JLR INDIA UNVEILS MODERN LUXURY SALES AND SERVICE IN CHENNAI
CHENNAI, OCTOBER 2026: JLR INDIA UNVEILS MODERN LUXURY SALES AND SERVICE IN CHENNAI.
https://www.facebook.com/share/v/1EhQvEYw4R/
JLR India has unveiled its first-ever authorised retail presence in Chennai through a new Sales ('1S') showroom and dedicated Service and Spare Parts ('2S') facility, created in partnership with KUN Auto Works Pvt. Ltd., led by Managing Director Mr Arunkumar Uppuswamy and CEO Mr Sasi Kumar G.
Located at No. D2, Southern Avenue, Ambattur Industrial Estate, Chennai, Tamil Nadu – 600058, the new facility showcases the complete model line-up of the Range Rover, Defender and Discovery brands, alongside a selection of branded goods and merchandise.
The dedicated aftersales facility, located at Plot No. 43 (SP), Part New No. 65 (SP), 2nd Main Road, SIDCO Ambattur Industrial Estate, Mannurpet, Ambattur, Chennai – 600058, features a fully equipped workshop supported by trained technicians, delivering comprehensive service, maintenance and spare parts support to ensure a comprehensive ownership experience.
Mr. Rajan Amba, Managing Director, JLR India, said: "Expanding our retail footprint in strategically important markets remains central to our growth strategy in India. Chennai is one of the country's most important luxury automotive markets, and we are delighted to establish our first-ever authorised retail presence in the city.
"In partnership with KUN Auto Works, these new retail and after-sales facilities will provide clients with an exceptional brand experience while delivering the highest standards of sales and service support. We look forward to serving our growing number of clients in Tamil Nadu with an ownership experience that reflects the values of our modern luxury brands."
Mr. Arunkumar Uppuswamy, Managing Director, KUN Auto Works Pvt. Ltd., said: "We are proud to partner with JLR India to establish the brands' first authorised retail presence in Chennai. Our new showroom and dedicated aftersales facility reflect our shared commitment to delivering exceptional customer experiences and world-class ownership support. We look forward to welcoming clients into a modern luxury environment that embodies the values of the Range Rover, Defender and Discovery brands."
As JLR India continues to invest in its retailer network, the new Chennai facilities further reinforce its commitment to key growth markets, bringing its modern luxury brands and world-class ownership experience closer to clients nationwide.
சென்னையில் நவீன சொகுசு வாகன விற்பனை மற்றும் சேவை மையங்களை துவக்கிய ஜேஎல்ஆர் இந்தியா
சென்னை, அக்டோபர் 2026: ஜேஎல்ஆர் இந்தியா, குன் ஆட்டோ வொர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து, சென்னையில் தனது முதல் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மையத்தைத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நவீன விற்பனைக் காட்சியகமும் (1S), தனிப்பட்ட சேவை மற்றும் உதிரிபாகங்கள் மையமும் (2S) அமைக்கப்பட்டுள்ளன. குன் ஆட்டோ வொர்க்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. அருண்குமார் உப்புசுவாமி மற்றும் தலைமைச் செயல் அலுவலர் திரு. சசி குமார் ஜி ஆகியோரின் தலைமையில் இக்கூட்டாண்மை செயல்படுகிறது.
சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டை, சதர்ன் அவென்யூ, எண். D2, தமிழ்நாடு – 600058 என்ற முகவரியில் அமைந்துள்ள புதிய விற்பனைக் காட்சியகத்தில், ரேஞ்ச் ரோவர், டிஃபென்டர் மற்றும் டிஸ்கவரி ஆகிய பிராண்டுகளின் முழுமையான வாகன வரிசைகளுடன், அந்நிறுவனங்களின் பெயரைக் கொண்ட பொருட்களும் நினைவுப் பரிசுப் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
வாகனங்களுக்கான விற்பனைக்குப் பிந்தைய சேவைகளை வழங்கும் தனிப்பட்ட மையம், சென்னை, அம்பத்தூர், மன்னூர்பேட்டை, சிட்கோ தொழிற்பேட்டை, இரண்டாவது பிரதான சாலை, மனை எண் 43 (SP), பகுதி, புதிய எண் 65 (SP), தமிழ்நாடு – 600058 என்ற முகவரியில் அமைந்துள்ளது. நவீன வசதிகளுடன் கூடிய பணிமனையையும், பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களையும் கொண்டுள்ள இம்மையம், விரிவான பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் உதிரிபாகச் சேவைகளை வழங்குகிறது. இதன் மூலம், வாகன உரிமையாளர்களுக்கு முழுமையான மற்றும் சிறந்த சேவை அனுபவம் உறுதிசெய்யப்படுகிறது.
ஜேஎல்ஆர் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் திரு. ராஜன் அம்பா கூறுகையில், “இந்தியாவில் எங்களது வளர்ச்சி உத்தியின் முக்கிய அங்கமாக, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த சந்தைகளில் விற்பனை மையங்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்துவது தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. இந்தியாவின் முக்கியமான சொகுசு வாகனச் சந்தைகளில் சென்னையும் ஒன்றாகும். இந்நகரில் எங்களது முதல் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மையத்தைத் தொடங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
“குன் ஆட்டோ வொர்க்ஸ் நிறுவனத்துடனான கூட்டாண்மையின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புதிய விற்பனை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவை மையங்கள், வாடிக்கையாளர்களுக்கு உயர்தரமான பிராண்ட் அனுபவத்தை வழங்குவதுடன், விற்பனை மற்றும் சேவையில் மிக உயர்ந்த தரநிலைகளையும் உறுதிசெய்யும். தமிழ்நாட்டில் எங்களது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், எங்களது நவீன சொகுசு பிராண்டுகளின் மதிப்பீடுகளையும் சிறப்பம்சங்களையும் பிரதிபலிக்கும் வகையில், அவர்களுக்கு மிகச் சிறந்த வாகன உரிமையாளர் அனுபவத்தை வழங்க ஆவலுடன் உள்ளோம்.” என்று கூறினார்.
குன் ஆட்டோ வொர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. அருண்குமார் உப்புசுவாமி கூறுகையில், “சென்னையில் ரேஞ்ச் ரோவர், டிஃபென்டர் மற்றும் டிஸ்கவரி பிராண்டுகளின் முதல் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மையத்தை நிறுவுவதற்காக ஜேஎல்ஆர் இந்தியாவுடன் கூட்டாண்மை அமைத்திருப்பதில் பெருமை கொள்கிறோம். எங்களது புதிய விற்பனைக் காட்சியகமும், தனிப்பட்ட விற்பனைக்குப் பிந்தைய சேவை மையமும், வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த அனுபவத்தையும் உலகத்தரம் வாய்ந்த வாகனப் பராமரிப்பு ஆதரவையும் வழங்க வேண்டும் என்ற இரு நிறுவனங்களின் பொதுவான உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கின்றன. ரேஞ்ச் ரோவர், டிஃபென்டர் மற்றும் டிஸ்கவரி பிராண்டுகளின் மதிப்பீடுகளையும் தனித்துவத்தையும் வெளிப்படுத்தும் நவீன சொகுசுச் சூழலில் வாடிக்கையாளர்களை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.” என்று கூறினார்.
ஜேஎல்ஆர் இந்தியா தனது விற்பனை மையக் கட்டமைப்பில் தொடர்ந்து முதலீடு செய்து வரும் நிலையில், சென்னையில் தொடங்கப்பட்டுள்ள இந்தப் புதிய வசதிகள், முக்கியமான வளர்ச்சிச் சந்தைகளில் தனது இருப்பை மேலும் வலுப்படுத்துகின்றன. இதன் மூலம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு நவீன சொகுசு வாகனங்களையும் உலகத்தரம் வாய்ந்த வாகன உரிமையாளர் அனுபவத்தையும் மேலும் நெருக்கமாகக் கொண்டு செல்லும் தனது உறுதிப்பாட்டை நிறுவனம் வலியுறுத்துகிறது.




Comments
Post a Comment