கருணாஸ் மற்றும் வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள ‘ரேவன்’ திரைப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரம்!
கருணாஸ் மற்றும் வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள ‘ரேவன்’ திரைப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரம்!
உண்மைச் சம்பவத்தின் தாக்கத்தில் உருவாகும் க்ரைம் த்ரில்லர்.
பொன்ஃபோர்ட் கிரியேட்டிவ் சொலுஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் செல்லமுத்து குப்புசாமி தயாரிக்கும் புதிய திரைப்படம் ரேவன். இப்படத்தின் தொடக்கவிழா பூஜை சமீபத்தில் நடைபெற்றதைத் தொடர்ந்து, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ரேவன் படத்தில் நடிகர்கள் கருணாஸ் மற்றும் '8 தோட்டாக்கள்' வெற்றி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் வாணி போஜன், அனுமோல், ரவீணா, விஷ்வமித்ரன், 'ராட்சசன்' வினோத் சாகர், சரவணன் ஷக்தி, சுபத்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சேதுராஜன் ராஜகோபால் மற்றும் R.V. சரண் ஆகியோர் ஒளிப்பதிவாளர்களாகப் பணியாற்றுகின்றனர். வே. வெற்றிவேல் சந்திரசேகர் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் சமீபத்தில் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான 'ஆபிஸ்' வெப் தொடருக்கு கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதியவர். மேலும் 'பீட்ஷா 3' திரைப்படத்திற்கும் கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார்.
படம் குறித்து இயக்குநர் வே. வெற்றிவேல் சந்திரசேகர் கூறியதாவது:
ரேவன் ஒரு க்ரைம் த்ரில்லர் திரைப்படம். எழுத்தாளர் நந்தன் ஸ்ரீதரன் எழுதிய படுகளக் காதை நாவலைத் தழுவி இப்படத்திற்கான கதையை உருவாக்கியிருக்கிறேன்.
குறிப்பாக, சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் சுமார் 30 கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகளுடன் தொடர்புடையதாகக் கூறப்பட்ட ஒரு தொடர் கொலையாளி கைது செய்யப்பட்ட உண்மைச் சம்பவத்தின் தாக்கமும் இந்தத் திரைக்கதையின் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்துள்ளது. அந்த உண்மைச் சம்பவத்தை அப்படியே பதிவு செய்யாமல், அதன் தாக்கத்தில் ஒரு விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறோம்.
இப்படத்தில் காக்கைக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. காகத்தை நமது முன்னோர்களின் வடிவமாகப் பார்க்கும் நம்பிக்கை நமது பண்பாட்டில் நீண்டகாலமாக
இருந்து வருகிறது. அந்த நம்பிக்கைக்கும் இந்தப் படத்தின் கதைக்கும் ஒரு முக்கியமான தொடர்பு இருக்கிறது.
கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் காக்கையைத் தத்ரூபமாக உருவாக்கி, பயன்படுத்துகிறோம். இதைத் திரையில் பார்க்கும் போது வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.
க்ரைம் த்ரில்லருக்கான விறுவிறுப்பைத் தாண்டி, நமது சமூகத்தில் நீண்டகாலமாகப் புரையோடிப் போயிருக்கும் ஒரு முக்கியமான சமூகப் பிரச்னையையும் 'ரேவன்' அழுத்தமாகப் பேசுகிறது" என்றார்.
சென்னை, கோவை, ஈரோடு மற்றும் பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் 'ரேவன்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பை விரைவில் நிறைவு செய்து, இந்த ஆண்டு இறுதியில் ரேவன் திரைப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
ரேவன் - தொழில்நுட்பக் குழு :
நடிகர்கள்: கருணாஸ், வெற்றி, வாணிபோஜன், அனுமோல், ரவீணா, விஷ்வமித்ரன், 'ராட்சசன்' வினோத் சாகர், சுபத்ரா, சரவணன் ஷக்தி மற்றும் பலர். தயாரிப்பு: பொன்ஃபோர்ட் கிரியேட்டிவ் சொலுஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்
தயாரிப்பாளர்: செல்லமுத்து குப்புசாமி
எழுத்து-இயக்கம்: வெற்றிவேல் சந்திரசேகர் வே
ஒளிப்பதிவு: சேதுராஜன் ராஜகோபால் & R.V. சரண்,
படத்தொகுப்பு: சா.சிவப்பிரகாஷ்
கலை இயக்கம்: வாசுதேவன்,
ஸ்டண்ட்: தினேஷ் காசி,
மக்கள் தொடர்பு : ரியாஸ் K அஹ்மத் , பாரஸ் ரியாஸ்
தயாரிப்பு நிர்வாகம்: கண்ணன் G
-------------------------------------------------------------------------------------------------------------------------------
KARUNAAS AND VETRI JOIN HANDS FOR CRIME THRILLER ‘RAVEN’ ;
Inspired by the impact of a real-life criminal case, the V. Vetrivel Chandrasekar directorial has completed shooting and is gearing up for a theatrical release this year.
Bringing together an intriguing combination of crime, suspense and social relevance, Raven, starring Karunas and ‘8 Thottakkal’ fame Vetri in the lead roles, has completed its shooting schedule and is currently progressing through post-production. Produced by Sellamuthu Kuppusamy under the banner of Ponport Creatives Solutions Private Limited, the film is directed by V. Vetrivel Chandrasekar, who makes his directorial debut with this project.
The film features an ensemble cast comprising Vani Bhojan, Anumol, Raveena, Vishwamitran, ‘Ratchasan’ Vinoth Sagar, Saravanan Sakthi, Subatra and several others in pivotal roles. With its premise rooted in the impact of a real-life criminal case, Raven promises to explore a gripping narrative that intertwines crime, cultural beliefs and a longstanding social issue.
Director V. Vetrivel Chandrasekar, who has previously written the story, screenplay and dialogues for the JioHotstar web series Office and the film Pizza 3, has also penned the story, screenplay and dialogues for Raven. The film draws inspiration from the novel Padukala Kaathai, written by Nandhan Sridharan, and adapts its underlying themes into a crime thriller with a distinctive narrative approach.
Speaking about the film, director V. Vetrivel Chandrasekar said, “Raven is a crime thriller developed based on Nandhan Sridharan’s novel Padukala Kaathai. An actual criminal case from Tamil Nadu, involving a serial killer reportedly linked to around 30 murder and sexual assault cases a few years ago before being arrested, has also played a significant role in shaping the film’s narrative. We have drawn inspiration from the impact of this incident and adapted it into a crime thriller, presenting the subject from a different perspective.
“The crow plays a significant role in the film. The beliefs our ancestors associated with crows have been deeply rooted in our culture for generations, and this cultural connection forms an important part of the story. With the support of computer graphics technology, we have created a lifelike crow that we believe will offer audiences a visually engaging experience on the big screen.
“Through Raven, we have attempted to explore the significance of the crow while also addressing an important social issue that has existed in our society for a long time.”
Shot extensively across Chennai, Coimbatore, Erode and several other locations, Raven has completed its principal photography. The team has also completed the visual effects work and is currently moving ahead with the remaining post-production activities, with plans to bring the film to theatres later this year.
With a compelling premise, an ensemble cast and a narrative that connects crime with cultural beliefs and social realities, Raven is gearing up to make its mark on Tamil cinema.
CAST :
Karunaas, Vetri, Vani Bhojan, Anumol, Raveena, Vishwamitran, ‘Ratchasan’ Vinoth Sagar, Saravanan Sakthi, Subatra Robert and others.
TECHNICAL CREW :
Production Company: Ponford Creatives Solutions Private Limited
Producer: Sellamuthu Kuppusamy
Writer and Director: V. Vetrivel Chandrasekar
Cinematography: Sethurajan Rajagopal and R.V. Saran
Editing: S.A. Sivaprakash
Production Design: Vasudevan
Stunt: Dinesh Kasi
PRO: Riaz K Ahmed, Paras Riyaz
Production Manager: Kannan G

Comments
Post a Comment