PHDCCI மற்றும் TTAG ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதன் மூலம், ஆக்சிஸ் பேங்க், ஹோட்டல் மற்றும் விருந்தோம்பல் துறைக்கான பிரத்யேக திட்டத்தை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் தனியார் துறை வங்கியாக மாறியுள்ளது

 PHDCCI மற்றும் TTAG ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதன் மூலம், ஆக்சிஸ் பேங்க், ஹோட்டல் மற்றும் விருந்தோம்பல் துறைக்கான பிரத்யேக திட்டத்தை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் தனியார் துறை வங்கியாக மாறியுள்ளது



வங்கியின் MSME பிரிவின் கீழ் ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்களுக்கான பிரத்யேக கடன் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

 


இந்தியாவின் பயணம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளுடனான ஈடுபாட்டை ஆழப்படுத்த PHDCCI மற்றும் TTAG ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.

 


 

சென்னை, அக்டோபர் 29, 2026: இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் பேங்க், இன்று தனது MSME தொகுப்பின் கீழ் ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்களுக்கான தனிப்பயனாக்கப்பட்ட நிதி தீர்வுகளை வழங்கும் ஒரு பிரத்யேக ஹோட்டல் & ஹாஸ்பிடாலிட்டி ப்ரோக்ராம் ஐ அறிமுகப்படுத்தியது. மேலும், இந்த வங்கி PHD சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் (PHDCCI - சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் பிரிவு) மற்றும் ட்ராவல் & டூரிசம் ஆஃப் கோவா (TTAG) ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.


 


இன்று, இந்தியாவில் சுற்றுலாத்துறை முன்னெப்போதையும் விட பரந்த அளவிலான பயணிகளால் இயக்கப்படுகிறது; அவர்கள் புதிய இடங்களை அடைகின்றனர், ஒவ்வொரு பயணத்திற்கும் அதிகம் செலவழிக்கின்றனர், சிறந்த தங்குமிடங்களை எதிர்பார்க்கின்றனர். ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகளுக்கு, இது புதிய சொத்துகள், புதுப்பித்தல்கள் மற்றும் விருந்தினர் அனுபவங்கள் ஆகியவற்றில் தீவிர முதலீட்டின் ஒரு காலமாக மாறியுள்ளது. இந்த வளர்ச்சியின் பெரும்பகுதியானது தங்களின் செயல்பாட்டு யதார்த்தங்களுக்கு ஏற்ற


 


நிதி மற்றும் வங்கி தீர்வுகளைத் தொடர்ந்து தேடுகின்ற நடுத்தர அளவிலான மற்றும் தனிப்பட்ட விருந்தோம்பல் வணிகங்களால் இயக்கப்படுகிறது.


 


இந்த மாறிவரும் தேவைகளுக்கு பதிலளிக்கும் வகையில், இந்த வங்கி தனது சேவைகளை விருந்தோம்பல் துறையின் தனித்துவமான தேவைகளைச் சுற்றி வடிவமைத்துள்ளது. விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் சொத்து உருவாக்க திட்டங்களை ஆதரிக்க விருந்தோம்பல் சார்ந்த அளவுருக்களை கருத்தில் கொள்கின்ற இந்த ஹோட்டல் & ஹாஸ்பிடாலிட்டி ப்ரோக்ராம், ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகள் செயல்படும் விதத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. PHDCCI மற்றும் TTAG உடனான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பயண முகமைகள் மற்றும் தொடர்புடைய வணிகங்களுடன் நெருக்கமான ஈடுபாட்டின் மூலம் தொழில்துறை இணைப்பை சேர்க்கின்றன. ஒன்றிணைந்து இவை தீர்வுகள் வடிவமைக்கப்படும் விதத்தில் துறையின் தேவைகளை மையமாக வைத்திருக்கின்றன.


 


இந்த அறிவிப்புகள் குறித்து கருத்து தெரிவிக்கையில், ஆக்சிஸ் பேங்க் இன் வணிக வங்கிச் சேவைக் குழு குழும தலைவர் விஜய் ஷெட்டி கூறுகின்ற போது, "இந்தியப் பொருளாதாரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஒவ்வொன்றும் அதன் சொந்த செயல்பாட்டு முறையில் ஆழமாக இயங்குகின்றன. ஒரே மாதிரியான கடன் வழங்கும் முறையைத் தாண்டி, துறையின் சாரத்தை பிரதிபலிக்கும் முன்மொழிவுகளை வடிவமைப்பதே எங்கள் முயற்சியாக இருந்து வந்துள்ளது. சுற்றுலா மற்றும் விருந்தோம்பல், ஒரு ஹோட்டல் அல்லது ரிசார்ட் வருமானம் ஈட்டும் விதம், அது செயல்படும் பருவங்கள் மற்றும் அதன் விருந்தினர்களுக்கு அது வழங்கும் அனுபவம் ஆகியவை பெரும்பாலும் ஒரு மாறுபட்ட கண்ணோட்டத்தைக் கோருகின்ற அத்தகைய ஒரு துறையாக இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டே ஹோட்டல் & ஹாஸ்பிடாலிட்டி ப்ரோகிராம் உருவாக்கப்பட்டுள்ளது, PHDCCI மற்றும் TTAG உடனான எங்கள் கூட்டமைப்புகள், வணிகங்களுடனும் அவற்றைச் சுற்றியுள்ள தொழில்துறை உரையாடல்களுடனும் தொடர்ந்து ஈடுபட்டிருக்க உதவுகின்றன. நாடு முழுவதும் மேலும் பலர் பயணத்தைக் கண்டறியும் நிலையில், அந்த அனுபவங்களை சாத்தியமாக்கும் நிறுவனங்களுக்கு அருகில் நாங்கள் நிற்க விரும்புகிறோம்."என்று கூறினார்.


 


தகுதி நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்தியா முழுவதும் கிடைக்கக்கூடிய ஹோட்டல் & ஹாஸ்பிடாலிட்டி ப்ரோகிராம் கீழ்க்கண்டவற்றை வழங்குகிறது:


தகுதியுள்ள 2-நட்சத்திர, 3-நட்சத்திர மற்றும் 4-நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்களுக்கான காலக் கடன்கள் மற்றும் செயல்பாட்டு மூலதன வசதிகள்

 


10 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தும் காலம்

 


விரைவான கடன் முடிவுகளை சாத்தியமாக்குகின்ற வகையில், தங்கும் விகிதம், விருந்தினர் மதிப்பீடுகள் மற்றும் பணப்புழக்கங்களின் அடிப்படையில் துறை சார்ந்த கடன் மதிப்பீடு.

 


தனிப்பயனாக்கப்பட்ட நிதித் தீர்வுகளுடன் கூடிய பிரத்யேக உறவு மேலாண்மை ஆதரவு

இந்தியாவின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை, தங்குமிடம், உணவு

ச் சேவைகள், பயணம், பொழுதுபோக்கு


Comments

Popular posts from this blog

DAC Developers Appoints A.R. Rahman as its Brand Ambassador

ஜெயலலிதா ஜோதிடர் ஜமால் கணிப்பு – 2026 தேர்தலில் ஆட்சி மாற்றமா?

மூத்த நகைச்சுவை கலைஞர்கள் முன்னிலையில் இளம் நடிகரின் உற்சாக பங்கேற்பு