் திறன் (mobility) மற்றும் தொழில்முனைவோர் பயணத்திற்கு கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக வழங்கி வரும் ஆதரவைப் பிரதிபலிக்கிறது.
2026 ஆகஸ்ட் மாதத்தில் வீல்ஸ் போர்ட்ஃபோலியோவின் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துகள் (AUM) ₹50,000 கோடியைத் தாண்டியதன் மூலம் இச்சாதனை பதிவாகியுள்ளது. வணிகச் சுழற்சிகளுக்கு இடையே நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள இப்பிரிவு, 3 ஆண்டுகால கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (CAGR) 26 சதவீதத்தையும், 5 ஆண்டுகால கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் 29 சதவீதத்தையும் பதிவு செய்துள்ளது. மேலும், வங்கியின் மிகப்பெரிய கடன் வழங்கும் பிரிவாகத் தனது இடத்தைத் தக்கவைத்துக்கொண்டு, வங்கியின் ஒட்டுமொத்த கடன் போர்ட்ஃபோலியோவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பங்களிப்பை அளித்து வருகிறது.
ராஜஸ்தானில் உள்ள சுயதொழில் செய்யும் தொழில்முனைவோர் மற்றும் போக்குவரத்து நிறுவனர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்துடன் 1996 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இது, இன்று நாடு முழுவதும் 13.7 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்கி, இந்தியாவின் முன்னணி வாகன நிதிச் சேவைகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது. வாடிக்கையாளர் நம்பிக்கை, கடன் வழங்கல் மதிப்பீட்டுத் திறன் (underwriting expertise) மற்றும் முறையான இடர் மேலாண்மை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டடப்பட்டுள்ள இந்த வணிகம், இந்தியா முழுவதும் நகர்வுத் திறன், தொழில்முனைவு மற்றும் முன்னேற்ற ஆசைகளிலான வளர்ச்சியை சாத்தியமாக்கும் தனது தொடக்க லட்சியத்திலேயே நிலைத்து நிற்கிறது.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இந்தியாவின் கனவுகளுக்கு நிதியுதவி
கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக, AU வங்கியின் 'வீல்ஸ்' பிரிவு போக்குவரத்து நிறுவனர்கள், விவசாயிகள், ஒப்பந்ததாரர்கள், டாக்ஸி உரிமையாளர்கள், முதன்முறை வாகன வாங்குபவர்கள், சிறு வணிகங்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்முனைவோருக்கு அவர்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதார வளர்ச்சியையும் உயர்த்தும் உற்பத்தி சொத்துகளைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கி அவர்களை வலுப்படுத்தியுள்ளது.
இப்பிரிவின் முக்கியமான சிறப்பு அம்சம் என்னவென்றால், பயன்படுத்தப்பட்ட (pre-owned) வாகனங்களுக்குக் கடன் வழங்குவதில் அதன் வலுவான பங்களிப்பாகும். இந்தத் துறை இந்தியா முழுவதும் எளிய முறையில் வாகன வசதியையும் தொழில்முனைவோர் வாய்ப்புகளையும் விரிவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பல ஆண்டுகளாக, புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான கடன் வசதிகளை வழங்குவதில் AUவங்கி சிறந்த நிபுணத்துவத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் முறையான கடன் வசதியைப் பெற்று, நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கெடுக்க உதவுகிறது.
இன்று, வீல்ஸ் பிரிவு ₹50,000 கோடிக்கும் அதிகமான பன்முகப்படுத்தப்பட்ட போர்ட்ஃபோலியோவை நிர்வகித்து வருகிறது. இதில் புதிய வாகனக் கடன்களாக ₹30,752 கோடியும், பயன்படுத்தப்பட்ட வாகனக் கடன்களாக ₹17,966 கோடியும், இருசக்கர வாகனக் கடன்களாக ₹1,767 கோடியும் அடங்கும். நாடு முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட சேவை மையங்கள் மற்றும் கிட்டத்தட்ட 2,000 இடங்களில் சேவை வழங்கும் திறன் கொண்ட AU ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் விரிவான வலைப்பின்னலின் ஆதரவோடு, இந்த பிரிவு இந்தியாவின் மிகவும் பரவலான வாகன நிதிச் சேவை கட்டமைப்புகளில் ஒன்றை உருவாக்கியுள்ளது. இது நகரங்கள், பகுதி-நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறச் சந்தைகளில் வாடிக்கையாளர்களை ஆழமாகச் சென்றடைய உதவுகிறது.
இந்த மைல்கல் குறித்து AU ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் நிறுவனரும், மேலாண் இயக்குநரும், முதன்மை செயல் அதிகாரியுமான சஞ்சய் அகர்வால் கூறுகையில், "எங்களது வீல்ஸ் பிரிவில் ₹50,000 கோடி AUM-ஐக் கடந்தது என்பது மிக ஆழமான அர்த்தமுள்ள ஒரு மைல்கல்லாகும். ஏனெனில், கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்கு முன்பு AU வங்கி நிறுவப்பட்டதற்கான அடித்தளத்தையே இது பிரதிபலிக்கிறது. உழைப்பாளி தொழில்முனைவோரையும், சுயதொழில் செய்பவர்களையும் ஆதரிக்க வேண்டும் என்ற எளிய நம்பிக்கையுடன் தொடங்கியது, இன்று இந்தியா முழுவதும் 13 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களால் நம்பப்படும் ஒரு பெரிய பிரிவாக வளர்ந்துள்ளது.
இந்த மைல்கல் வெறும் ஒரு போர்ட்ஃபோலியோவின் அளவை மட்டும் குறிக்கவில்லை. இது எண்ணற்ற மக்களின் போக்குவரத்துப் பயணம், வாழ்வாதார உருவாக்கம், வணிக விரிவாக்கம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இந்தப் பயணத்தில் அங்கமாக இருந்து வரும் எங்களது வாடிக்கையாளர்கள், டீலர் பங்காளிகள், ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்கள் அனைவருக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
உள்கட்டமைப்பு, தளவாடங்கள் (logistics), கிராமப்புற வளர்ச்சி மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றில் இந்தியா தொடர்ந்து முதலீடு செய்து வரும் நிலையில், பொறுப்பான கடன் வழங்கள், தொழில்நுட்ப ரீதியிலான கண்டுபிடிப்புகள் மற்றும் முறையான இடர் மேலாண்மை மூலம் வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஆதரவளிக்க நாங்கள் தொடர்ந்து கடமைப்பட்டுள்ளோம். AU வங்கி ஒரு யுனிவர்சல் வங்கியாக மாறுவதற்கான பயணத்தில் வீல்ஸ் பிரிவு தொடர்ந்து ஒரு முக்கிய வளர்ச்சி இயந்திரமாக இருக்கும்," என்று தெரிவித்தார்.
தனது பரந்த டிஜிட்டல் மாற்றப் பயணத்தின் ஒரு பகுதியாக, வங்கி கடன் வழங்கும் நடவடிக்கைகளில் மேம்பட்ட பகுப்பாய்வு (analytics), தானியங்கி முறை (automation) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த திறன்களைத் தொடர்ந்து ஒருங்கிணைத்து வருகிறது. இது வாடிக்கையாளர் அனுபவம், செயல்பாட்டுத் திறன் மற்றும் விரிவாக்கத் திறனை மேம்படுத்துவதோடு, வணிகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கும் அதைத் தயார்படுத்துகிறது. AU வங்கி தனது செயல்பாட்டின் நான்காவது தசாப்தத்தில் அடி எடுத்து வைக்கும் இந்த வேளையில், வீல்ஸ் பிரிவு தொடர்ந்து நகர்வுத் திறன், தொழில்முனைவு மற்றும் பொருளாதார வளர்ச்சியின் மையப்புள்ளியாக விளங்கி, வாடிக்கையாளர்கள், சமூகங்கள் மற்றும் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்திற்கும் நீண்டகால மதிப்பை உருவாக்கும் அதே வேளையில் அவர்களின் முன்னேற்றக் கனவுகளுக்கும் தொடர்ந்து வழிகோலுகிறது.
Comments
Post a Comment