'ரீமேஜின் ஐடியாத்தான் 2.0’ திட்டத்தைத் தொடங்கிய CDSL!

சென்னை 09 அக்டோபர் 2026: ‘ரீமேஜின் ஐடியாத்தான் 2.0’ திட்டத்தைத் தொடங்கிய CDSL!

எதிர்கால முதலீட்டாளர்களை வடிவமைக்க மாணவர்களுக்கு அழைப்பு

உலக முதலீட்டாளர்கள் வாரம் 2026-ன் போது தொடங்கப்பட்ட இந்த ‘ஐடியாத்தான் 2.0’, நிதி சார்ந்த விழிப்புணர்வு மற்றும் இணையப் பாதுகாப்பு (Cyber Safety) ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்காக CDSL-ன் ‘ரீமேஜின்’ தளத்தை மேலும் விரிவுபடுத்துகிறது. இப்போட்டிக்கான மொத்தப் பரிசுத் தொகை ₹11.5 லட்சமாகும்.


 ஆசியாவின் முதல் பட்டியலிடப்பட்ட டெபாசிட்டரியும், 19 கோடிக்கும் அதிகமான டீமேட் கணக்குகளின் நம்பகமான பாதுகாவலருமான சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் (இந்தியா) லிமிடெட் (“CDSL”), இன்று ‘ரீமேஜின் ஐடியாத்தான் 2.0’ (Reimagine Ideathon 2.0) திட்டத்தைத் தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் மேலும் பன்முகத்தன்மை கொண்டதாகவும், டிஜிட்டல் மயமாக்கப்பட்டதாகவும் மாறிவரும் முதலீட்டாளர்களின் நிதி சார்ந்த விழிப்புணர்வு மற்றும் இணையப் பாதுகாப்பை (Cyber Safety) வலுப்படுத்தும் நோக்கில், புதுமையான தீர்வுகளை உருவாக்க இந்தியா முழுவதிலும் உள்ள மாணவர்களுக்கு இந்தத் திட்டம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


 


இந்தியாவில் 'புரிதலுடன் கூடிய முதலீடு எளிதானது' ('Samajh Se Investing Simple') என்ற கருப்பொருளின் கீழ் கடைப்பிடிக்கப்படும் 'உலக முதலீட்டாளர்கள் வாரம் 2026'-ன் போது இந்த ஐடியாத்தான் தொடங்கப்பட்டுள்ளது. செபி (SEBI) மற்றும் CDSL உள்ளிட்ட பங்குச் சந்தைப் பங்காளர்களை ஒன்றிணைத்து, நிதிச் சார்ந்த அறிவை வலுப்படுத்தவும், விழிப்புணர்வோடு கூடிய முதலீட்டுப் பழக்கங்களை ஊக்குவிக்கவும், நிதி மோசடிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உருவாக்கப்பட்டுள்ள செபியின் 'ப்ராஜெக்ட் ஜாக்ரூக்' (Project Jagrook) திட்டத்தின் முதலீட்டாளர் விழிப்புணர்வு மற்றும் கல்வி இலக்குகளுக்குத் துணையாக இந்த ஐடியாத்தான் அமைகிறது. 'புரிதலுடன் கூடிய முதலீடு எளிதானது' என்ற கருத்தின் மையப்புள்ளி என்னவெனில், விழிப்புணர்வு பெற்ற முதலீட்டாளரே அதிக அதிகாரமும் தெளிவும் கொண்ட முதலீட்டாளர் ஆவார்; மேலும் முதலீட்டாளர்கள் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய மற்றும் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய வடிவம், மொழி மற்றும் வழியில் தகவல்கள் தெரிவிக்கப்படும்போது மட்டுமே அந்த விழிப்புணர்வு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதே ஆகும். ரீமேஜின் ஐடியாத்தான் 2.0, மாணவர்கள், புதிய முதலீட்டாளர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு நிதி சார்ந்த விழிப்புணர்வு மற்றும் இணையப் பாதுகாப்புக் கல்வியை மேலும் எளிதாகவும், பொருத்தமானதாகவும், சுவாரஸ்யமானதாகவும் மாற்றுவதற்கான புதுமையான வழிகளை உருவாக்குமாறு மாணவர்களுக்கு அழைப்பு விடுத்து இந்தக் கருத்தாக்கத்திற்கு உயிர் கொடுக்கிறது.


 


செபியின் முதலீட்டாளர் கணக்கெடுப்பு 2025-ன் படி, இந்தியாவில் உள்ள சுமார் 33.72 கோடி குடும்பங்களில், 3.21 கோடி குடும்பங்கள் (9.5%) பங்குச் சந்தைப் பொருட்களில் முதலீடு செய்துள்ளன; அதே வேளையில் 63% குடும்பங்கள் குறைந்தது ஒரு பங்குச் சந்தைப் பொருளைப் பற்றியாவது விழிப்புணர்வு கொண்டுள்ளன.


 


விழிப்புணர்வுக்கும் முதலீட்டுப் பங்கேற்பிற்கும் இடையே உள்ள இந்த இடைவெளி, வெறும் விழிப்புணர்வை பயனுள்ள புரிதலாகவும் தெளிவான பங்கேற்பாகவும் மாற்ற வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. இந்தியாவின் டீமேட் கணக்குகளின் எண்ணிக்கை 23 கோடியைத் தாண்டியுள்ள நிலையில், பங்குச் சந்தையில் மக்களின் பங்கேற்பு கணிசமாக விரிவடைந்துள்ளது. அதே வேளையில், 2025-ஆம் ஆண்டில் இணையவழி மோசடிகளால் (Cyber Fraud) ₹22,495 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசுத் தரவுகள் தெரிவிக்கின்றன; இதில் 76% நிதி இழப்புகள் போலி முதலீடு மற்றும் வர்த்தக மோசடிகளால் நடந்துள்ளன. இவ்விரு போக்குகளும் இணைந்து, நிதிப் புரிதல் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு ஆகிய இரண்டின் அவசியத்தையும் மேலும் வலுவாக உணர்த்துகின்றன.


 


CDSL நிறுவனத்தின் மேலாண் இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு. நேஹால் வோரா கூறுகையில், “பங்குச் சந்தைக்கான அணுகலை விரிவுபடுத்துவதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இனி தகவல்களைச் சரியாக மதிப்பிட்டு, கூடுதல் நம்பிக்கையுடன் முதலீட்டாளர்கள் பங்கேற்கும் வகையில் அவர்களின் புரிதலை ஆழப்படுத்துவதே அடுத்தகட்ட நடவடிக்கையாகும். முதலீட்டாளர் கல்வியை எளிமையாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும், பொருத்தமானதாகவும் மாற்றுவதில் செபியின் ‘ப்ராஜெக்ட் ஜாக்ரூக்’ மற்றும் ‘புரிதலுடன் கூடிய முதலீடு எளிதானது’ (Samajh Se Investing Simple) பிரச்சாரத்தின் கவனம் இந்த திசையில் எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான அடியாகும். CDSL-ல், முதலீட்டாளர் விழிப்புணர்வை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதற்காக அமர் சித்ர கதாவாடன் (Amar Chitra Katha) மேற்கொண்ட கூட்டாண்மை உட்பட, முதலீட்டாளர் கல்வியை மேலும் சுவாரஸ்யமாகவும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியதாகவும் மாற்ற நாங்கள் புதுமையான வழிகளை ஆராய்ந்து வருகிறோம். ஒரு சுயசார்பு (Atmanirbhar) முதலீட்டாளர் தகவல்களை மதிப்பிடவும் சரிபார்க்கவும், அபாயங்கள் மற்றும் பலன்களைப் புரிந்து கொள்ளவும், தெளிவான முடிவுகளை நம்பிக்கையுடன் எடுக்கவும் இயன்றவராக இருக்க வேண்டும். மாணவர்கள் மற்றும் எதிர்காலச் சந்தைப் பங்கேற்பாளர்கள் இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக மாறவும், மேலும் விழிப்புணர்வும் பொறுப்பும் கொண்ட உள்ளடக்கிய முதலீட்டுச் சூழலை நாம் எப்படி உருவாக்கலாம் என்பதற்கான தங்கள் பார்வைகளைக் கொண்டு வரவும் ‘ரீமேஜின் ஐடியாத்தான் 2.0’ ஒரு வாய்ப்பை வழங்குகிறது,” என்று தெரிவித்தார்.


 


இந்த 'ரீமேஜின் ஐடியாத்தான்', பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே நிதிச் சார்ந்த அறிவையும் பங்குச் சந்தை விழிப்புணர்வையும்

 வலுப்படுத்த முயலும் செபியின்


Comments

Popular posts from this blog

DAC Developers Appoints A.R. Rahman as its Brand Ambassador

ஜெயலலிதா ஜோதிடர் ஜமால் கணிப்பு – 2026 தேர்தலில் ஆட்சி மாற்றமா?

மூத்த நகைச்சுவை கலைஞர்கள் முன்னிலையில் இளம் நடிகரின் உற்சாக பங்கேற்பு