விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை கோலாகலமாக்கும் Zee தமிழ் - என்னவெல்லாம் ஸ்பெஷல்?
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை கோலாகலமாக்கும் Zee தமிழ் - என்னவெல்லாம் ஸ்பெஷல்?
சென்னை: விநாயகர் சதுர்த்தி பண்டிகையை குடும்பத்துடன் இணைந்து மகிழ்ச்சியாகக் கொண்டாட ரசிகர்களுக்காக Zee தமிழ் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக ஒளிபரப்பாகும் புத்தம் புதிய திரைப்படங்களுடன் பிரம்மாண்டமான பொழுதுபோக்கு விருந்தை வழங்குகிறது.
செப்டம்பர் 14 ஆம் தேதி திங்கள்கிழமை, காலை முதல் இரவு வரை விறுவிறுப்பான நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மகிழ்விக்க காத்திருக்கின்றன.
காலை 9.30 மணிக்கு பிரபல பேச்சாளரும் எழுத்தாளருமான கலைமாமணி சுகி சிவம் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது. "இன்றைய சூழ்நிலையில் குடும்பத்தில் பிரச்சனைகள் பெருகப் பெரிதும் காரணம் பிள்ளைகளா? பெற்றோர்களா?" என்ற சுவாரஸ்யமான தலைப்பில் நடைபெறும் இந்த பட்டிமன்றம், நகைச்சுவையும் சிந்தனையும் கலந்த கருத்துப் பரிமாற்றங்களால் அனைவரையும் கவரவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, காலை 11 மணிக்கு, சந்தோஷ் ஸ்ரீராம், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா விஸ்வநாதன், வினோத் கிஷன் மற்றும் விடிவி கணேஷ் நடித்துள்ள Double Occupancy திரைப்படம் உலகத் தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பாக வருகிறது. காதல், நகைச்சுவை, மற்றும் குடும்ப உணர்வுகளுடன் கற்பனை கலந்த இந்தப் படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கவுள்ளது.
அதைத் தொடர்ந்து, பிற்பகல் 3.30 மணிக்கு, ஜெயராம், ஊர்வசி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்துள்ள 'பரிமளா & கோ' திரைப்படம் உலகத் தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பாகிறது. கலகலப்பான நகைச்சுவை, குடும்ப பாசம் மற்றும் மனதை நெகிழ வைக்கும் தருணங்கள் நிறைந்த இந்த திரைப்படம் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கவுள்ளது.
மேலும் நாள்தோறும் ஒளிபரப்பாகும் தொடர்களும் வழக்கம் போல ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிந்திக்க வைக்கும் பட்டிமன்றம், முதல் முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இரண்டு புத்தம் புதிய திரைப்படங்கள் மற்றும் ரசிகர்கள் விரும்பும் தொடர்கள் என, முழு நாளும் குடும்பத்துடன் மகிழ்ந்து ரசிக்க வேண்டிய நிகழ்ச்சிகளை Zee தமிழ் வழங்குகிறது.
இந்த விநாயகர் சதுர்த்தியை உங்கள் குடும்பத்தோடு இணைந்து Zee தமிழுடன் கொண்டாடத் தவறாதீர்கள்!
Zee Tamil Makes Vinayagar Chaturthi Celebrations Grander Than Ever - What's Special?
Chennai: To help viewers celebrate Vinayagar Chaturthi with their families in a joyful way, Zee Tamil is set to offer a grand entertainment feast featuring special programs and brand-new movies premiering on television for the very first time.
On Monday, September 14, an exciting lineup of programs awaits viewers from morning till night.
At 9:30 AM, a special Pattimandram hosted by renowned speaker and writer Kalaimamani Suki Sivam will be telecast. Titled "In Today's Situation, Who Is More Responsible for the Rise in Family Problems - Children or Parents?", this thought-provoking debate promises to engage audiences with a perfect blend of humor, insight, and meaningful discussions.
Following this, at 11:00 AM, the movie Double Occupancy, starring Santhosh Sriram, Reshma Venkatesh, Samyuktha Viswanathan, Vinodh Kishan, and VTV Ganesh, will have its World Television Premiere. Blending romance, comedy, fantasy, and family emotions, the film is expected to offer viewers a unique entertainment experience.
Later, at 3:30 PM, Parimala & Co., featuring Jayaram, Urvashi, and an ensemble cast, will make its World Television Premiere on Zee Tamil. Packed with laughter, family bonding, and heartwarming moments, the film is sure to add more joy to the Vinayagar Chaturthi celebrations.
In addition, all the regular serials will continue to be telecast as usual throughout the day.
With a thought-provoking Pattimandram, two exclusive television premieres, and viewers' favorite serials, Zee Tamil promises a complete day of entertainment for the entire family.
Don't miss celebrating this Vinayagar Chaturthi with your loved ones, only on Zee Tamil!
Comments
Post a Comment