Nolte Küchen Strengthens Its Presence in India with 12th Showroom in Chennai

  சென்னை, இந்தியா, அக்டோபர் 2026: சென்னையில் உயர்தர ஜெர்மானிய சமையலறை வடிவமைப்புகள் அறிமுகம்

https://youtu.be/kuOqnk_-1p0?si=jrpzipgF5XiFYtGO
























 ஜெர்மனியின் முன்னணி சமையலறை வடிவமைப்பு நிறுவனமான நோல்டே குசென் (Nolte Küchen), மெட்ரியன் குளோபல் (Metrion Global) நிறுவனத்துடன் இணைந்து சென்னையில் புதிய காட்சியகத்தைத் தொடங்குகிறது. தென்னிந்தியாவில் உயர்தர ஐரோப்பிய பாணி சமையலறைகளுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், இந்தப் புதிய காட்சியகம் சென்னையில் தனது செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான நோல்டே நிறுவனத்தின் தொடர்ச்சியான முதலீட்டு முயற்சியை எடுத்துக்காட்டுகிறது.




மயிலாப்பூரில் அமைந்துள்ள இந்த 3,500 சதுர அடி காட்சியகத்தில், நோல்டே நிறுவனத்தின் அண்மைக்கால சமையலறை வடிவமைப்புகளும் புதுமையான தீர்வுகளும் இடம்பெற்றுள்ளன. இதில் நியோ (neo), நோல்டே குசென் (Nolte Küchen), எக்ஸ்பிரஸ் கிச்சன் (Express Kitchen) ஆகிய தொகுப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வடிவமைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நிறுவனத்தின் நுட்பமான கைவினைத்திறன், உயர்தர மூலப்பொருட்கள், தனித்துவமான சிறப்பம்சங்கள் ஆகியவற்றை நேரடியாக அனுபவித்து அறிந்துகொள்ளும் வகையில் இந்தக் காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பம்சங்களே நோல்டே நிறுவனத்தை உலகளவில் முன்னணி சமையலறை வடிவமைப்பு நிறுவனங்களில் ஒன்றாக நிலைநிறுத்தியுள்ளன.




இந்தக் காட்சியகம் சிறப்பு அறிமுக நிகழ்வின் மூலம் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படவுள்ளது. இந்நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், சென்னையின் வடிவமைப்புத் துறையினர் மற்றும் கட்டட உள் அலங்கார வல்லுநர்களிடையே உயர்தரமான, வடிவமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வாழ்விடங்களுக்கான ஆர்வம் அதிகரித்து வருவது வெளிப்படுகிறது.




நோல்டே குசென் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கப் பகுதிகளுக்கான துணைத் தலைவருமான செல்வகுமார் ராஜுலு கூறியதாவது:


“இந்தியாவின் மிகவும் துடிப்புமிக்க, வடிவமைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் சந்தைகளில் ஒன்றாகச் சென்னை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. எனவே, எங்களது விரிவாக்கத்திற்கு சென்னை மிகச் சிறந்த இடமாகத் திகழ்கிறது. இந்தப் புதிய காட்சியகம், இந்தியாவில் தொடர்ந்து முதலீடு செய்வதற்கும், உலகத்தரம் வாய்ந்த ஜெர்மானிய சமையலறை வடிவமைப்புகளை வீட்டு உரிமையாளர்கள் மற்றும் வடிவமைப்புத் துறையினருக்கு அருகிலேயே கொண்டு சேர்ப்பதற்கும் எங்களுக்குள்ள நீண்டகால உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. எங்களது கூட்டாளியான மெட்ரியன் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து, உத்வேகமளிக்கும் இடங்களை உருவாக்குவதோடு, சிறந்த வாடிக்கையாளர் அனுபவங்களையும் தொடர்ந்து வழங்குவோம் என நம்புகிறோம்.”




சென்னையில் தொடங்கப்படும் இந்தக் காட்சியகம், இந்தியாவில் நோல்டே குசென் நிறுவனத்தின் அண்மைய விரிவாக்கமாகும். இப்பகுதியில் தனது செயல்பாடுகளை வலுப்படுத்துவதற்கும், நம்பகமான உள்ளூர் கூட்டாளர்களுடன் இணைந்து தனது வணிகத்தை விரிவுபடுத்துவதற்கும் நிறுவனம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை இது மேலும் வலுப்படுத்துகிறது. இதன் மூலம், இந்தியா முழுவதும் உயர்தர ஜெர்மானிய சமையலறை வடிவமைப்புகளை வாடிக்கையாளர்கள் எளிதில் அணுகுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.




நோல்டே குசென் நிறுவனம் குறித்து




1958-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நோல்டே குசென், ஜெர்மனியைச் சேர்ந்த சமையலறை உற்பத்தி நிறுவனமாகும். ஏறத்தாழ ஏழு தசாப்த கால அனுபவத்தைக் கொண்ட இக்குடும்ப நிறுவனமானது, முழுமையாக ஜெர்மனியிலேயே தயாரிக்கப்படும் தொகுதிவகை சமையலறைகளை உருவாக்குகிறது. புதுமையான தொழில்நுட்பங்களையும் நுட்பமான கைவினைத்திறனையும் ஒருங்கிணைத்து, தரம் மற்றும் வடிவமைப்பில் மிக உயர்ந்த தரநிலைகளைப் பூர்த்தி செய்வதே இந்நிறுவனத்தின் சிறப்பம்சமாகும்.




இந்தியாவில் மும்பை, புதுதில்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், புவனேஸ்வர், ஜெய்ப்பூர், கொச்சி, புனே, இந்தூர், போபால் மற்றும் வதோதரா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நோல்டே குசென் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.


மேலும் விவரங்களுக்கு: www.nolte-kuechen.com


Nolte Küchen Strengthens Its Presence in India with 12th Showroom in Chennai




Chennai, India, October 2026: Nolte Küchen, in partnership with Metrion Global, is launching a new showroom in Chennai. The showroom responds to rising demand for premium European kitchen solutions in South India and underscores Nolte's continued investments in this key market.




Located in Mylapore, the 3,500 sq. ft. showroom features Nolte's latest kitchen innovations, with a curated selection from the neo, Nolte Küchen, and Express Kitchen collections. The immersive space allows visitors to experience the brand's craftsmanship, premium materials, and features that make it a global leader.




The showroom will officially open with an exclusive launch event, expected to welcome more than 100 guests, reflecting the growing appetite of Chennai's design community for premium, design-led living spaces.




Selva Kumar Rajulu, Managing Director and Vice President – Middle East, Asia and Africa, Nolte Küchen, said: “Chennai continues to establish itself as one of India's most dynamic and design-conscious markets, making it an ideal location for our expansion. This showroom demonstrates our long-term commitment to investing in India and bringing world-class German kitchen design closer to homeowners and the design community. Together with our partner, Metrion Global, we look forward to creating inspiring spaces and delivering exceptional customer experiences for years to come.”




The Chennai showroom is Nolte Küchen's latest location in India, reinforcing the brand's commitment to the region and its strategy to expand through trusted local partnerships, increasing nationwide access to premium German kitchen solutions.




About Nolte Küchen




Nolte Küchen is a German kitchen manufacturer established in 1958. With nearly seven decades of expertise, the family owned company produces 100% German made modular kitchens that combine innovation with craftsmanship to meet the highest standards of quality and design.




In India, Nolte Küchen has a presence in key cities including Mumbai, New Delhi, Bengaluru, Chennai, Hyderabad, Bhubaneshwar, Jaipur, Cochin, Pune, Indore, Bhopal, and Baroda.


For more information, visit www.nolte-kuechen.com

Comments

Popular posts from this blog

DAC Developers Appoints A.R. Rahman as its Brand Ambassador

ஜெயலலிதா ஜோதிடர் ஜமால் கணிப்பு – 2026 தேர்தலில் ஆட்சி மாற்றமா?

மூத்த நகைச்சுவை கலைஞர்கள் முன்னிலையில் இளம் நடிகரின் உற்சாக பங்கேற்பு