தீபாவளியை இன்னும் ஸ்பெஷலாக்க வரும் ZEE தமிழ்! நாள் முழுவதும் கொண்டாட்டம் தான்!

 தீபாவளியை இன்னும் ஸ்பெஷலாக்க வரும் ZEE தமிழ்! நாள் முழுவதும் கொண்டாட்டம் தான்!



சென்னை, நவம்பர் 05, 2026: தீபாவளின்னாலே புத்தாடை, பட்டாசு, பலகாரம் என வீடே களைகட்டும். அந்த மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் இன்னும் அதிகமாக்கும் வகையில், இந்த ஆண்டு தீபாவளிக்கு ZEE தமிழ் தொலைக்காட்சி பல ஸ்பெஷல் நிகழ்ச்சிகளைத் தயாராக வைத்திருக்கிறது. சிறப்பு பட்டிமன்றம், தீபாவளி ஸ்பெஷல் ‘தமிழா தமிழா’, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘ZEE தமிழ் குடும்ப விருதுகள் 2026’ மற்றும் இரண்டு பிரம்மாண்ட திரைப்படங்கள் என காலை முதல் இரவு வரை குடும்பத்துடன் பார்த்து ரசிக்க ஏகப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன.


தீபாவளி கொண்டாட்டம் காலை 9:30 மணிக்கு சிறப்பு பட்டிமன்றம் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. சுவாரஸ்யமான தலைப்புகள், அதிரடியான கருத்துப் பகிர்வுகள், நகைச்சுவை கலந்த விவாதங்கள் என இந்தப் பட்டிமன்றம் காலையிலேயே பார்வையாளர்களை உற்சாகப்படுத்தப் போகிறது. சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் இந்த நிகழ்ச்சி, தீபாவளி நாளுக்கு ஒரு கலகலப்பான தொடக்கமாக இருக்கும்.


அடுத்ததாக, காலை 11:00 மணிக்கு ‘தமிழா தமிழா – தீபாவளி ஸ்பெஷல்’ ஒளிபரப்பாகிறது. வழக்கமாகவே சுவாரஸ்யமான தலைப்புகள் மற்றும் கலகலப்பான விவாதங்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வரும் ‘தமிழா தமிழா’, இந்த முறை தீபாவளி ஸ்பெஷலாக இன்னும் கூடுதல் உற்சாகத்துடன் வரவுள்ளது. குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கக்கூடிய இந்த நிகழ்ச்சி, தீபாவளி கொண்டாட்டத்தில் இன்னொரு சிறப்பான தருணமாக அமையும்.


மதியம் 12:30 மணிக்கு சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் ஒளிபரப்பாகிறது. சூர்யாவுடன் திரிஷா கிருஷ்ணன், ஆர்.ஜே. பாலாஜி, ஸ்வாசிகா விஜய், நட்டி என பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ள இப்படம் ஆக்‌ஷன், டிராமா, ஃபேண்டஸி எனப் பல சுவாரஸ்யமான அம்சங்களைக் கொண்டுள்ளது. இதில் சூர்யா அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விறுவிறுப்பான காட்சிகள், மிரட்டலான சண்டைகள் என மதியப் பொழுதையே ஒரு பிரம்மாண்ட சினிமா அனுபவமாக மாற்ற ‘கருப்பு’ தயாராக இருக்கிறது.


மாலை 4:00 மணிக்கு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘ZEE தமிழ் குடும்ப விருதுகள் 2026 – பாகம் 3’ ஒளிபரப்பாகிறது. ZEE தமிழ் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த கலைஞர்களைக் கொண்டாடும் இந்த விழா, பல பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சிகள், கலக்கலான நடனங்கள், சுவாரஸ்யமான தருணங்கள் என அமர்க்களப்படுத்தப் போகிறது. ரசிகர்களுக்குப் பிடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் ஒரே மேடையில் ஒன்றாக இணைவதைப் பார்க்கும் வாய்ப்பும் இந்த விழாவில் கிடைக்கவுள்ளது.


இந்தத் தீபாவளிக் கொண்டாட்டத்தின் மிகப்பெரிய ஹைலைட்டாக மாலை 6:00 மணிக்கு ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் உலகத் தொலைக்காட்சி முதல் ஒளிபரப்பு (World Television Premiere) இடம்பெறுகிறது. தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாலிவுட் நடிகர் பாபி தியோல், மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பிரியாமணி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.


எச். வினோத் இயக்கத்தில், அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இந்தப் படம் அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகள், வலுவான கதாபாத்திரங்கள், விறுவிறுப்பான கதை எனப் பல சிறப்பம்சங்களுடன் உருவாகியுள்ளது. விஜய்யின் மாஸ் நடிப்பும், பிரம்மாண்டமான காட்சிகளும் ரசிகர்களுக்கு ஒரு முழுமையான சினிமா விருந்தாக அமையப் போகிறது. திரையரங்கில் படம் பார்க்கும் அனுபவத்தை வீட்டிலிருந்தே குடும்பத்துடன் ரசிக்கும் வகையில், இந்த உலகத் தொலைக்காட்சி முதல் ஒளிபரப்பு தீபாவளி மாலை நேரத்தை இன்னும் ஸ்பெஷலாக்கப் போகிறது.


இப்படி காலை முதல் இரவு வரை பட்டிமன்றம், சிறப்பு நிகழ்ச்சிகள், விருது விழா, சூப்பர் ஹிட் திரைப்படங்கள் என எல்லா வயதினரும் ரசிக்கும் வகையில் இந்தத் தீபாவளிக்கு ஒரு கலக்கலான பொழுதுபோக்கு விருந்தை ZEE தமிழ் தயார் செய்துள்ளது. குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சிரித்து, மகிழ்ந்து, கொண்டாட இந்தத் தீபாவளியை ZEE தமிழுடன் இன்னும் ஸ்பெஷலாக மாற்றிக்கொள்ளுங்கள்!


இந்தத் தீபாவளி தினத்தன்று காலை 9:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை ZEE தமிழில் ஒளிபரப்பாகும் சிறப்பு நிகழ்ச்சிகள், பிரம்மாண்ட திரைப்படங்கள் மற்றும் ‘ZEE தமிழ் குடும்ப விருதுகள் 2026’ நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழுங்கள்!

Comments

Popular posts from this blog

DAC Developers Appoints A.R. Rahman as its Brand Ambassador

ஜெயலலிதா ஜோதிடர் ஜமால் கணிப்பு – 2026 தேர்தலில் ஆட்சி மாற்றமா?

மூத்த நகைச்சுவை கலைஞர்கள் முன்னிலையில் இளம் நடிகரின் உற்சாக பங்கேற்பு